google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வத்திக்குச்சி-சினிமா விமர்சனம்

Wednesday, March 20, 2013

வத்திக்குச்சி-சினிமா விமர்சனம்


வத்திக்குச்சி-
இருபது ஆண்டுகளுக்கு   மேல் இணைஇயக்குனராக இருந்த தூத்துக்குடி கின்ஸ்லின்(Kinslin) இன்று வத்திக்குச்சி இயக்குரனாக  அழைக்கக் காரணமாக இருந்த அதிரடி திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மிகவும் பாராட்டப்படவேண்டும் 

ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபனே கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் திரைக்கதையில் அவரும் சிரமம் மேற்கொண்டு நல்ல ஓட்டுனர் பயிற்சியாளராகப் பினால் இருந்து செயல்பட்ட விதம் இயக்குனர் தடுமாறும்போதேல்லாம்
படத்தின் ஓட்டத்தைச் சீராகக்  கொண்டுசெல்வதில் தெரிகிறது....

கதை பெரிதாக இல்லைஎன்றாலும் ஒரு திகில் படத்துக்கு உள்ள அம்சங்களுடன்...தன்னைக் கொல்லவரும் மூன்று சமுக விரோதிகளிடம் இருந்து  கதாநாயகன் எப்படித் தப்பிக்கிறார் என்பதே கதை   


படம் ஆரம்பமே அம்பத்தூர் எஸ்டேட்டில் சாலையில் ஒருவர் உயிருக்கு போராடும் போது கடந்து செல்லும் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஜெகன் கூட்டாளிகள்... 
பல்லாவரத்தில் மோட்டையே வெறித்துக்கொண்டிருக்கும் கொலை கொள்ளை தாதாவாகச் சம்பத்ராஜ்......
 மூன்றவதாகப் பழிவாங்க நினைக்கும் சேட்டாக ஜெயபிரகாஸ்...ஆக இவர்கள் கொல்ல நினைப்பது யாரை...? என்று படத்துக்கு  எதிர்பார்ப்பை உருவாக்கி...இது நகர்ப்புற திகில் படம்தான் என்பதைச் சரியாகச் சொல்கிறது....


தலீபன் புதுமுகம் என்றாலும் அது தெரியாதவண்ணம் அதிலும் சண்டைக்காட்சிகளில் அதிரடியாக வெளுத்து வாங்குகிறார் காதல் காட்சிகள் அதிகம் இல்லாவிடிலும் அதில் அவர் நடிப்பு பெரிதாகச் சொல்வதற்கில்லை ஷேர் ஆட்டோஓட்டுனராக அதற்கேற்ற முகம் உடல் அமைப்பு ..ஆனால் இன்றைக்கு இப்படியும் ஆட்டோ ஓட்டுனர்கள் இவரைப்போன்று இருப்பார்களா...? சந்தேகமே! தமிழ் திரையுலகுக்குக் கிடைத்த அதிரடி நடிகர்களில் ஒருவராக வரிசையில் சேர்ந்துவிட்டார்..



























கதாநாயகி அஞ்சலி....உடம்பில் நல்ல வளர்ச்சி...நடிப்பில் ஏனோ தானோ என்று அதுதான் தெரியவில்லை நடிப்பதற்குச் சந்தர்ப்பம் இல்லாமல் திலீபனும் வில்லன் கூட்டத்தினரும் கதையை ஷேர் பண்ணிக்கொண்டதால் ...படத்தில் இவர் ஷேர் ஆட்டோவில் பயணிப்பதை தவிர இவருக்கு நடிப்பதற்கு வேறு ஒன்றுமில்லை 
கதை சில நேரங்களில் சவ்வ்வ்வவ்வ்வாக இழுப்பது போன்று தோன்றினாலும் பின்னோக்கு காட்சிகளால் கதைசொல்லி படத்தின் இயக்குனரும்  படம் பார்த்த நாமும் தப்பித்துக்கொண்டோம் 

பட்டிமன்ற ராஜா எல்லாப்படங்களிலும் இதுபோன்ற அப்பா வேடங்களில் நடித்து நடிப்புக்கு புது இலக்கணம் படைக்கிறார். சாலமன் பாப்பையாவிடம் சொல்லி  நல்ல தீர்ப்பு கேட்க வேண்டும் மற்றபடி சம்பத்ராஜ்,ரவி மரியா,ஜெயபிரகாஷ்,ஜெகன்..அவரவர்கள் கதாப்பாத்திரங்களில் அவர்கள் நடிப்பு சொதப்பல் இல்லை 
திகில் படங்களுக்கே உரிய நம்பகத்தன்மை(LOGIC).....? இல்லாமை படம் முழுக்க நிரம்பிக்கிடக்கிறது...அதை சாமர்த்தியமாக படத்தின்  இசை நன்றாகவே தள்ளிச்செல்கிறது ஆனால்  படத்தின் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை  படத்தில் அவ்வப்போது விழும் தொய்வை  படத்தொகுப்பும் சரிசெய்கின்றன

துப்பாக்கி-படத்தில் முருகதாஸ்-க்கு ஏற்பட்ட இஸ்லாமியப் பிரச்னைக்கு...? பிராயசித்தமாக இந்தப் படத்தில் அவரது தம்பி திலீபன் ஒரு இஸ்லாமிய வருமான வரித்துறை ஆய்வாளரை காப்பாற்றுவது போல் காட்சி வைத்து கொஞ்சம் சரிசெய்துவிட்டார்.....'

இயக்குனர் கின்ஸ்லின்(Kinslin) நம் மனதில் இடம்பிடிக்கிறார்.
விரசமில்லாத காதல் காட்சிகள் இரட்டை அர்த்தம் பேசும்வார்த்தைகள் நமச்சல் மூட்டும் சொங்கி-மங்கி காமெடியன்கள் இல்லாமல் படத்தை இவ்வளவு சிறப்பாக அதே நேரம் பார்ப்பவர்கள் சொரியாசிஸ் பாதிப்படையாமல்  கதையை நகர்த்தி இரண்டு மணி நேரம் நம்மைத் திரையரங்கில் பொறுமையுடன் உட்கார வைத்த இயக்குனரைப் பாராட்டுவோமாக....

                        thanks-YouTube-IGTAMILMOVIES

வத்திக்குச்சி திரைப்படம்......? 
படம்  பார்க்கலாம்...படத்தைப் பாராட்டலாம்   

  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1