யாதும் ஊரே
யாவரும் கேளிர்
அடடா...
அது பாடப்புத்தகத்தில்
என்றோ படித்தது.
எல்லாம் மறந்து போச்சு.

ஆனால்
அதை அம்மா சொன்னதால்
மீண்டும் ஞாபகம் வந்திடுச்சு
அதற்கு அர்த்தம் மட்டும்
புரியமாட்டேங்குது..
அடுத்தத் தடவ
ராஜபக்சே வரும்போது
அவரிடம் கேட்கவேண்டும்
தமிழில் கேட்கவேண்டுமா?
சிங்களத்தில் கேட்க வேண்டுமா?
எப்படிக் கேட்க வேண்டும்
எதுவும் தெரியலையே...?
(அண்ணேன்....
எனக்கொரு டவுட்டு...?
அம்மா தமிழ்ல சொன்னது
அதுக்குள்ள சீனாகாரனுக்கு
அர்த்தம் எப்படித் தெரிஞ்சது...?
அவனுக்கும் தமிழ் தெரியுமோ?
பத்து கிலோ மீட்டர் பார்டர்தாண்டி
இந்தியாவுக்குள்ள வந்துட்டானாமே..?
யாதும் ஊரே யாவரும் கேளிர்)
.............பரிதி.முத்துராசன்
*************************************************
தினம் ஒரு நிழற்படம்.....
thanks-500px.com-little red by Mark Bridger |
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |