google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பரதேசி-சினிமா விமர்சனம்

Saturday, March 16, 2013

பரதேசி-சினிமா விமர்சனம்


பாலாவின் பரதேசி-
படத்துக்கு வைக்கும் பெயரிலேயே கதையின் தீவிரத்தன்மையையும்  எதிர்பார்ப்பையும்  பிரதிபலிக்கச் செய்யும் இயக்குனர் பாலா ஒருவரே.... நான் கடவுள் என்று இவர் சொல்வது யாரை?என்றும்   யார் இந்தப் பிதாமகன்...? என்று தூண்டும் ஆவலும் அவன்-இவன் என்று ஏக மரியாதை யாருக்கு? என்ற எதிர்பார்ப்பும்....இப்போது யார் இந்த (இழிசொல்)பரதேசி...?என்று அறிந்திடும் ஆர்வத்தையும் உருவாக்குவார்.























பால் ஹாரிஸ் டேனியலின்  ஆங்கில நாவல் ரெட் டீ (Red Tea)-யின் மொழிபெயர்ப்பான (தமிழ்) எரியும் பனிக்காடு (மலையாளம்) எரியும் தணல் நாவலில் விவரிக்கப்பட்ட சுதந்திர காலத்துக்கு முந்திய இந்தியாவின் தேயிலை தோட்ட அடிமை தொழிலாளர்கள் உண்மை வாழ்க்கைக்கதை என்றாலும் பாலாவின் சுயமானத்தன்மை (ORIGINALITY) நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் படம் பார்க்க சென்ற எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை 

இவை எல்லாவற்றையும் விட இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த 'பரதேசி' திரைப்பட உருவாக்கம் டீஸரில் பாலா தனது பட நடிகர்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் உண்டாக்கிய தாக்கம் சினிமா விமர்சனர்களைத் திகைப்படையச் செய்தது...... 


எடிட்டர் பிரவீன்,இயக்குனர் பாலாஜி மோகன்,மற்றும் உதயநிதி ஸ்டாலின்..போன்றவர்களால் ஜீரணிக்கமுடியாத அபத்தமாகக் கருதப்பட்டது.ஆனால் இதுவே படத்தின் தன்மையை ஓரளவுக்குத் தீர்மானிக்கச் செய்தது.இது பரதேசி படத்துக்குச் சாதகமா..? பாதகமா...? படம் பார்க்கும் போது தெரிந்தது....கதாபாத்திரங்களுக்கு யதார்த்த தன்மையை வலுவூட்ட பாலா எடுத்துள்ள அடாவடி அதிரடி நடவடிக்கை...

பரதேசி படத்தின் கதைக்களம் கிராமம் .மற்றும் மலைசார்ந்த தேயிலை எஸ்டேட்...படம் சாலூர் கிராம மக்களின் வறுமையும் அதை மறைத்துக்கொண்டு அவர்கள் சந்தோசமாக வாழும் நிலையை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..

அதே நேரத்தில் கொத்தடிமைகளாகத் தேயிலைத் தோட்டங்களில் அவர்கள் வேலைக்குச் சென்று இருந்த கொஞ்சம் சந்தோசத்தையும் இழந்துவிடும் சோகக்கதையைச் சொல்லி கண்ணீர் முட்டச் செய்கிறது..கதை முடிவில்லாத முடிவு.

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பது போன்ற கதைகாலத்தில் கதை வசனம் திருநெல்வேலி மொழி ஸ்லாங்...?அதேநேரம் வசனங்களில் உயிரோட்டமின்றி  எல..எலேய்..குஞ்சு..புடுக்கு..இது போன்ற வார்த்தைகள் மட்டுமே கதையை யதார்த்தமாக்காது.வார்த்தைகள் நாற்றம் எடுக்கக்கூடாது...
   
அதர்வா முரளியின் நடிப்பு உருவ அமைப்பு கதாபாத்திரத்துக்கு ஏற்ப..படம் ஆரம்பமே ஓட்டுபொறுக்கி என்ற பட்டப் பெயரில் ராசாவாக ஊரில் தண்டரா போட்டுப் பிச்சை எடுத்தாலும் சந்தோசமாக வாழ்வதும்..எஸ்டேட்டில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு குமுறி அழுவதிலும் கால் நரம்பு துண்டிக்கப்பட நிலையிலும் வேலை செய்வதும் கடைசியில் தன் மனைவியே தன் குழந்தையுடன் தோட்டவேலைக்கு வருவதைக் கண்டு அழுது தரையில் உருண்டு பிரளுவதும்..நடிப்பில் இயல்பு தெரிகிறது... 

அங்கமாவாக வேதிகாவின் பாத்திரம் அதர்வாவை காதலிப்பதும் தாயார் எதிர்ப்பை மீறி குழந்தை பெற்றுக்கொள்வதும் கொஞ்சமே என்றாலும் சிறப்பாக உள்ளது.(அவ்வப்போது அவருக்குக் கிராமத்துப் பெண்ணாகப் போடப்பட்ட கருப்புச்சாயம் செயற்கையாகத் தெரிகிறது)  

இன்னும் நிறையக் கதாப்பாத்திரங்கள் கதைக்கு உயிரோட்டமாக வருகின்றார்கள் மரகதமாக ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக நடித்துள்ள தன்சிகா உதவியற்ற பரிதாபத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ஊரில் யாருக்காவது வசதியானவர்கள் வீட்டுத் திருமணம் என்றால்தான் நெல்லுசோறு கிடைக்கும் என்ற ஊர் மக்கள் நிலையும்  விருந்துக்கு முன்பு பெரியவர் ஒருவர் இறந்துபோனதால் எங்கே அதுவும் இல்லாமல் போயிடும் என்று அவர் பிணத்தை மறைக்கும் பரிதவிப்பும் படத்தின் நிதர்சனத்தைக் காட்சிப்படுத்தியுள்ள விதம் அருமை.


