ஈழவிடுதலை-என்பது இன்று கேள்விக்குறியாக......? உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் இது அரசியல் விளையாட்டாக தெரிகிறது.
ஒவ்வொரு முறையும் ராஜபக்சே இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் இங்குள்ள அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் கருப்புக்கொடி காட்டுவதும் கண்டனம் தெரிவிப்பதும் ....
இப்போதெல்லாம் இது வேடிக்கையாக தெரிகிறது
ஒவ்வொரு முறையும் லண்டனில் உள்ள சேனல்-4 தொலைகாட்சி ஈழ யுத்தத்தின் போது நடந்த கொடூர கொலைகளை தவணை முறையில் புகைப்படமாக காட்டும் போதும் காணொளியாக இன்டர்நெட்டில் வரும்போதும்...இங்கே இருக்கும் அரசியல் கட்சிகள் ஒப்பாரிவைப்பதும் நீலிக்கண்ணீர் வடிப்பதும்........................
இப்போதெல்லாம் இது வேதனையாகத் தெரிகிறது.
இன்னும் ஒருபடி மேலேப் போய் இங்கே இருப்பவர்கள் ஐ.நா.சபை வரை கத்துவதும் ....
இன்னும் சிலர் ஐ.நா.சபையின் கதவைத் தட்டுவதும் காலிங் பெல்லை அமுக்கிவிட்டு ஓடிவருவதும்......
என்னதான் முடிவு என்று எவருக்கும் தெரியவில்லை ஆனால்
ஒன்றுமட்டும் நிச்சயமாக தெரிகிறது .....
சினிமா நடிகர்களை விட தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் சிறந்த நடிகர்கள் இப்பாவிகளின் நாடகம் தெரியாமல் பாவம்....இலங்கையிலும் இங்கேயும் உள்ள சில அப்பாவிகள்....ஏதோ கனவில் மிதந்துகொண்டிருக்கிரார்கள் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஈழ விடுதலைக்கு ஆவணம் செய்கிறார்கள் என்று.
எனவே இந்தக் கருத்துக்கணிப்பு.....
அனைவரும் வாக்களித்து உண்மையை உலகுக்கு தெரியப்படுத்துங்கள்
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்குவந்தால் தமிழின் மீட்சி நல்ஆட்சி ஈழவிடுதலை ஆகியவை சாத்தியமாகும்....?
முடிவு-10-03-2013 ...வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி
....................................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |