google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பான் சிங் டோமர்-தேசிய விருதுக்கு தகுதியான படமா?

Tuesday, March 19, 2013

பான் சிங் டோமர்-தேசிய விருதுக்கு தகுதியான படமா?


60-வது தேசிய திரைப்பட விருதுகளில் மிகப் பெரிய விருதுகள்-சிறந்த திரைப்படம்  விருதை பான் சிங் டோமர் உண்மை வரலாற்று திரைப்படமும் மற்றும் சிறந்த நடிகர் விருதை அதில் பான் சிங் டோமராக நடித்த இர்ஃபான் கானும் பெற்றுள்ளனர்.
 

பான் சிங் டோமர்(1932-1981)- இந்திய ரானுவத்தில் சிப்பாயாகப் பணியாற்றி இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பல தங்க பதக்கங்கள் வென்ற  ஒரு சிறந்த  விளையாட்டு வீரர் 1958 ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்றுப் பாராட்டுகள் பெற்றவர்.

 அவர் ராணுவத்திலிருந்து தானாகவே விலகி மத்திய பிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்குச் சென்றபோது.....






















அங்குள்ள நிலச்சுவான்தாரும் நாட்டாமையுமான பாபு சிங் என்பவருக்கும் அவருக்கும் நடந்த நிலத்தகராறில் கொலைகாரராக மாறி சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவராகச் சம்பல் கொள்ளையர்களுடன் இணைந்து தேடப்பட்ட குற்றவாளியானார்.  


                                             thanks-YouTube-UTVMotionPicture

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மஹேந்திர பிரதாப் சிங் செளகான் என்பவரால்  1981-ல் 12-மணி நேர துப்பாக்கி சண்டைக்குப் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்  

இவரது வாழ்க்கை நமக்குச் சீவலபேரி பாண்டி மற்றும் மலையூர் மம்பட்டியான் படங்களையும் சமீபத்தில் வந்த வீரப்பன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வணயுத்தம் திரைப்படத்தையும் நினைவு படுத்தும்

பான் சிங் டோமர் திரைப்படம் இந்த உண்மைக்கதையை அப்படியே சித்தரிக்கிறது 9 பேர்களைக் கொன்ற கொலையாளியாகப் பான் சிங் டோமர் ஒரு நிருபருக்கு அளிக்கும் பேட்டியாகப் படம் துவங்குகிறது....அப்படியே பின்னோக்கு காட்சிகளாகப் நிறையக் கொலைகள் வன்முறைகாட்சிகளுடன் படம் நகர்கிறது..... 


சஞ்சய் செளகான் எழுதி திக்மான்ஷு துலியா(Tigmanshu Dhulia) இயக்கத்தில் இர்பான் கான் நடிப்பில் அதிக வரவேற்பை பெற்று 2012- ல் வெளியான இப்படம் ஒருவகையில் மனிதனாக இருந்து மிருகமானவானின் வாழ்க்கையைச் சித்தரிப்பது.இதற்கு 
சிறந்த படம் என்று தேசிய விருது கொடுப்பது எந்த வகையிலும் தகுதி இல்லை என்பதே என் கருத்து.

கதையில் எந்த தனித்தன்மையும்(ORIGINALITY)இல்லாததும் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கே விருது என்றால்...
 இது போன்ற கதைகளுக்கு தமிழ் நாட்டில் பஞ்சமில்லை ...எங்க ஊர் பண்ணையார் கதை, பக்கத்து ஊர் காசி-செம்புலிங்கம் கதையையும் இங்கே என்கவுண்டரில் சாகடிக்கப்பட்ட அத்தனை பேர் கதைகளையும் படமாக எடுத்து விருதுகளை அள்ளலாம் ஆனால் அவைகளை நீங்கள் இந்தியில் எடுக்கவேண்டும்..அவ்வ்வ்வளவுதான்  

























அதற்கு பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய வழக்கு எண் 18/9 சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எப்படி உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு  அல்லக்கைகளாக அரசு காவல்துறை அதிகாரிகள் மாறி துன்பங்கள் அனுபவிப்பதையும் குழந்தை தொழிலார்கள் கொடுமையையும் இன்றைய மோசமான ஆசிட் வீச்சுக் கலாச்சார காதல் விபரிதங்களையும் கலை நுணுக்கத்துடன் யதார்த்தமாகச் சொல்லிய படம்  

நிகழ்கால நிஜத்தின் பிரதிபலிப்பு இங்கே புறக்கணிக்கப்படுவது ஏன்தானோ...?எதை ஊக்கப்படுத்துவது எதை பின்னுக்குத் தள்ளுவது உணர்வற்ற நிலையே விருது வழங்குவதில் நடந்துள்ளது.பெயருக்கு உப்பு சப்பு இல்லாத சில விருதுகளை நல்ல சமுதாய அக்கறை கொண்ட படங்களுக்கு கொடுப்பதைவிட கொடுக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே தெரியப்படுத்துங்கள்.......

தேசிய திரைப்பட விருது வழங்கியதில்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1