google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மதில் மேல் பூனை-சினிமா விமர்சனம்

Friday, March 08, 2013

மதில் மேல் பூனை-சினிமா விமர்சனம்


எல்லோரும் சிங்கம்,சிறுத்தை,புலி...என்று படத்திற்குப் பெயர் வைக்கும்போது இயக்குனர் ஜெயபால் (மதில்மேல்)பூனை என்று பெயர் வைத்து...the most terrifying action thriller என்று சொல்லும் வித்தியாசமான இயக்குனர்தான். இது மியாவ்  மியாவ் பூனையல்ல... LIVE FREE OR DIE HARD- என்று சீறிப் பாயும் புலி..?என்று பதாகைகளும் விளம்பரங்களும் பறைசாற்றிப் படத்துக்கு ஒர் எதிர்பார்ப்பை உண்டாக்கின.






















































இப்போது வந்த நிறைய அதிரடிப் படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விவிட்டன ...நகைச்சுவைப் படங்கள் கொடிகட்டுகின்றன........படம் எப்படி இருக்குமோ? என்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தோடுதான் படத்துக்குப் போனேன்............

கிராமத்து பள்ளி ஆசிரியராகத் தம்பி ராமையா இந்தி டீச்சர்மேல் வழியும் காமெடி...? அப்படியே அய்ந்து போக்கிரி மாணவர்கள் ஒரு நல்ல மாணவி (திவ்யா)  இவர்களுக்குள் நடக்கும் சிறு பிரச்சனை விபரிதமாகி...ஒருவனை மற்றவர்கள்  உயிரோடு எரித்துவிடுவதும் அதைத் திவ்யா காட்டிக்கொடுப்பதும்.....

அதனால் அந்த நான்கு பள்ளி மாணவர்களும் சீர்திருத்த பள்ளி சென்று வெளியே வரும்போது இன்னும் மோசமான கொடியவர்களாக (அதில் ஒருவன் -சைக்கோவாக) வெளிவருவதும்...............    










































இன்னொருபுறம்  பாண்டிச்சேரியில் கார் ஓட்டும் பயிற்சியாளர் கார்த்தியாக விஜய் வசந்த்-பிரியாவாக விபா இவர்களின் காதல்கூத்துக்கள்... கார்த்தி-திவ்யா காதல் திருமணத்தில் முடிவது...ஆகப் பூனை வேகத்தில் கதை போனாலும் இயக்குனர் சொன்னதுபோல் த்திரிலிங்காக ..................இடைவேளை 

இடைவேளைக்குப் பிறகு கதையில்  அனல் பறக்கிறது...பூனை புலியாகப் பாய்ந்தது போல்....


















































கார்த்தி-பிரியா காதல் திருமணத்தில் முடிந்து ஒரு மலைப்பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சாமி கும்பிடப் போகும்போது சிறுவர்களாக இருந்து பெரியவர்களான அந்த  நான்கு போக்கிரிகளும் பிரியா என்ற திவ்யப்பிரியாவை பழிவாங்க நடக்கும் மோதலில் கார்த்தியைக் காட்டுக்குள் கடத்திச் செல்லும் போது..படம் மின்னல் வேகத்தில் போகிறது..........

கார்த்தியை தேடிச்சென்ற  பிரியாவையும்  பிடித்து இருவரையும் சைக்கோத்தனமாக அந்த நான்கு பேரும் பயங்கரக் கொடுமை செய்கிறார்கள்..அவர்கள் அந்த நான்கு பேர்களிடமிருந்து உயிர்பிழைத்து தப்பி வந்தார்களா....? இல்லையேல் அங்கேயே அவர்களிடம் அழிந்துபோனார்களா...?.....இதற்கு விடைதான்  மதில் மேல் பூனை...?  முடிவுதான் படத்தின் முக்கிய அம்சம் அதை நீங்கள் வெள்ளித்திரையில் காணுங்கள்......


கதாநாயகனாக நடித்துள்ள விஜய் வசந்த் அவருக்குக் கிடைத்துள்ள கதாப்பாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்த்திருக்கிறார் என்று சொல்வதே நிஜம்..அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார்.சென்னை-28 -ல் கூட்டத்தோடு கூட்டமாக ஆனாலும் அட்டகாசமாக அறிமுகமான அவர் நாடோடியில் மூன்றில் ஒருவராக நடிப்பில்...இதில் கதாநாயகனாகச் சிறப்பாக நடித்துள்ளார்.

