எக்ஸ்பிரஸ் அவின்யுவில்
கிராண்ட் தாய்-ல்
கிரில் சிக்கனும் பர்கரும்..
லபக்குனு விழுங்கி
எஸ்கேப் எலைட் திரையில்
பரதேசி பார்த்துவிட்டு...
பாலாவின் முகநூல் தேடி...
பரதேசிகளுக்கு
தாடிதான் வளர்ந்திருக்கு
ஏன் தலையில்
எதுவும் வளரவில்லை...?
பரிதாபத்துடன் கேள்விகேட்டு
படுக்கப்போனால்.....
அய்யோ...பாவம்
அரசியல் தெரியாத அரைபக்கிரி
சமுதாய அக்கறையில்லாத
மடச்சாம்பிராணி என்று...
எவரும் ஏளனம் செய்திடக் கூடாதே...?
அவசரமாகக் கணணியை முடுக்கினால்
அகப்பட்டது....நம்ம தலீவருதான்...
அவரோ அவசரமாக
செயற்குழுவை கூட்டி....
அவர்கள் கட்சி நிலையை
முப்பத்திரண்டு பக்கங்கள்
நீட்டி முழங்கியிருக்க....
அவைகளை விட்டு விட்டு
அவர்கள் குரூப் போட்டாவில்
அகக்கண் புறக்கண் பார்த்து
அங்கே ஏன் அஞ்சாநெஞ்சன் இல்லை..?
அப்படியே ஒரு ட்வீட் கீசிவிட்டு....
இப்படியே போகிறது
நன்றாகத்தான் நாடும் நானும்
ட்வீடர்களோ! முகநூல் நண்பர்களோ!
வேறு எந்த நியாயன்மார்களோ!
யாரும் என்னோடு சண்டைக்கு வராதீர்கள்
நான் உங்களைச் சொல்லவில்லை...?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |