google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கேட்கமறந்த கேள்விகள்...?

Wednesday, March 20, 2013

கேட்கமறந்த கேள்விகள்...?


அன்னை அவளிடம் கேட்க மறந்தேன்
எனக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகும்



 
 




















இன்னும் ஏன் என்னைக் குழந்தையாகவே
கொஞ்சுகிறாய் என்று....?

தந்தையிடம் கேட்க மறந்தேன்
இன்று நானொரு குழந்தைக்குத் தந்தை....


 
 





















இன்னும் ஏன் நீ என்னை
கைத்தடியாய்த் தாங்குகிறாய் என்று......?

 






இன்னும் காதலிக்கும் காதலியிடம்
கேட்க மறந்துவிட்டேன்...

எப்போதுதான் நம் காதல்
நிறைவு பெறும் என்று.....?



 





 















அன்புத்தொல்லை தரும் 
அருமை மனைவியிடம்
 கேட்க மறந்தேன்......
இறக்கும் வரை
இப்படித்தான் இருப்பாயா என்று....?

பெற்ற பிள்ளைகளிடம்
கேட்க மறந்தேன்..........
எப்போதுதான் என்னை உங்கள்
தந்தையாக நேசிப்பீர்கள் என்று....?

அங்கே வந்த அரசியல்வாதியிடம்
அதுவும் கேட்க மறந்தேன்.....
எப்போதுதான் நீங்கள்
மக்களுக்கு உதவும் மாமனிதர் ஆவீர் என்று...?

அங்கே வந்த மதவாதியிடம்
அதுவும் கேட்க மறந்தேன்...
எப்போதுதான் நீங்கள்
மனிதர்களாக மாறுவீர்கள் என்று....?

அங்கே வந்த கவிஞரிடம்
அதுவும் கேட்க மறந்தேன்
எப்போதுதான் நீங்கள்
காதலைப் பாடுவதை நிறுத்திவிட்டு
மனிதர்களைப் பாடுவீர்கள் என்று....?

 

கடைசியில்...
என்னையே கேட்க மறந்தேன்
ஏன் இப்படிக் கிறுக்கனாய் மாறி
எதையாவது கவிதையென்று
கிறுக்கிக் கொண்டு......என்று?

..................பரிதி.முத்துராசன்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1