இருக்கும் போது தட்டாம்பூச்சி
இறந்த பிறகு பட்டாம் பூச்சி
இதுதான் உலகம்!
இப்படித்தான்
மனிதர்களில் சிலரை
இருக்கும் போது தூற்றுகிறார்கள்
இறந்தப்பிறகு போற்றுகிறார்கள்...
(புண்ணாக்குத் தலையர்களே!
அவர்கள் இறந்தபிறகு
நீங்கள் தூற்றினால் என்ன...?
வாழ்த்திப் போற்றினால் என்ன...?
அவர்களுக்கு
அது தெரியவாப் போகிறது?)

இதை அறிந்துதான்
இன்றைய
அரசியல்வாதிகள்
சினிமாவாதிகளும்
வாழும் போதே...
வாழ்த்துப் பதாகைகள்
அவர்களே அச்சடித்து
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
(ஏம்பா..உஷாராஉள்ள இருக்கிற பவர் படத்த போட்டுயிருக்க...வேற யார் படத்தையாவது போட்டா நீ உள்ள இருக்கனும்னா..ஹா..ஹா..எப்படியோ
வள்ளுவர் குறளு உன் கையில கிடச்ச பூமால..நீயும் எங்க கூட்டத்தோடு சேர்ந்திட்ட )

கவிதை தந்த குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |