திமுக தலைவர் கலைஞர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகிய அடுத்த நாளே திமுக பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. நடத்திய சோதனையும் அது தங்களுக்குத் தெரியாமல் நடந்ததாகப் பிரதமர்,சோனியா,சிதம்பரம்,நாரயனசாமி போன்ற மேல்மட்ட பெரிய தலைவர்கள் முதல் கீழ்மட்ட தலைவர்கள் சைதை சொர்ணக்கா வரை அனைவரும் எனக்குத் தெரியாது என்று மறுப்பதும் ....
கலைஞரோ அரசியல் காழ்புணர்வாக இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று பாடாதக் குறையாக...ஆக மொத்தத்தில் இவர்கள் கூட்டணி
பனைமரத்து நிழல் நிலையாக நிற்காது அதை நம்பி படுத்தவன் கதை படு மோசம்தான் என்று கிராமத்து பழைய பேச்சுபோல...
இங்கே இவர்களின் அரசியல் தெரியாத அப்பாவி தமிழன் ஒரு ரூபாய் இட்லி அம்பது தின்னுவிட்டு அப்படியே ஓரமாய்க் கிடந்தவன் வரை ஒன்றும் புரியாமல் விழி பிதுங்கி...இன்னும் நிறைய யோசனை செய்தவர்கள் டாஸ்மாக்கே கதி என்று போய்விட்டார்கள் இன்னும் சிலரைக் கீழ்பாக்கத்தில் கண்டதாக செய்தி...
ஈழப்போர் உச்சகட்டமாக நடந்த போதும் காங்கிரசாரை நம்பி மோசம் போனதாகப் புலம்பினாலும் அவர்களை விட்டு விலகாதவர் ..
(அன்று அவர் விலகியிருந்தால் இன்றும் இருப்பார் அவரே தமிழக முதல்வராக ஆனால் அவரும் அவர் குடும்பத்தினரும் இன்னொரு மிசாவை சந்தித்து இருப்பார்கள்)..
இன்று உப்புசப்பிலாத அமெரிக்கத் தீர்மானம் ...அதற்குப் போய் ஆதரவை விலக்கிக் கொண்டது அவர் காலம் தாழ்ந்து எடுத்த முடிவு என்று எல்லோரும் அறிந்ததே
இந்த நேரத்தில் சிபிஐ சோதனை என்பது அவரை மத்திய அரசு மிரட்டும் செயலா...? அப்படியே மிரட்டினாலும் கலைஞரோ ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெளியேறி உள்ளார்...தமிழக மக்களுக்குக் காங்கிரஸ் மீது இன்னும் அதிக வெறுப்பு வராதா...?
மத்திய அரசின் பிரதமருக்கு கூடத் தெரியாமல் சோதனை நடந்ததாகச் சொல்வது கலைஞரே சிபிஐ-க்கு தகவல் கொடுத்து வாங்க அய்யாமார்களே!..எங்க வீட்ட சோதனை போடுங்கள் என்று அழைத்தாரா....?
ஆனால்...ஓன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது...
அன்று இது போல் அம்மா அரசு கலைஞரிடம் அதிரடி விளையாட்டுகள் காட்டி அவர் போட்ட கூப்ப்ப்ப்பப்ப்ப்பாட்டில் மக்களுக்கெல்லாம் அவர் மீது இறக்கம் வந்து மீண்டும் கோட்டையில் அமர்ந்தார்....
இன்று ஸ்டாலின் மீது காங்கிரஸ் காட்டும் விளையாட்டு யானை தன் தலையில் மண் அள்ளிபோட்ட கதைதான்..இப்போது அவர் மீது மக்களுக்கு மரியாதை வந்ததோ இல்லையோ தெரியாது காங்கிரஸ் மீது அதிருப்தியும் அன்று அவர்கள் 2G-3G என்று எதையோ சொல்லி அவரது மகளையும் இணைத்துத் திகாரில் போட்டது இது போன்ற அதிரடி சித்து விளையாட்டோ...?என்று அரசியல் தெரிந்தவருக்கும் என்னைப் போன்று தெரியாதவர்களுக்கும் சந்தேகம் வந்துள்ளது....
இல்லை நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல் அழுகிறேன் அப்புறம் தேர்தல் நேரத்தில் அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்திர நண்பர்களும் இல்லை என்று உங்கள் பழையப் பஞ்சாங்கத்தை படித்து விட்டு மீண்டும் கூட்டணி சிங்கி தட்டுவீர்களா...?
மக்கள் ஏமாளிகள் அல்ல..நீங்கள் எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு தலையாட்டி பொம்மைகள் போல் தலையைத்தான் ஆட்டுவார்கள் ..ஆனால் ஓட்டுப் பொத்தானை அமுக்கும் போது மட்டும் சரியாகத்தான் அழுத்துவார்கள்...
நீங்கள் கொடுத்த தொலைகாட்சி பெட்டிகளை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு உங்களுக்கே தொல்லையாக மாறவில்லையா...?உங்களுக்கே படம் காட்ட வில்லையா....?
நீங்கள் இலவசமாகக் கட்டி கொடுத்த வீடுகளில் காலாட்டிக்கொண்டு இருந்து விட்டு உங்களுக்கு எதிராக வாலாட்ட வில்லையா?
இப்போது கூட இலவச (தப்புத் தப்பு) விலையில்லாத அரிசியிலும் மலிவு விலை சாம்பார் சாதமும் ஒரு ரூபாய் இட்லியும் தின்று விட்டு...எந்த நேரத்தில் என்ன செய்வார்களோ..? அந்த ஆண்டவன் இருந்தால் அவனுக்கே தெரியாது...
மக்கள் உங்கள் அல்லக்கை கட்சித் தொண்டர்கள் அல்ல
அரசியல்வாதிகள் நல்லவர்களாக இருக்கும் வரையிலே மக்களும் நல்லவர்களாக இருப்பார்கள்..இல்லையேல் தேர்தல் வரும்போது மக்கள் மோசமானவர்களாக மாறி படு மோசமானவர்களைத் தண்டிப்பார்கள்..உங்கள் அல்லக்கைகளும் மக்களுக்கு உடந்தையாவார்கள்.....
இந்த சோதனையோடு உங்கள் சித்து விளையாட்டுகளை நிறுத்தாவிடில் இன்னும் தொடர்ந்தால் எப்படி விஸ்வரூபம் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற தமிழ் நாட்டில் அதற்கு ஏற்படுத்திய தடையும் கமல்ஹாசனுக்கு உண்டான மன உளைச்சலும் காரணமோ அது போன்று..... மக்களுக்கு தளபதி ஸ்டாலின் மேல் நம்பிக்கை அதீதப் படுத்தி அடுத்த தேர்தலில் அவர் முதல்வர் ஆவதற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள்....சிலநேரம் மக்கள் மாபெரும் நடிகர்கள்...தீயை விட மோசமானவர்கள்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |