லயோலா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்....இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது........
அதற்கு முன் ஈழம் விடுதலை பற்றிய..........
தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஈழ விடுதலை சாத்தியம் என்று ஒரு கருத்துக்கணிப்பு வைத்ததில்.............நேற்றுவரை யாருமில்லை என்று அனைவரும் வாக்களித்தார்கள் ...
7-3-2013 காலை 10 மணிவரை வந்த) முடிவு
நாம் தமிழர் -1
|
53
(22%)
|
மதிமுக-2
|
73
(30%)
|
தேமுதிக-3
|
7
(2%)
|
திமுதிக-4
|
9
(3%)
|
அதிமுக-5
|
15
(6%)
|
யாருமில்லை
|
82
(34%)
|
இன்று (9/3/2007)என்ன நினைத்தார்களோ ..மதிமுக என்று வாக்களிக்கிறார்கள்
நாம் தமிழர் -1
|
65
(20%)
|
மதிமுக-2
|
109
(35%)
|
தேமுதிக-3
|
7
(2%)
|
திமுதிக-4
|
9
(2%)
|
அதிமுக-5
|
15
(4%)
|
யாருமில்லை
|
106
(34%)
|
Hours left to vote: 22
நாளையோடு இந்த கருத்துக்கணிப்பு முடிகிறது ..நாளை என்ன நடக்குமோ...?
நாளை என்ன முடிவு வருமோ....?
இதிலிருந்து தெரிவது............எந்த அரசியல் கட்சிகளாலும் சாத்தியமில்லை
(ஒரு வலைப்பதிவில் எப்போதோ படித்த ஞாபகம்...இன்று யார் யாரால் ஈழவிடுதலை சாத்தியமோ இன்று அவர்கள் உயிரோடு இல்லை..) ஆனால்...
அரசியல் வாதிகளால் முடியாததை இளைஞர்களும் மாணவர்களும் நினைத்தால் நடத்திக்காட்ட முடியுமா...?
முடியும் என்றுதான் கடந்த காலங்களில் உலகில் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கின்றன ...
தமிழ்நாட்டில் கூட கடந்த காலங்களில் இந்தி போராட்டங்கள் எடுத்துக்காட்டாகும் ...ஆனால் இங்கே அதிலிருந்து அரசாங்கங்கள் விழித்துக்கொண்டன ..போராட்டங்களை ஆரம்பத்திலேயே நசுக்கிவிடுவார்கள் அரசியல்வாதிகள்
அதனாலேயே மாணவர்களும் இளைஞர்களும் ஒருங்கிணைய முடிவதில்லை ..போராட்டங்களை மறந்து அவர்கள் தீக்குளிப்பு ...உயிரிழப்பு போன்றவைகளில் ஈடுபட்டு ..அரசியல்வாதிகளின் அனுதாபத்தையும் மலர் வளையங்களையும் தவிர வேறு எதுவும் நடப்பதில்லை அதையும் காண அவர்கள் உயிரோடு இருப்பதில்லை
நாளை ஈழத்தமிழர்களுக்கு நல்லதுதான் நடக்கும் என்ற அறிகுறி லயோலா மாணவர்கள் அறவழிப் போராட்டம் மூலம் ஆரம்பித்து உள்ளது என்று கீச்சுக்கள் பல....முகநூலில் வாழ்த்துக்கள் பல....
லயோலா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்.
நல்லவேளை இவர்கள் தீக்குளிப்பு போன்ற உயிரிழப்பு போராட்டங்களை தேர்ந்தெடுக்கவில்லை..ஆனால் இது போன்ற அறவழிப் போராட்டங்களை எப்படி அடக்குவது என்று அரசியல்வாதிகள் அறிவர்...
அவர்களின் கை கூலிகளான ஊடகங்களும் அப்படியே....
சமீபத்திய உதாரணம்.....மதுக்கடைகளை மூடவேண்டும் என்று காந்தியவாதி சசி பெருமாள் நாடார் என்பவர் நடத்திய உண்ணாவிரதம்.....
புது விடியலை எதிர்நோக்கி சிட்டுக்குருவிகள் சிறகடிக்கின்றன ...
அரசியல் வாதிகள் செய்யமுடியாததை இவர்களால் செய்ய முடியுமா...?
