அன்று லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுபேர் துவக்கி வைத்த உண்ணாவிரத அறப்போராட்டம் அதுவும் அடக்கு முறையால் பாதியில் நின்று போனாலும்.....
பாரதி கண்ட அக்னி குஞ்சுகளாக இன்று நாடெங்கும் பரவிவிட்டது மாணவர்களின் படையெடுப்பு.....
”அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்துதணிந்தது காடு –தழல்
வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
இலங்கை இனவெறியன் ராசபக்சேவுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரும் தீர்மானத்தைத் திருத்தவும் ஆதரவாக வாக்களிக்கவும் என்று...
இந்த மாணவ அக்னிகுஞ்சுகள் ஆரம்பித்து வைத்த உண்ணாவிரத அறவழிப் போராட்டம்....
கருப்பு கொடி காட்டுவதிலும் கண்டன அறிவிக்கைகள் விடுவதிலும் "நான்தான் நல்லா ஒப்பாரி வைத்தேன்" என்று பெருமை பேசுவதிலும் இன்னும் சிலர் இந்த அவலங்களை அப்படியே அப்பட்டமான பொய்யும் பித்தலாட்டமுமாகப் புத்தகங்கள் எழுதியும் கவிதை புத்தகங்கள் வெளியிட்டும் காசு சேர்த்துக்கொள்வதில்தான் காலத்தைப் போக்கிக்கொண்டிருந்தார்கள்....
அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களின் அல்லக்கைகள் கவிஞர்கள்,எழுத்தாளர்கள் ... இப்படி இந்தக் கட்டாந்தரைகளில் இதுவரை எந்த புல் பூண்டுகள்கூட முளைக்கவில்லை
ஆனால் இன்று இந்த மாணவர்கள் போராட்டம் நாடெங்கிலும் பற்றி எரிகிறது மத்திய மாநில அரசுகள் இன்று இவர்களின் சக்தியை அறியும் நிலை வந்ததுவிட்டது.
இடையில் சில இடங்களில் கேலிக்கூத்தாக நடந்தசில மாணவர்களின் போராட்டம் சற்றே என்னைத் திகைப்படைய வைத்தன..நல்லவேளை அவர்கள் கூத்து சில நாட்களில் அதுவாகவே முடிந்தது...ஆனால் இன்று உண்மையான மாணவர்களின் போராட்டம் விளம்பர வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சிகள் போல் இல்லாமல் உணர்வு பூர்வமாக முன்னேறிச் செல்கிறது...
அதை அடக்கவோ அழிக்கவோ நினைத்தால் பாரதி சொன்னது போல் வெந்துதணிந்தது காடு...என்பதை வெந்துதணிந்தது நாடு என்ற நிலைதான் வரும்....
அரசியல்வாதிகளே! உங்கள் நாடகங்களைத் தேர்தல் காலங்களில் ஏமாறும் மக்களிடம் வைத்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் எரியும் நெருப்பு.... இனியும் உங்கள் பருப்பு இந்த மாணவர்களிடம் வேகாது......
மாணவ அக்னிகுஞ்சுகளே! உங்கள் அறப்போராட்டத்திலிருந்து தடம் புரண்டுவிடாதீர்கள்....வன்முறை உம்மையும் காயப்படுத்திவிடும் உமது வாழ்க்கையையும் தடுமாறச் செய்யும்............
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |