google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாட்ஷா (தெலுங்கு)-திரைவிமர்சனம்

Wednesday, April 17, 2013

பாட்ஷா (தெலுங்கு)-திரைவிமர்சனம்


freeonlinephotoeditor
பாட்ஷா (தெலுங்கு)-
ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வாலுடன் இணைந்து கலக்கும் காதல் அதிரடி பொழுது போக்குத் திரைப்படம் இத்தாலி,சுவிஸ் போன்ற குளு குளு நாடுகளில் எடுக்கப்பட்டுக் கொளுத்தும் கோடைவெயிலுக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக வந்துள்ளது 

http://prawasis.in/wp-content/uploads/mvbthumbs/img_56849_baadshah-latest-hq-stills-ntr-kajal-aggarwal.jpg

ராமாராவாக இருக்கும் ஜூனியர் என்டிஆர்.ஜானகியான காஜல் அகர்வாலுடன் காதலில் கொஞ்சிக் குழாவுவதுடன் படம் நகர்ந்து .அவரது நண்பரின் மரணத்துக்குப் பிறகு தாதா பாட்ஷாவாக மாறியதும் சூடு பிடிக்கிறது....

freeonlinephotoeditor

கதை-வள வள வென்று  மாபியா கும்பல்,கொலை,கொள்ளை என்று நீட்டி முழக்கி..தலையைச் சொரிய வைக்கிறது ஆனாலும்  ஜூனியர் என்டிஆரின் அலங்காரமான தோற்றம், ஸ்டைலான நடவடிக்கை,நவநாகரீக நடன நகர்வுகள்,வசனம் வீச்சு...பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது 

freeonlinephotoeditor  

இசை எஸ்.தமன்(S.Thaman) இசையில் இரண்டு பாடல்கள் முனுமுனுக்க வைக்கின்றன நம்ம சிலம்பரசன் அதுதாங்க STR பாடிய DIAMOND GIRL கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது  இயக்கம் ஸ்ரீனி வைத்லா(Srinu Vaitla.) கூட்டம் கூட்டமாக நடிகர்களை வைத்து நல்லாவே கும்மாளம் அடிக்கிறார்.

freeonlinephotoeditor

நடிகர்கள்-ஜூனியர் என்டிஆர்,காஜல் அகர்வால்,முகேஷ் ரிஷி,பிரதீப் ராவத்,ஆஷிஷ் வித்யார்த்தி,சாயாஜி ஷிண்டே,இவர்களுடன் கோமாளி போலிஸ் கமிஷனராக நாசர்,கோமாளி போலிஸ் அதிகாரியாகப் பரமானந்தம் சுஹாசினி மணிரத்தினம்...இப்படி ஒரு பெரிய நடிகர்-நடிகைகள் பட்டாளமே நடித்துள்ள பாட்ஷா பொழுது போகாதவர்கள் பார்க்க வேண்டிய பொழுது போக்குப் படம் ...

எதுவுமே முழுமையாக இல்லாமல்..தயிர் சாதம் உறுகாய் போன்றும் ஊறுகாய் தயிர்சாதம் போன்றும் படைத்து உண்ணச் சொன்னால் எப்படி இருக்கும் அப்படி இருக்கு படம்..
கோலிவுட் அதிரடி கதாநாயகர்களை பின்னிப் பிடல் எடுக்கும் டோலிவுட் அதிரடி கதாநாயகர் ஜூனியர் என்டிஆர் பலமடங்கு அதீதமாக தெரிகிறார்..
பாட்ஷா (தெலுங்கு) கதையும் ஜூனியர் என்டிஆரின் அதிரடி ஸ்டில்லும் வரவிருக்கின்ற நமது தமிழ் திரைப்படத்தை யாருக்கேனும் நினைவுப் படுத்தினால் நான் பொறுப்பல்ல... தலைவா...இதை யாரேனும் தமிழில் டப்புனா....கஷ்டம்தான்  

       
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1