7 பூனைக்குட்டிகள்-
டும்..டும்..டும்...
பொதுமக்களுக்கு
இதனால் அறிவிப்பது ....
இங்குப் புலிக்குட்டிகளுக்குத்தான்
பெயர் வைக்கப்படும்....
(என்னத்தச் சொல்றது....?)
உங்கள் வீட்டு பூனைக்குட்டிகளை
யாரும் தூக்கிக் கொண்டு வராதீர்கள்... டும்..டும்..டும்...
*************************************************
அவன்-இவன்
அன்புள்ள பிரதமர் அய்யா!
அவன் (இலங்கை)
நிறைய மீனவர்களை
கொன்றிருக்கிறான்
கொன்று கொண்டிருக்கிறான்...
அவனையெல்லாம் அழைத்து
பிரியாணி போடுகிறீர்கள்
திருப்பதி லட்டு கொடுக்கிறீர்கள்..
(என்னத்தச் சொல்றது....?)
இரண்டு பேரைத்தானே
நாங்கள்கொன்றோம்
இதற்குப் போய்....
இப்படி அலட்டிக்கிறீர்களே!
இப்படிக்கு.....இவன்(இத்தாலி)
************************************************
போராட்டம்
பத்து பேர் வந்தார்கள்
சாலை நடுவில் நின்றார்கள்..
வாகனங்களை மறித்தார்கள்
புகைப்படம் எடுத்தார்கள்
போனார்கள் கலைந்து....
(என்னத்தச் சொல்றது....?)
கலையில் செய்தி......
மிகப்பெரிய போராட்டம்
சாலை மறியல்...வெற்றி.?
*************************************************
பாலியல் வன்கொடுமை
இப்படியே
இங்கே ஆழ்கடலுக்குள்
இருந்துவிடுகிறேன்
(என்னத்தச் சொல்றது....?)
இவர்களிடம் இல்லையாம்
பாலியல் வன்கொடுமை.
**************************************************
அழகிய தேவதை-
அர்த்த ராத்திரியில்
அடர்ந்த காட்டுக்குள்
அந்த தேவதை
அழைத்துச் சென்றாள்....
அதன் பெயர் சொர்க்கமாம்.
(என்னத்தச் சொல்றது....?)
கலைந்தது கனவு.
.........................பரிதி.முத்துராசன்
thanks-YouTube-MadePossibl
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |