தளபதி-அறுபது
ஸ்டாலின் தனது அறுபதாவது பிறந்தநாளை மணிவிழாவாக (01-03 -2013) சென்னை சிறப்பாக கொண்டாடியது...
இப்போதைய பேட்டியால் வந்த பிரச்சனைக்குரிய சூழ்நிலையில்....சிறிது காயம்பட்ட அவரது தொண்டர்களுக்கு அவரது மணிவிழா ஒத்தடம் கொடுத்தது போல்...உற்சாகத்தில் திளைத்தனர் நகரெங்கும் கருத்தரங்கங்கள்...கவியரங்கங்கள்....
1-மிக குறைந்த வயதில்(14) பொதுவாழ்வில் ஈடுபட்டவர் 2-இளம்வயதிலேயே சிறைக்( மிசா) கொடுமையை அனுபவித்தவர்
3- வாக்களிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மாநகரத் தந்தை
4- சிங்காரச் சென்னை(சிங்கப்பூர்மதிரி)கனவு பாதியில் விழிப்பு
5-ஸ்டாலின்-இவர் பிறந்த(1953) வருடமே சோவித் ஒன்றியத்தின் தலைவர் ஸ்டாலின் (Josif Vissarionovič Stalin) இறந்ததால் அவரது நினைவாக வைத்தப்பெயர்.
6-கட்சியில் மூத்த தொண்டர்கள் மீது இவருக்கு என்றும் தனிப் பற்று...பெரியவர்கள் மீது தனி மரியாதை கொண்ட இளைஞர் ...
7-இவர் திமுகவின் கட்சியைக்காக்கும் தளபதி என்று அனைவராலும் அழைக்கப்படுகின்றார்
8-தொண்டர்கள் துவண்டுபோகும் நேரத்தில் ஒபாமா போன்று அவருடைய வீ கேன்(we can) நம்மால் முடியும் எழுச்சி ஊட்டியவர்.
9-கட்சியின் அடுத்த தலைவராக இப்போதைய தலைவரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்
10- நடிகராக இவரது கலையுணர்வு தொலைக்காட்சியில் தீபம் நா.பா.-வின் குறிஞ்சி மலர் நாயகனாக்கியது
11-ஒரே தொகுதியில் நான்குமுறை எம்.எல்.ஏ.-வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது இவருக்கு பெருமை சேர்க்கும்.
12-இந்த தலைமுறை அரசியல்வாதிகளில் பக்குவபட்ட,தலைமைபண்பு கொண்டவர்.
13 ............60 தளபதியை அறிந்துகொள்வோம்!
............................................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |