குறள் தந்த கவிதை-15
ஆகாயம் உன்னை
அணை கட்டி தடுக்கவில்லை
ஆனாலும்
உன் வரத்துக்கும் போக்குக்கும்
அட்டவணை ஏதுமில்லை
அட..மழையே!
டமால்...டுமீல் என்று
இடி மின்னலுடன்
வாக்குறுதிகள் வழங்குவதில்
எங்கள் அரசியல்வாதியையும்
நீ மிஞ்சிவிட்டாயே!

எப்ப வருவேன்? எப்படி வருவேன்? என்று
எங்கள் சூப்பர் ஸ்டார் போன்று
பஞ்ச அடிப்பதில் பலே பாண்டி நீ!
ஆனாலும்..உன் அன்புமழைக்கு
என்றும் பஞ்சமில்லை எங்களுக்கு.
சில நேரங்களில்..சாகும் முன் வந்து
சாடி விடுகிறாய் உயிர் கொடுத்து.
சில நேரங்களில் சாகடிக்க வந்து
சாடி விடுகிறாய் உயிர்களை எடுத்து.
எது எப்படியோ..நீ
எங்கள் வானிலை
ஆய்வு அதிகாரிகளுடன்
அதிலும் வரும் வாராது ரமணனுடன்
கண்ணாமூச்சி ஆடுவதில்
கேடி பில்லா கில்லாடி ரங்கா!
................பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள் 15:
குறிப்பு-இவை குறளுக்கு விளக்கவுரை அல்ல குறளைப்படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்புகள்..குறையிருந்தால்...இலக்கியவாதிகள் மன்னிப்பீர்களாக.!
ஆகாயம் உன்னை
அணை கட்டி தடுக்கவில்லை
ஆனாலும்
உன் வரத்துக்கும் போக்குக்கும்
அட்டவணை ஏதுமில்லை
அட..மழையே!
டமால்...டுமீல் என்று
இடி மின்னலுடன்
வாக்குறுதிகள் வழங்குவதில்
எங்கள் அரசியல்வாதியையும்
நீ மிஞ்சிவிட்டாயே!
எப்ப வருவேன்? எப்படி வருவேன்? என்று
எங்கள் சூப்பர் ஸ்டார் போன்று
பஞ்ச அடிப்பதில் பலே பாண்டி நீ!
ஆனாலும்..உன் அன்புமழைக்கு
என்றும் பஞ்சமில்லை எங்களுக்கு.
சில நேரங்களில்..சாகும் முன் வந்து
சாடி விடுகிறாய் உயிர் கொடுத்து.
சில நேரங்களில் சாகடிக்க வந்து
சாடி விடுகிறாய் உயிர்களை எடுத்து.
எது எப்படியோ..நீ
எங்கள் வானிலை
ஆய்வு அதிகாரிகளுடன்
அதிலும் வரும் வாராது ரமணனுடன்
கண்ணாமூச்சி ஆடுவதில்
கேடி பில்லா கில்லாடி ரங்கா!
................பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேகலைஞர் உரை:
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.*************************************************************************
குறிப்பு-இவை குறளுக்கு விளக்கவுரை அல்ல குறளைப்படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்புகள்..குறையிருந்தால்...இலக்கியவாதிகள் மன்னிப்பீர்களாக.!
*************************************************************************
இன்றைய வேகமான உலகம் ....
****************************************************************************
இன்றைய வேகமான உலகம் ....
****************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |