google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இளையராஜா-வாங்க இசை பாடலாம்!

Thursday, March 14, 2013

இளையராஜா-வாங்க இசை பாடலாம்!


இளையராஜா-
இசைஞானி என்றும் ....இசைதேவன் என்றும் அழைக்கப்படும் பண்ணைபுரத்து ஞானதேசிகன் என்ற ராசையாவான  இவர் இசை உலகில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் இசைவேந்தராகப் பவனிவந்தாலும் என்றும் இசையுலகின் இளையராஜா...இவரே! 


























தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி போன்ற இந்திய திரைப்படத் துறைகளில், ஒர் இந்திய திரைப்பட இசையமைப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக... இவரது இசை காலத்தை வென்று வரலாற்றில் மிதந்துவருகிறது....வெற்றியைச் சுமந்து வருகிறது. 

வழக்கமான மேற்கத்திய இசையிலிருந்து மாறுபட்ட கோணத்தில் கிராமத்திய இசையில் இவரது மச்சானைப் பார்த்திங்களா...? பாடலுக்கு  இவரது எளிமையான உணர்வுபூர்வமான இசை இவருக்கு உடனடி வெற்றித் தந்ததல்லாமல் இசையுலகில் நிலையான இடத்தையும் தந்தது....செந்தூரப்பூவே...என் மன்னன் எங்கே...? என்ற பாடலுக்கு இவரது இசை ஏக்கம் நிறைந்த இளம்பெண்ணின் உணர்வை  தெளிந்த இசை நீரோடையாகப் பிரதிபலித்தது...செந்தாழம்பூவில்...பாடலுக்கு இவரது இசை இனிய தென்றலின் தாலாட்டாக......    

இவரது பாடல்களும் பின்னணி இசையும் பல படங்களின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது. இவர் திரை இசைக்கு உணர்ச்சி ஊட்டியவர் ஓவியனின் தூரிகைகள் போன்று இசைக்கருவிகள் இவர் கைகளில் பல வண்ணங்களில் இசை ஓவியத்தை வரைந்தது...இதற்கு முன்பு இசையைக் கேட்டு உணரச் செய்தவர்கள் உண்டு....இசையைக் கண்டு உணரச் செய்தவர் இவர் மட்டுமே!

இவர் ஒர் இசைச்சிற்பி....இவரது ஒவ்வொரு திரைப்பாடல் இசையும் கைதேர்ந்த சிற்பி செதுக்கிய பல்வேறு சிற்பங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளின் வெளிப்பாடுகள்...காதல் இவரிடம் என்னைக் கொஞ்சம் பாடு என்று கையேந்தி நின்றது...கவிதை இவரது அரவணைப்பில் மெய்மறந்து கிடந்தது...வார்த்தைகள் இவரது ஆர்மோனியப் பெட்டிக்குள் அசைவற்றுக் கிடந்தன... சில சிரிக்க வைக்கும் ..சில அழவைக்கும்...சில சிந்திக்க வைக்கும்...ஒரு தாயின் தாலாட்டை இவரது இசையில் உணரலாம்...துயிலலாம்....
      
































இசையே தன் காதல்-உணவு-இயக்கம் என்று என்றோ பாடினான் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற காவியக் கவிஞன்.இசை இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்றான் பிரெடெரிக் நீட்ஷே என்ற ஜேர்மன் கவிஞன் இசை என்பது மக்கள் உணர்வோடு சம்பந்தப்பட்டதால் இசைக்கு உலகை மாற்றும் வல்லமை உள்ளது என்றார் பாடகர் போனா.


இந்திய பாராம்பரிய இசையை..தமிழர்களின் கிராமப்புற உணர்வுகளைத் திரைப்படங்களின் கதைக்கருவுக்கு உயிருட்டிய இசைத்தாய் இவரின்றி எவருண்டு இங்கே....?

இதற்குமேலும் இவரைப்பற்றி இசைபாட என்ன தகுதி எனக்கு உண்டு...?

இளைய ராஜாவின் ஆத்திச்சூடி

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1