மேலும் கங்காணியின் பித்தலாட்டங்களும்  எஸ்டேட்டில் போலி டாக்டர் செய்யும் அரைவேக்காடு வைத்தியங்களும் சாமியாடியின் சித்து வேலைகளும் அல்லேலுயா டாக்டரின் வைத்தியத்தைவிட ஏசப்பாவின் மதம் பரப்பும் காட்சிகளும் கதையின் சோகத்திற்குள் இழையோடும் நகைச்சுவை...படத்தின் தீவிரத்தன்மையை சிதைக்காமல் கதையின் தன்மைக்கு ஒத்து ஊதுகின்றன


ஜி.வி.பிரகாஸ் இசை பாடல்களில் சிறப்பாக அதே நேரம் அனைத்தும் கதையோட்டத்தோடு ஒப்பாரியாக இருக்கிறது.பின்னனி இசை சில நேரங்களில் மகிழ்சி..சிலநேரங்களில் தளர்ச்சி ..நிறைய நேரங்களில் அலர்ச்சி...இல்லை அனுபவ முதிர்ச்சி....பாடல்கள் படக்காட்சிகளுக்கு எழுதப்பட்டதால் இந்த நிலையா...? ஆனால்,வைரமுத்து வார்த்தைகளில் நெஞ்சை வருடும் வீரியமும் இருக்கிறது விவேகமும் இருக்கிறது.

கதையின் காலகட்டத்துக்கு (1930) காட்சிகள் அமைக்கச் செழியனின் ஒளிப்பதிவு நிறையச் சிரத்தை எடுத்துள்ளது.ஊர்மக்கள் தேயிலை தோட்டத்துக்குக் கூட்டமாகப் புறப்பட்டும் செல்லும் காட்சிகள்...அதர்வா இரவில் தப்பித்துச் செல்லும் காட்சி....தினமும் அதிகாலையில் வேலைக்குப் புறப்பட்டும் காட்சி...இடைவேளைக்கு முன்பு வரும் மரணத்தின் விழிம்பில் உதவிகேட்கும் கை... இப்படி நிறையச் சொல்லலாம். 

பரதேசி-கலை கலைக்காகவே கலை மக்களுக்காகவே என்று இருவேறு சிந்தனைகளில் இயக்குனர் பாலா எதுவும் தனித்தன்மையுடன் இல்லாமல் இரண்டையும் குழப்பி...வடித்த ஸ்ட்ராங் தேநீர் கசாயம்..சுவை குடிப்பவர் ரசனையைப் பொறுத்தது...

இதற்கு முந்தயப் பாலாவின் சேது,நந்தா,பிதாமகன்..போன்ற படங்கள் நடிகர்கள் விக்ரம்,சூர்யா...போன்றவர்களின் அபரீத நடிப்பும் இவரது சிந்தனைகளும் வெற்றிதந்தன....பரதேசியைப் பொருத்த அளவில் வெற்றி பெற்றால் அது பாலாவையே சேரும்.. தோல்வியானால்...? அது பாலாவைச் சேராது ஏன்..? என்றால்...இது பாலாவின் கதையல்ல..பழைய பஞ்சாங்கம்...ஓட்ட காலணா காலத்து கதை இன்றைய காலக்கட்டங்களில் எவ்வளவோ சமுக அவலங்கள் இருக்கும் போது இதைத் தேர்வு செய்தது பாலவைத்தான் கேட்கவேண்டும்  

சமீப காலங்களில் ஆஸ்கார் விருது பெரும் படங்கள் நிறைய நாவல் தழுவல்களே அந்த வகையில் பரதேசி-ஒரு நல்ல நாவலை படித்த உணர்வு... உலகளவில் ஆஸ்கார் விருதுகளை நோக்கிச் செல்லும் படைப்பு..பரதேசியில் பாலாவின் பார்வை தேசிய விருதுகளைத்தாண்டி நீண்டு செல்கிறது....வாழ்த்துவோம்....

இன்றைய காலக்கட்டத்தில் நிறைய தமிழ் சினிமாக்கள் விரசமாகவும் நாராசமாகவும் வரும் நிலையில் பாலாவின் பரதேசி...வித்தியாசமான திரைப்படம் சினிமாத்தனங்கள் இல்லாத சினிமா...பாலாவின் தெருக்கூத்து....யதார்த்தமான வீதி நாடகம்
























சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் நடந்த கதை ஆயினும் இன்று சுதந்திரத்திற்குப் பிறகும் இன்றைய காலக்கட்டத்தில் நிறையபேர் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.......


Parithi Muthurasan's Slidely from Parithi Muthurasan on Slide.ly.


எனவே...பரதேசி திரைப்படம் பரதேசிகள் மட்டுமல்ல அனைவரும் பார்க்க வேண்டிய படம் .




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1