google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சந்தமாமா-ஏன் இப்படி...?

Saturday, March 02, 2013

சந்தமாமா-ஏன் இப்படி...?


சந்தமாமா-

கருணாஸ் நடித்த படம் என்பதால் நகைச்சுவை இருக்கும் நேரம் போகும் என்று நினைத்துப் போனேன் ...நகைச்சுவை இருக்கு ஆனால் சிரிப்புத்தான் வரவில்லை அவருடைய முந்தைய படங்களில் அதிலும் திண்டுக்கல் சாரதி படத்தில் வரும் அழகான மனைவியை அவளுக்குத்  தெரியாமல் சந்தேகத்துடன் வேவு பார்ப்பது ..இதையே இன்னும் எத்தனைப்படத்தில் சொல்வார்கள்

சந்தமாமா படத்தில் கொஞ்சம்  வித்தியாசம்...எழுத்துப்புலி சந்தானகிருஷ்ணன் தான் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற ஆசையில் தன் மனைவியை இன்னொருவருடன் காதலிக்கச் செய்து அதை அருகில் மறைவாக இருந்து  தொடர்கதையாக எழுதி (பெயருக்கு ஏற்ற மாமா வேலை பார்க்கிறார்)..ஏன் இப்படி....? நகைச்சுவை படம் எடுக்கக் கதையா இல்லை ..? இப்படி விரசமாகப் படம் எடுத்து பிரபல எழுத்தாளர்களை அசிங்கப்படுத்தனுமா...?


கருணாஸ் எழுத்தாளராக நிறையப் புத்தகங்களை எழுதி அவைகளை அவரே ஆட்களை வைத்து கடைகளில் வாங்கிக் கொள்ளும் காட்சி ...ஆரம்பத்தில் பதாகைக்குப் பாலாபிசேகம் செய்யும் காட்சி....இதெல்லாம் அப்படியொன்றும் சிரிக்க வைக்கவில்லை ஆயினும் படம் துவக்கத்தில் எதையோ எதிர்பார்க்க வைக்கிறது.


பேன் விற்கும் சேல்ஸ் கேர்ல் ஸ்வேதா பாசு அறிமுகம் கலகலப்பு அவரையே சந்தர்பவசமாகக் கருணாஸ் திருமணம் செய்து கொள்வது எதிர்பார்க்காத நிகழ்வு படம் ஏதோ ஒரு மாற்றத்தை நோக்கிப் போகிறது என்று.....நினைத்தவுடன் ...ஏமாற்றத்தை நோக்கி விரசமாகச்  செல்கிறது...




சில படங்களில் காட்சிகள்தான் விரசமாக வைப்பார்கள் இந்தப் படத்தில் கதையே விரசமாக வைத்துள்ளார்கள் ...ஏன் இப்படி....?

எழுத்துப்புலி சந்தமாமா)கருணாஸ்)எழுதும் கதைகளில் காதல் இல்லையாம் அதனால் அவர் எழுதிய புத்தகங்கள் யாரும் வாங்குவதில்லையாம்...அதனால் அவர் தன் இளவயது அழகான மனைவியை ஒரு பாடகர் காதலிக்கும் போது ..கோபப்படாமல் இவரே தன் மனைவியைக் காதல் செய்யச் சொல்கிறார்..அதை கதையாக எழுதுகிறார்...கடைசியில் காதலனுக்கு உண்மை தெரிய வரும் போது காதலனுடைய நண்பர்கள் கலவரம் செய்ய நினைக்கும் போது..காதலன்-கருணாசை பத்தாவது மாடியில் இருந்து  தள்ளிவிடுகிறார்....கருணாஸ் பிழைத்துக்கொண்டாரா...? திரை அரங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்


























இயக்குனர் ராதாகிருஷ்ணன் இந்தக் கதையில் (கணவனே தன் மனைவியை அடுத்தவரை காதலிக்கச் செய்வதற்கு)சொல்லும் காரணம்.........சிறுவயதில் கருணாஸ் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் அவர் எப்போது வேண்டுமானாலும் சாகலாம் என்ற பரிதாபமாம்....(அச்சச்சோ...சஸ்பென்ஸ் போச்சே...யாரிடமும் சொல்லிப்புடாதீங்க) அவரது தந்தை லட்சலட்சமாகக் கருணாஸ் செலவுக்குக் காசு கொடுப்பது ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அவர் மனைவியும் அவர் மனம் புண்படக்கூடாது என்பதால் அடுத்தவரை அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க காதல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை ...சரி..இது நகைச்சுவை படம்தானே என்று விட்டுவிடலாம்

இப்படி சில படங்கள் வந்தால்தான் நடுவில சில பக்கத்தைக் காணோம் போன்ற படங்களும் கண்ணா..லட்டு திங்க ஆசையா போன்ற படங்களும் சிறப்பாகத் தெரிகிறது...ஒருவகையில் இப்போது வரும் அதிரடி அறுவைத்  திரைப்படங்களை விட ... இப்படிப்பட்ட படங்கள் மேல்...
இசை ஸ்ரீகாந்த் தேவா ...இரண்டு பாடல்கள் கேட்கும்படிஇருக்கு.




யோவ்..பரிதி!..அது சரி சந்தமாமா-ஏன் இப்படி...? என்று இந்தப்பதிவுக்கு ஏன் இப்படி...தலைப்பு..?)
 படபிடிப்புதளத்தில்........கருணாஸ் ஒரு பாடல் காட்சியில் முத்தமிட வருவதாக நினைத்து ஸ்வேதா பாசு கேட்ட கேள்வி இது...ஏன் இப்படி...? அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் இப்படியும் ஒரு படமா? எப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.


............................................பரிதி.முத்துராசன் 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1