google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உதயம் NH4-சினிமா விமர்சனம்

Wednesday, April 24, 2013

உதயம் NH4-சினிமா விமர்சனம்
உதயம் NH4-
மணிமாறன் இயக்கிய தமிழ் காதல் திரில்லர் திரைப்படம்...ஆடுகளம் வெற்றிமாறனின் திரைக்கதை,வசனம்,உரையாடலில்..ரோடுகளம்...
விடிந்தால் 18-வயதுக்கு வரும் காதலியை பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் காதலன் இழுத்துக்கொண்டு ஓடும்களம்  

http://img13.imageshost.ru/img/2013/03/19/image_514871e90bef2_small.jpg

சென்னையிலிருந்து பெங்களூருக்கு படிக்கச் சென்ற மாணவர் சித்தார்த் அங்கே உள்ள பெரிய அரசியல்வாதியின் மகள் அர்ஷிதா ஷெட்டி மீது காதல் கொள்ள அவரது நண்பர்களுடன் அங்கே உள்ள போலீசார் மூலம் ஜட்டியுடன் நடுரோட்டில் நிற்கவைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகச் சித்தார்த் தன் நண்பர்களுடன் அர்ஷிதா ஷெட்டியை பெங்களூரிலிருந்து சென்னைக்கு NH4 தேசிய நெடுஞ்சாலையில் கடத்தி வருகிறார்..அதை அறிந்த அரசியல்வாதி ரகசியமாக என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கே.கே.மேனன் என்பவர் மூலமாக உயிருடனோ பிணமாகவோ பிடிக்க அனுப்புகிறார்..இந்த விரட்டல்  செம ஓட்டமாக...இடைவேளை வரையிலும் பொடிநடையாக இடைவேளைக்குப் பிறகும் கிளைமாக்ஸ்சில் நொண்டியடித்துக் கடைசியில் தவிழ்ந்து....அப்பாடா..காதலர்கள் உதட்டு முத்தத்தில் முடிந்துவிடுகிறது.

இயக்குனர் மணிமாறன் புதுமுகம் என்பதை அவ்வப்போது சொல்லாமல் சொல்லுகிறார்....திருப்பம் நிறைந்த காட்சிகள் அதுதான் கதாநாயகன் நடுரோட்டில் வில்லனிடம் மாட்டிக்கொண்ட காதலியை மீட்க சூப்பர் மேன் போன்று தோன்றுவது...அதிலும் பைக்கை எரியவிட்டு எதிரிகளை கொளுத்துவது...ஆணிகளை அள்ளிவீசி ஜீப் டயரைப் பஞ்சராக்குவது....ப்பே...அப்பப்பே

மொபைல்....வாய்ஸ் ட்ராக் பண்ணுவது இப்படியே நிறையக் காட்சிகள் வைத்து காதில பூ சுற்றுகிறார் அத்தனையும் அலுப்பூ...பூ 

பின்னணி இசை ஜி.வி. பிரகாஷ் குமார்...நா.முத்துக்குமார் வார்த்தைகளில் ஒரு டூயட் பாடல் "யாரோ இவன்" மற்றும் கானா பாலா பாடிய "ஒரு கண்ணால..." குத்துப் பாடலும் கேட்கும் படி உள்ளது. 

http://movies.infoonlinepages.com/wp-content/uploads/2013/03/Udayam-NH4-Trailers-Screened-In-Theaters.jpg

மற்றபடி உதயம் NH4-தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் வாகன விபத்துக்கள் போன்று அவ்வப்போது சிறு சிறு விபத்துக்களோடு தப்பிவிடுகிறது....ஒரு முறை பார்க்கலாம் நீங்களும் வாலிபராக இருந்தால் எப்படி ஒரு மைனர் பெண்ணை சட்ட சிக்கல் இல்லாமல் காதலித்து கடத்துவது என்று தெரிந்து கொள்வதற்கு...?  அல்லது நீங்கள் பென்னைப்பெற்ற தந்தையராக இருந்தால் கட்டாயம் பார்க்கவேண்டும் எப்படி எல்லாம் ஒரு பெண்ணை கடத்து கிறார்கள்...? என்று தெரிந்து கொள்வதற்கு...? .(எதையும் தெரிந்து கொண்டால் நல்லதுதானே) 
சொல்லமுடியாது ஆடுகளம் மாதிரி இந்த ஓடுகளம்..? ரோடுகளம் விருது வாங்கினாலும் வாங்கலாம்.  
Secrets by Roxy  Less (iamaross)) on 500px.com
Secrets by Roxy Less
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1