google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அக்னி வெயிலை ஆராதனை செய்வோம்

Sunday, April 28, 2013

அக்னி வெயிலை ஆராதனை செய்வோம்

http://e-kartki.net.pl/kartki/72/5/d/5699.jpg

என் உயிரிலும் மேலான பதிவுவாசிகளே! வணக்கம்.இந்த கொளுத்தும் கோடை வெயிலிலும் வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டு கணணியிலும் கைபேசியிலும் நீங்கள் என் அறுவைப் பதிவுகளைப் படிக்கும் போது அதைக் கண்டும் காணாமலும் என்னால் எப்படி இருக்கமுடியும்..? அதனால்தான் இந்தப் பதிவு.    

http://www.blackrivernews.com/images/contentimages/473.gif

110-க்கு மேல் வெப்பம் நிலவும்   கோடைகாலத்தைக் கண்டு கொள்ளாமல் நீங்கள் சும்மா இருந்தால் அது பல வெப்ப நோய்களை (Heat sickness) உங்களுக்கு உம்மா குடுத்துவிடும் 

1-வெப்ப மயக்கநிலை(Heat syncope)-உடலில் வறட்சி வர வழி விட்டால் அது தலைசுற்று மயக்கம் வரை கொண்டுசென்றுவிடும்..
எனவே தாகம் எடுக்காத அளவுக்கு நீர் அல்லது நீர் சத்து நிறைந்த பழச்சாறு அருந்தவேண்டும்
2-வெப்ப பிடிப்புகள்(Heat cramps)-நீங்கள் அதிக வியர்வைசிந்தினால் உடலில் உப்பு சத்து அளவு குறைவு ஏற்பட்டு அடிவயிறு,கை.கால்களில் தசை பிடிப்பு,உடல் வலி போன்ற உபாதைகள் தரும்..இதை நீடிக்க விட்டால் இதய நோயில் கொண்டு விடும் மோர்,நீராகாரம் போன்றவைகளில் நாம் உப்பு போட்டு அருந்துவது உகந்தது  
3-வெப்ப வீக்கம்(Heat edema)-கோடை வெயிலில் அலைய நேரிடால் உடல் வியர்த்தல்,முகம் சிவத்தல்,கை, கால்களில் வீக்கம் போன்றவை வரவாய்ப்புள்ளது..எனவே வெயிலில் அலையாமல் மர நிழல்களில் ஒதுங்கவும் 
4-வெப்ப சோர்வு(Heat exhaustion)-கோடைகாலத்தில் நமது உடலில் நீர் இழப்பு வியர்வை சிந்தல் மூலமாக ஏற்பட்டு தீவிர பலவீனம் மற்றும் சோர்வு தரும்..எனவே வியர்க்காத வண்ணம் குளிர் சாதன அறை அல்லது விசிறிகள் மூலமாகவோ வியர்வை இழப்பை தவிர்க்கவும் 
5-வெப்ப பக்கவாதம்(Heat stroke)-கோடை வெயில் கொடுமையைக்கண்டு தவறான உணவுகள்..ஐஸ் கிரீம்,கூல் ட்ரிங்க்ஸ்,போன்றவைகளை உட்கொண்டும் சில நேரங்களில் பெய்யும் கோடை மழையும் நமது உடலில் வெப்பத்தை உச்சநிலைக்கு 104 டிகிரி கொண்டு சென்றுவிடும் 
அதை நாம் உடன் சரி செய்யவில்லையெனில் குழப்பம்,பிரமை,தலைவலி,தலைச்சுற்று,போன்றவைகளை நமது உடலில் உண்டாக்கி நிரந்தர ஊனம் உண்டாக்கிவிடும்   

http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/936837_10150288519244964_17362864_n.png

குழந்தைகள் மற்றும்  வயதான பெரியவர்கள் மட்டுமே இத்தகைய அதீத பாதிப்புக்கு உள்ளாகின்றனர்...முதல் நான்கு அறிகுறிகளையும் உடன் குளிர்ந்த நீர் அருந்தி சரி செய்துவிடலாம் ஐந்தாவது அறிகுறியை மருத்துவர்கள் மட்டுமே சரிபடுத்த முடியும் 

குடி மகன்கள் குளிர்ந்த பீர் மற்றும் மது பானங்கள் அருந்துவது அந்த நேரத்திற்குத் தற்காலிக தீர்வாகத் தெரியும் பின் அதுவே பெரிய கேடாக மாறி அந்த 5-வது அறிகுறிக்கு காரணியாகிவிடுகிறது.

http://www.yougivegoods.com/assets/photos/525.jpg

இதற்கு என்னதான் தீர்வு...?ஆம்..நாம் அக்னி வெயிலை ஆராதனை செய்யவேண்டும்.
1-ஆல்கஹால் மற்றும் காஃபின் இல்லாத குளிர்ந்த திரவங்கள் நிறையக் குடிக்கவேண்டும்.. 
2-கோடைகாலத்திற்கு ஏற்ற உடலுக்கு வெப்பத்தை அனுமதிக்காத கதர் போன்ற பருத்தி ஆடைகள் அணியவேண்டும்
3-நாம் இருக்கும் இடம் குளிர் சாதனம் உள்ளதாகவும் அல்லது காற்றோட்டமாக உள்ளதாகவும் பார்த்துக் கொள்ளவேண்டும்  
4-நமது வெளிப்புற நடவடிக்கைகளை முறைபடுத்தி..முடிந்தால் அதிக வெட்பம் உள்ள நேரமான 11 A.M. முதல் 4 P.M. வரை தவிர்க்க வேண்டும் 
5-எல்லாவற்றையும் விட மாறி மாறி வரும் இயற்கையின் படைப்பில் இதுவும் ஒரு காலகட்டமே..இதைக்கண்டு பயந்து நமது உடலுக்கு ஒவ்வாத உணவுகள் எதையும் உட்கொள்ளாமல் அதிகத் தூய்மையான நீர் மட்டும் அருந்தி அக்னி வெயிலை ஆராதனை செய்வோம். 

இவை எல்லாவற்றையும் விட மிகவும் எச்சரிக்கை...ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று ஊட்டி,கொடைக்கானல்,மூனாறு..போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சென்று நமது உடல் வெப்பத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்காதீர்கள்      
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1