அந்தக் கொடூரமான சைகோ வில்லன் கூட்டத்தினரிடம் எதற்கு மாட்டிக்கொண்டோம் என்று தெரியாமல் கொடூரமாக தாக்கப்படும் போதும்  சித்தவதைச் செய்யப்படும் போதும்   பூனையாக அவரது முகம் அப்பாவித்தனமாகவும் பார்வையாளர்களுக்குப் பரிதாபத்தைத் தருகிறது.
அதே நேரத்தில் காட்டுக்குள் அவரும் விபாவும் உயிரோடு எரிக்கப் போகும் போது பொங்கி எழுந்து...புலியாகப்  பாய்வதில் அவரது அதிரடி நடிப்பு பளிச்

கதாநாயகியாக நடித்துள்ள  நடிகர் அரவிந்த் சாமியின் உறவினரான விபா நடராசன் நடிப்பில் மிளிர்ச்சி உருவத்தில் வசீகரம்....காதல் வீரம் இரண்டு பரிமாணங்கள் காட்டி நடித்துள்ளார்....காட்டில் அந்த நான்குபேர்களிடம் சண்டை போடுவது...அதில் ஒருவரை கொலைசெய்வது யதார்த்தமாக உள்ளது...

இயக்குனர் பரணி ஜெயபால் நல்ல கதையைத்தான் தேர்வு செய்துள்ளார்...பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் செய்யும் அநாகரீகமான காமலீலைகள்  மாணவர்களுக்குக் கொடுக்கும் அநாகரீக தண்டனைகள் அவர்களை எவ்வாறெல்லாம் இளம் வயதில் பாதிக்கச் செய்கின்றன அதனால் பிற்காலத்தில் அவர்கள் எப்படியெல்லாம் போக்கிரிகளாக மாறுகிறார்கள் என்று...

ஆனால் கதை சொல்லும் விதம்... ஒரு பிளாஸ்பேக் போன்று வில்லன்களின்  கதையைச்  சொல்லியிருந்தால்..... படத்தின்  வேகத்தை இன்னும் அருமையாகக் கூட்டியிருக்கலாம்...படத்தின் விறுவிறுப்பு அருமையாக இருந்திருக்கும்...வன்முறை காட்சிகள் கொஞ்சம் குறைத்திருந்தால்..A முத்திரையிலிருந்து படம் தப்பியிருக்கும் 

இரண்டு வேறு பட்ட தண்டவாளங்களில்  ஒரு புகைவண்டி ஓட்ட முடியுமா?தம்பி ராமையா இஞ்சினாக  ஒரு  புகைவண்டி....விஜய் வசந்த் இன்னொரு இஞ்சினாக இன்னொரு புகைவண்டி.....அதனால் படத்தின் பயணம் கன்னியாகுமரியிலிருந்து....காஸ்மீர் வரை ...நீண்டு கொண்டு போகிறது....

படத்தின் இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தரா படத்துக்கு உயிரோட்டம் அனைத்துப்பாடல்களும் அருமை ..அதிலும் காட்டுக்குள் நடக்கும் அந்தப் பரட்டை சாமியாரும் சிறுமியும் வில்லன்கள் கூட்டத்தினரிடம்  போடும்  சண்டை காட்சியில் இசையும் சிறப்பாக வுள்ளது.

ஒளிப்பதிவு-L.K.விஜய் ...பாராட்டும்படி செய்துள்ளார் மலைப்பகுதி காட்சிகள் பாடல் காட்சிகள் காட்டுக்குள் நடக்கும் சண்டைக்காட்சிகள் அதிலும் அந்தப் பரட்டை சாமியார் போடும் சண்டை ஜாக்கிசான் படங்களில் வருவதுபோல் படத்துக்கு மெருகூட்டுகின்றன..ஆற்றங்கரையில் சைகோ வில்லனை மணலில் கழுத்தை அமுக்கி கொள்ளும் காட்சி இதுவரை காணாதது....

இன்னும் நிறையச் சிறப்பம்சங்கள் இருக்கின்றன....படம் பார்க்கலாம். ஆனால் படத்தின் வெற்றி...? மதில் மேல் பூனைதான்...அது எதுவாக இருந்தால் என்ன..? படத்தின் இசை...பாடல்கள்...பாடல் வரிகள்... பாடல் காட்சிகள்...ஒளிப்பதிவு....நடிப்பு....இன்னும் நிறைய இளமைத் துள்ளல்கள் 
இவைகள் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும்....நன்றி

                                              .........................பரிதி.முத்துராசன்  

********************************************************************************** இது உல்டா.....எந்திரன் சூப்பர் ஸ்டார்-ஐஸ்வர்யா நடிப்புக்கு  ஒரு பூ பூக்கிறது பாடலின்  remix
                                          thanks-YouTube-by Suresh singa·
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1