உலகம் ஒரு நிமிடமாவது இவர்களை திரும்பி பார்க்குமா...?
காலம்தான் பதில் சொல்லவேண்டும்...?
ஆனால்...மாணவர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியமாகும்
அவர்கள் சுயநலம் அறியாதவர்கள்...! லாப நோக்கமற்றவர்கள்...!
உலகின் கடந்த காலங்களில் புரட்சிகர போராட்டங்கள் மூலமே இளைஞர்களும் மாணவர்களும் சாதனை செய்துள்ளார்கள்
1960-களில்தான் மாணவர் இயக்கங்கள் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அதிகரிக்கும் மிருகத்தனங்களுக்கு எதிராக தீவிரமானது....
6000 மாணவர்கள் மே 9, 1968 அன்று, (பிரஞ்சு புரட்சிகர கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பு), பிரான்சில் கூடிய கூட்டம் உலகத்தின் பார்வைக்கு வந்தது.....இப்படி நிறைய நிகழ்வுகள்...இவைகள் எல்லாம் கடந்த காலங்கள்
அதற்குப் பிறகு அது போன்ற நிகழ்வுகள் அடக்கப்பட்டன
உலகின் பல்வேறு நாடுகளில் மில்லியன் கணக்காக அணிதிரண்ட மாணவர்களால் மட்டுமே வெற்றி சாத்தியம்.சிலர் தீ குளிப்பதாலும்..சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாலும் பரிதாபமும் பச்சாபமும் தவிர எதுவும் சாத்தியமில்லை
ஈழவிடுதலைக்காக இன்று வரை வெளிநாடுகளில் நடத்தப்படும் அணிதிரண்ட ஈழத்தமிழர்களின் ஊர்வலங்கள்தான்...ஓரளவுக்கு உலக நாடுகளை உற்று பார்க்க வைத்துள்ளது.மற்றபடி தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் நடத்திய மாநாடுகள்.. பந்துகள் ...ஊர்வலங்கள் ...யார் நடத்தினார்களோ அவர்களால் சாதனையாகப் பேசப்படுகிறது...இதுதான் உண்மை நிலை
இன்றைய நிலையில் அம்மாவைத் தவிர வேறு யாராலும் இது சாத்தியமில்லை அதை அறிந்து கொண்டதாலேயே ..உலகின் பல்வேறு இடங்களில் உள்ள ஈழத்தமிழர்கள் அம்மாவின் பதாகையை தூக்கிக் கொண்டு சென்றார்கள்...இந்த நம்பிக்கை நிஜமாவதும் நிழல்லாவதும் அம்மாவால் மட்டுமே...அதிலும் அவர்கள் அவ்வளவு எளிதாக ஈடுபட முடியாது...அவர்கள் நிறைய பிரச்சனைகள் சந்திக்க வேண்டிவரும்....இப்போதைய நிலையில் அவர்களின் செயல் பாடு எதுவும் தீவிரமாக ஈடுபட முடியுமா...? என்பது சந்தேகமே இங்கே தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களின் சதுரங்க விளையாட்டை சரிசெய்யவே அவர்களுக்கு போதும் என்ற நிலை...இன்னும் அவ்வப்போது உண்டாகும் தமிழக மீனவர்கள் பிரச்சனை,காவேரி நீர் பிரச்சனை...இப்படி பல பிரச்சனைகளிலேயே ..தனியொரு பெண்மணியாக நின்று சமாளிக்கிறார்கள் ...அதுவே பெரிய சாதனை
மதவெறி-சாதிவெறி-இனவெறி இவை மூன்றும் எய்ட்ஸ் நோயைவிட கொடியது....காலப்போக்கில்தான் இவை சரியாகும்
என்று மனிதாபிமானம் வளர்ச்சியடைந்து உச்சத்துக்கு வருகிறதோ அதுவரை காத்திருக்க வேண்டும்...காயங்களுக்கு மருந்திட்டு ..அல்லது மறந்து விட்டு.........
இத்தகைய காலகட்டத்தில் இவர்களிள்ன் உண்ணாவிரதம் என்னவாகும்...?நல்லது நடக்கவே வாழ்த்துவோம் ....
thanks-YouTube-sar an
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |