தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்றும் சுமுகவிரோதிகள்தான் மதுவிலக்கு வேண்டும் என்கிறார்கள் என்றும்
சமூக விரோதிகளுக்குச் சென்று கொண்டிருந்த மது வருவாயை அரசின் கஜானாவிற்குக் கொண்டு வரவே டாஸ்மாக் மூலம் மது விற்பனை தொடங்கப்பட்டது என்றும்.... மதுவிலக்கு மற்றும்
ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் நாற்றம் (யோவ்..அது நாற்றம் அல்ல நத்தம் .கணணியை பார்த்து தட்டு இல்லனா உன்னையும் இரண்டு தட்டு தட்ட வேண்டியிருக்கும்) சாரி...நத்தம் விஸ்வநாதன் பேசினார்.....
அவர் பேச்சைக் கேட்டு நாட்டின் மீது பற்று கொண்ட நமது சிறப்பு 'குடி'மகன் மண்ணாங்கட்டியும் இப்படி சில அய்டியாக்களை வாரி வழங்கினார்.....
அய்டியா-1 (நல்ல சரக்கு)
இதற்குமுன்பு சமுக விரோதிகள் ஹார்ட்வேர்ஸ் கடைகளில் தின்னர், வார்னிஷ் வாங்கி அதனுடன் நீர்கலந்து விற்றும்..கள்ளச் சாராயம் என்ற பெயரில் சல்பைட் பவுடர்,பேட்டரி மருந்து கலந்து காய்ச்சியதை விற்றும் (கலவைக்கோளாறில்) நிறையப் பேர் இறந்தார்கள்...
சமுக விரோதிகளால் இப்படி யாரும் துடிதுடித்துச் சாகக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் நமது அரசாங்கமே டாஸ்மாக் கடைகளில் வைத்து நல்ல சரக்கு விற்கிறது...குடி'மக்களே உங்களுக்கு நல்ல சாவு கேரண்டிஎன்று அரசு உருதியளிப்பதாய் புட்டிகளில் லேபில் ஓட்டலாம் (எப்படி நம்ம அய்டியா...?)
அய்டியா-2(விளம்பர பதாகை)
சமுக விரோதிகள்தான் மதுவிலக்கை அமுல் படித்த சொல்கின்றார்கள் திண்டுக்கல் பூட்டோடு அலையும் அய்யாமார்களே...நீங்கள் நியான்மார்களாக இருந்தால் அப்படியே ஓடிவிடுங்கள் மறுபடியும் பூட்டோடு வந்தால் புழலில் உங்களைப் போட்டு பூட்டவேண்டியது வரும்
உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்த சசி பெருமாள் நாடாரே...நீங்கள் மறுபடியும் உண்ணாமல் கிடந்தால் உங்களுக்கு குளுகோஸ்க்கு பதில் இரண்டுபுட்டி பீர் ஏற்றப்படும்
நாங்கள்தான் குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு என்று டாஸ்மாக் விளம்பரப் பலகையில் ஓரமாக எழுதி வைத்து இருக்கிறோம் அது தெரியவில்லையா உங்களுக்கு..? வேண்டுமெனில் இனி பேருந்துகளிலும் திருக்குறள் போல் எழுதிவைக்கிறோம் (எப்படி நம்ம அய்டியா...?)
அய்டியா-3( டோர் டெலிவரி)
இந்தியாவில் குஜாரத் தவிர அனைத்து நாடுகளிலும் மது விற்பனை நேரிடையாக நடக்கிறது ..குஜாரத்தில் பிஸா டெலிவரி செய்வதுபோல்.... போன்செய்தால் போதும் வீடு தேடி வரும் மதுப்புட்டிகள் என்று மறைமுகமாக கல்லாக் கட்டுகிறார்கள்..இங்கேயும் அது போல் டோர் டெலிவரி குடுத்தால் நிறைய பேருக்கு வேலை கொடுத்தது போல் இருக்கும்(எப்படி நம்ம அய்டியா...?)
அய்டியா-4 (டோபக்கோமாக்)
இப்போது புகை பிடிப்பவர்கள்தான் நாட்டில் அதிகம் இருகிறார்கள் இப்போது சென்னையில் நாகரீகமாகப் பெண்களும் புகைப்பதாகத் தெரியவந்துள்ளது.இனி சிகரெட்,பீடி,குட்கா...போன்றவைகளையும் அரசே குறைந்த விலையில் தரமான வெளிநாட்டுச் சிகரெட்டுகள் டாஸ்மாக் கடைகள் போன்று டோபக்கோமாக் கடைவைக்கலாமே...? (எப்படி நம்ம அய்டியா...?)
அய்டியா-5(பாம்பு மது புட்டிகள்)
மேலும் இப்போது குடிகாரர்களைவிடக் குடிகாரிகள்தான் நாட்டில் அதிகம் வெளியே தெரியாமல் எத்தனையோ விஷயங்கள் இருப்பது போல் இதுவும் இருக்கு இப்படித்தான் நேற்று பூந்தமல்லி அருகில்
மதுவில் விஷம் கலந்து குடித்து தாய் தற்கொலை மீதமிருந்ததைக் குடித்த மகனும் பலியானான் என்று இந்த நாரவாய் நாளிதழ்கள் செய்தி போடுகின்றன இப்படி விஷத்தை சரியான முறையில் கலக்கத் தெரியாதவர்களுக்காக....
சீனா,ஜப்பான்...நாடுகளில் இப்போதெல்லாம் மதுப்புட்டிகளுக்குள் கொடிய விஷம் கொண்ட தேள், பாம்புகள் ஊற வைத்து விற்பனை செய்கிறார்கள் ..
அதை அருந்தினால் போதை எப்போது தீரும் என்று யாருக்கும் தெரியாது சுடுகாட்டில் கொண்டு புதைத்தாலும் போதை தெளியாது. அவைகளையும் நாம் டாஸ்மாக்கில் விற்றால் விற்பனை அளவுகோல் எவரெஸ்ட் சிகரத்தை தொடும் (எப்படி நம்ம அய்டியா...?)
அய்டியா-6(குடிதானம்)
இன்னும் நிறைய சொல்லத் தோனுகிறது...அட..போடா புண்ணாக்கு என்று நீங்கள் திட்டுவது காதில் விழுவதால் எனது மாபெரும் வீர உரையை இத்துடன் முடித்துக்கொண்டு அரசுக்கு நானும் என்னால் முடிந்த உதவியாக ஒரு குவார்டரோ கட்டிங்கோ வாங்கி....நீங்களும் அரசுக்கு உதவ.... அரசு திவாலாவதை காப்பாற்ற..(தவறாக நினைக்காதீர்கள்... உங்களை குடிக்கச் சொல்லவில்லை) குடிதானம் பண்ணுங்கள் உங்களுக்கு நிறைய புண்ணியங்கள் வந்து சேரும் அரசையும் திவாலா ஆகாமல் காப்பாற்ற முடியும்...(எப்படி நம்ம அய்டியா...?)
(யோவ்..மண்ணாங்கட்டி சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி போல...இப்படி எதையாவது உளறி அதுவும் அமைச்சர் காதில் விழுந்து நாளைக்கே உன் அய்டியாக்களை அமுல் படுத்திடப் போகிறார்...அடுத்த வருடம் தேவதாஸ் விருது உனக்குத்தான்...ஹா..ஹா...)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |