google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நடிகர் சூர்யா-சினிமா?வாங்க அசைபோடலாம்?

Sunday, March 10, 2013

நடிகர் சூர்யா-சினிமா?வாங்க அசைபோடலாம்?


நடிகர் சூர்யா-
தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நடிகர் மட்டுமன்றி தயாரிப்பாளர், கொடையாளி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்..என்று பல்வேறு சிறப்பு முகங்கள் உண்டு.

இயக்குனர் மணிரத்தினம் தயாரிப்பில் இயக்குனர் வசந்த் மூலம் நேருக்கு நேர் என்ற வன்முறையற்ற கதையம்சம் கொண்ட படத்தில் நட்சத்திர நடிகர் விஜய்-யுடன் இணைந்து தனது 22-வது வயதில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் 




பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் முதல் மைந்தரான சரவணன் என்ற இவர் இவருக்குள் இருக்கும் நடிப்புத் திறமை இவருக்கே தெரியாமல் இருந்ததால் சினிமா துறையைத் தேடிப்போகாமல் ஆடைத்தொழில் மேல் ஆர்வம் கொண்டு ஒரு நிறுவனத்தில் மாதம் எட்டாயிரம் ரூபாய்(1997)வேலையில் இருந்து இயக்குனர் வசந்த் விரும்பியதால் சூர்யாவாகத் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

சிறந்த கதையம்சங்கள் உள்ள படங்களாகதேர்வு செய்து பல்வேறு வேடங்களிலும் 28 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவருக்கு நிறைய வெற்றிப்படங்கள்.



அவைகளில்.......ப்ரண்ட்ஸ்,நந்தா,மௌனம் பேசியதே,பிதாமகன்,காக்க காக்க,பேரழகன்,கஜினி,சில்லுனு ஒரு காதல்,வேல்,வாரணம் ஆயிரம்,அயன்,ஆதவன்,சிங்கம், 7-ஆம் அறிவு,மாற்றான்..போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவைகள்

































இவைகளில் இவரது நடிப்பு இவருக்கு
மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்,மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்...பெற்று தந்து இவரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகக்கியுள்ளது.


புலிக்குப் பிறந்தது பூனையாகுமா...?என்பதைவிடத் தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற புதுமொழி உருவாக்கியவர்...

இயக்குனர் பாலாவின் நந்தா-வில் இளம்வயதில் சிறைசென்ற குற்றவாளியாகச் சமுதாயத்தில் திரும்பி வந்து தாயின் அன்புக்கு ஏங்கும் இவரது சக்திவாய்ந்த இறுக்கமான நடிப்பு இவருக்குச் சிறந்த நடிகருக்கான 2001 தென்னிந்திய பிலிம்பேர் விருது தந்ததுடன் நல்ல திருப்புமுனையாக அமைந்தது....'

                                      thanks-YouTube-Vasanthan Devaraj

முன்பனியா..' என்ற பழனி பாரதியின் பாடலில் இவரது (நடிப்பு) கண்களில் மலர்ந்தன புன்னகைப்பூக்கள்...........

கவுதம் மேனனின் காக்க காக்க படத்தில் போலிஸ் அதிகாரி அன்புச்செல்வன் கதாபாத்திரமும் விருவிருப்பான இவரது அதிரடி நடிப்பும் இவருக்கு அடுத்தத் திருப்புமுனையாக அமைந்தது

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி திரைப்படத்தில் குறுகிய கால நினைவு இழப்பு நோயால் அவதிப்படும் நோயாளியின் கதாப்பாத்திரத்தில்  இவரது நடிப்பு..அப்படத்தை வெற்றிக்கு நகர்த்திச் சென்ற உந்துசக்தியாக இருந்தது......  

வாரணம் ஆயிரம் படத்தில் 16 வயது முதல் 65 வயது வரையிலான வாழ்க்கை மாற்றங்களைத் தந்தை-மகன் இரு கதாப்பாத்திரங்கள் மூலம் பிரதிபலிக்க இவர் எடுத்துக்கொண்ட உடற்பயிற்சி முயற்சிகள் சக நடிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுமல்லாமல் நடிப்பின் மீது இவருக்குள்ள அக்கரையையை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பறைசாற்றியது.

இயக்குனர் கே.வி.ஆனந்தின் அயன் திரைப்படத்தில் இவரது அதிரடி நடிப்பும் பாடல் காட்ச்சிகளும் சண்டை காட்சிகளும் சிறப்பாகப் பேசப்பட்டதுடன் இவருக்கு விஜய் அவார்ட் பெற்றுத்தந்தது.



இயக்குனர் ஹரியின் சிங்கம் படத்தின் வெற்றியே இவரது அதிரடி நடிப்பு தவிர வேறொன்றுமில்லை என்று எல்லோராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது....அதிலும் சிங்கத்தில் இவர் பேசும் பஞ்ச் வசனம் மிகவும் பிரபலம்....

                                             thanks-YouTube-yourocky1

   
நடிப்புக்கு அப்பாற்பட்டு ஸ்டுடியோ கிரீன் மூலம் இவர் தயாரிப்பு-விநியோகம் துறைகளில் ஈடுபட்டாலும் இவரது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஸ்டார் விஜய் டி.வி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகப் பேசப்பட்டார். 


இவரது சமுதாயப் பங்காக நடத்தி வரும் அகரம் பவுண்டேசன்( Agaram Foundation)கல்வியில் ஆர்வமிக்க வசதி வாய்ப்பில்லாத மாணவர்களுக்கு உதவுவதில் முன்னோடியாகத் திகழ்கிறது.   





























இவரது அடுத்த அதிரடி திரைப்படம்.....  சிங்கம்-II   வெற்றி பெற வாழ்த்துவோம்....   
                ........................................பரிதி.முத்துராசன் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1