google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கமலின் பிட்டர் சாக்லேட் கதை என்ன...?

Thursday, April 04, 2013

கமலின் பிட்டர் சாக்லேட் கதை என்ன...?


இன்று வலைதளங்களில் கோலிவுட் நொறுக்குத்தீனியாக பேசப்படுவது கமலின் பிட்டர் சாக்லேட் படம் பற்றியே......
விஸ்வரூபம்-2 க்குப் பிறகு கமல் இயக்கி நடிக்கும்  பிட்டர் சாக்லேட் (BITTER CHOCOLATE) படத்தில்  கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் நடிக்க மறுத்துவிட்டதாக அவரே ட்வீடரில் கீச்சியுள்ளார்....





















 
 ஸ்ருதி தன் தந்தையும் சகலாகலா வல்லவனுமான கமலை விட ரொம்பப் பிஸி என்பதே உண்மையான காரணம்  தற்சமயம் கமலஹாசன் ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தன்று (ம்...ம்...அன்றைக்கும்  யாராவது தடையோ  வடையோ சுடாமல் இருந்தால்...?) வெளிவரவிருக்கும்  விஸ்வரூபம்-2 படத்தின் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார்

http://cinesiren.com/wp-content/uploads/2013/04/shruti-hassan-hot-photo.jpg


அதே நேரம் ஸ்ருதி ஹாசனோ அவரைவிட அதிதீவிரமாகத் தெலுங்கு
Balupu, Yevadu, Race Gurram,மற்றும் இந்தி D-Day ,Ramaiya Vasta Vaiya, போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி வரிசையில்............


பிட்டர் சாக்லேட் படத்தின் கதை பிடிக்காமலே ஸ்ருதி விலகிக்கொண்டதாக நம்ம கோலிவுட் வலைத்தளப் பட்சிகள்  படபடக்கின்றன.....
அதனாலேயே நாம் கமலின் பிட்டர் சாக்லேட் கதை என்ன...?
என்று ஆராய ஆரம்பித்தோம்....
கமலின் இந்தப் பிட்டர் சாக்லேட் திரைப்படத்தின் கதையும்  

bitter chocolate என்ற பெயரில் பிங்கி விரானி (Pinki Virani) இந்தியாவில் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றி எழுதிய ஒரு பிரபல புத்தகத்தின்  தாக்கமாக இருக்குமோ...? 
அவ்வாறு இருக்குமென்றால் அவரது பிட்டர் சாக்லட் உண்மையில் ஸ்வீட் சாக்லட் ஆகவே இருக்கும் இன்றைய சமுதாய பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் படமாகத்தான் இருக்கும் 
இந்தப் புத்தகம் இந்தியாவில் நடுத்தர மற்றும் உயர் வகுப்பு குடும்பங்களில் பதினாறு வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களது சொந்த வீடுகளில் அவர்களின் நம்பிக்கையான பெரியவர்களாலேயே அவ்வப்போது தவறாகப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதை ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் புலனாய்வு அடிப்படையில் வெளிப்படுத்துகிறது 
பிட்டர் சாக்லேட் (BITTER CHOCOLATE) என்ற வார்த்தை பதமே கசப்பான சாக்லேட் என்ற அர்த்தத்தில் முரண்பட்டதாகவும் உள்ளது அதே நேரத்தில் உலகின் வெளிச்சத்துக்கு வராத பக்கத்தைக் குறிப்பிடவும் பயன் படுத்தப்படுகிறது.
பிங்கி விரானி தனது BITTER CHOCOLATE புத்தகத்தில் இந்தியா முழுக்கப் பயணித்து டாக்டர்கள், குழந்தை உளவியலாளர்கள், மன நல வல்லுநர், சமூகத் தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அதிர்ச்சி சாட்சியங்களை மூன்று குறிப்பேடுகளாகப் பதிவிட்டுள்ளார்....
முதல் குறிப்பேட்டில் உள்ளார்ந்த பகுப்பாய்வு மூலம் ஏன்? எப்படி? இவர்கள் பாதிக்கப்பட்டார்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் பேரழிவுகள் என்ன? என்பதியும் பதிவிடப்பட்டுள்ளது


இரண்டாவது குறிப்பேட்டில் தங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த ஆண்களால் குழந்தைகளாக இருக்கும் போதே சீரழிக்கப்பட்ட இரண்டு பெண்களின் நிஜ வாழ்க்கை பதிவிடப்பட்டுள்ளது 
மூன்றாவது குறிப்பேட்டில் பெற்றோர் மற்றும் அவர்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட கட்டமைப்பு இத்தகைய நேரங்களில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை தீர்வுகள் போன்றவைகளை ஒரு பாடம் போன்று சொல்லியும்  தேசிய ஒருங்கிணைப்பு உதவி மையங்கள் பற்றி குறிப்பிட்டும் பதிவிடப்பட்டுள்ளது 

இந்தப் புத்தகம் உலகிலேயே முதன் முதலாகக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உரக்க குரல் கொடுத்தப் புத்தகம் இன்றைய உலகுக்கு அதிலும் இந்தியாவுக்கு இக்காலகட்டத்தில் மிகவும் தேவையான விழிப்புணர்வு தரும் புத்தகம் 
உண்மையில் கமலஹாசன் ஒரு சிறந்த சமுக ஆர்வலராக  இத்தகைய கதைகளை விழிப்புணர்வு திரைப்படமாக எடுத்தால் அவரை விடச் சிறந்த சமுக ஆர்வம் கொண்ட சினிமா பிரபலம் யாரும் இருக்க முடியாது....
இத்தகைய கதைகளைத் திரைப்படமாக எடுக்கும் போது ஏதேனும் ஒன்றிரண்டு சமூகங்களையும் சில காம-மதவெறியர்களையும் படத்தில் காட்சிப்படுத்தவேண்டிய நிலைவரும் அப்போது கமல் விஸ்வரூபத்தை விட இன்னும் நூறு மடங்கு அதிகச் சமுதாய எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியது வரும் அதற்குரிய தில் அவரிடம் உண்டு என்பதையும் நாம் அறிந்ததே! 

(இப்பதிவு எனது கற்பனையான அபிமானமே...உண்மையில் எப்படி என்பது உலகநாயகருக்கு மட்டுமே தெரியும்.........எவ்வாறாயினும் அவருடைய சமுதாய விழிப்புணர்வு சிந்தனையை வாழ்த்துவோமாக...!)   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1