google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அய்யோ தேவுடா யாரேனும் இந்தியில செப்புங்கப்பா...

Friday, April 05, 2013

அய்யோ தேவுடா யாரேனும் இந்தியில செப்புங்கப்பா...அருந்ததியருக்கு திமுக கொண்டு வந்த திட்டங்களைப் பாரீர்.. பாரீர்..: கருணாநிதி..
அருந்ததியர் சமுதாயத்தின் பால் எனக்கு எந்த அளவிற்கு ஈடுபாடு உண்டு என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு கூறவேண்டுமேயானால், என்னுடைய அணுக்க தொண்டராக- என்னை அன்றாடம் பராமரிப்பதிலே தன்னை முழு அளவிலே ஈடுபடுத்திக் கொண்டவராக பணியாற்றும் தம்பி நித்யாவே அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஏன், கழகத்தின் 3 துணை பொதுச் செயலாளர்களிலே ஒருவரே அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.
கருத்து கருந்தேள்-
அய்யயோ...தலீவரே! சத்தம் போட்டு கூவாதீங்க ...அம்மா காதுல விழுந்திடப்போகுது ..அப்புறம் அருந்ததியர் சமுதாயத்துக்கு அவுங்க அள்ளிக் கொடுத்தத கதைகதையாச் சொல்லப்போறாங்க  இதுல வேற இது தேர்தல் நேரம்...ஆங்   *******************************************************************************
 
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் தாமதமாக வழங்கப்படுவது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்............நன்றி-தினமணி
கருத்து கருந்தேள்-
அவிங்க...எங்க படிக்கிறாய்ங்க...எல்லோரும் போராட்டம்ல பண்றாய்ங்க.....இப்ப மடிக்கணினி கொடுத்தீங்கனா எல்லோரும் ட்வீட்டர்ல  கீசுக்கிட்டு இன்னும் மோசமால  அலைவாய்ங்க..அம்மானா அம்மாதான் ..பிள்ளைக படிச்சு  முடிஞ்சப்பிறகு வழங்கிக்கலாம்  

******************************************************************************கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பை போராட்டக் குழுவினர் 200 படகுகளில் கடல் வழியாக சென்று முற்றுகையிட்டனர்.......நன்றி-தினகரன் 
 
 கருத்து கருந்தேள்-


 அய்யோ...பாதுகாப்பு...ஜி............இவிங்க...இப்படி ஓட்டப்படுகிலயே உள்ள வந்துட்டாய்ங்க...
இவிங்களாவது பரவாயில்லை.
காந்தியஅஹிம்ஸா வாதிக நாளைக்கு நம்ம நட்பு நாட்டு சிங்களர்கள் கட்டுமரத்தில ஏறியே வந்துடுவாய்ங்க போலத்தேரியுதே....அவிங்க ராஜபக்சே மிருகவாதிக...


*******************************************************************************
தமிழீழம் விரைவில் மலரும்: யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை
ஒருங்கிணைந்த இலங்கையை இதுவரை பாஜக வலியுறுத்தி வந்தது. தற்போது அந்த முடிவைக் கைவிட்டு தமிழீழத்தை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது...................................................நன்றி-தினமணி 
கருத்து கருந்தேள்-  

அண்ணேன்...ஜி.... கொஞ்சம் பக்கத்தில வந்து சொல்லுங்க....தேர்தல் சத்தத்தில நீங்க சொல்றது காதுல விழமாட்டேங்குது.... ஆங்... என் வால் கொடுக்கப் பார்த்து பயப்படுறீங்களா....பயப்படாதீங்க எனக்கு கொடுக்குலதான் விஷம்..........உங்களுக்கு உடம்பு புல்லா  விஷம்..........அவ்வவ்வ

********************************************************************************வளர்ச்சியை நோக்கி நாடு முன்னேறுகிறது: ராகுல் காந்தி....
இந்தியர்கள் தைரியத்துடனும் உறுதியான எண்ணத்துடனும் செயல்படுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டு இருக்கிறது..............................நன்றி-மாலைமலர் 

கருத்து கருந்தேள்-   
அண்ணன்...   நீங்க இன்னும் குயந்தையாவே இருக்கீங்க....இங்கலாம் என்ன பேசிக்கிடுறாங்க தெரியுமா...? நாடு ஹரிதாஸ் மாதிரி ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் பரவாயில்ல சினேகாவையும் சிவதாசை வச்சு சரிபன்னிக்கலாம்....இது  மாட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு எருமை மாடு மாதிரி (காமஉணர்ச்சியைத் தவிர)  எந்த உணர்ச்சியும்  இல்லாமல் இருக்கு ..அப்புறம் வளர்ச்சிக்கு எங்கே போக..........அய்யோ தேவுடா....இவருக்கு யாரேனும் இந்தியில செப்புங்கப்பா       


நியாயன்...........................மார்களே! இது நகைச்சுவை பதிவுதான் யாரும் கோபத்தில் கருத்து கருந்தேள் கொடுக்கை உடைச்சிடாதீங்க....அது ஆல்ரெடி உடைஞ்சித்தான் இருக்கு... நியாயன்.......................மார்களே!இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1