google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கடவுகளைக் காண்பது எப்படி...?

Thursday, April 18, 2013

கடவுகளைக் காண்பது எப்படி...?




--------------குறள் தந்த கவிதை-3------------------------  

மலருக்குள் 
மறைந்திருக்கும் 
நறுமணம் போல் 
நல்லோர் உள்ளத்தில் 
நற்செயல்கள்  
நிறைந்திருக்கும் 
வெளியே தெரியாது 


நாற்றமெடுக்கும் 
சாக்கடைப் பூக்களும் 
நாட்டில் உண்டு.....
பார்ப்பதற்கு 
பளிச் என்று இருக்கும் 
பக்கத்தில் சென்றால் 
மறைந்திருந்து வெளிப்படும் 
வாந்தியெடுக்கும் வாசம் 
ஆன்மீகத்தில் அவர்கள் உண்டு 
மதம் பிடித்த  மனிதர்கள் என்று.
மலர் மனத்தை 
சுவாசத்தால் 
முகர்ந்து அறிவது போல் 
நல்லோரை 
சகவாசத்தால் அறிந்து 
அவர் வழி வாழ்ந்தால்.....

இவ்வுலகில்
துயர் நோய்  தொடராது 
சுகவாசத்தில் 
நீண்ட நாட்கள் வாழலாம்
நல்லோர் எல்லோரும் 
நல்ல கடவுள்களே!

                 
                             ............................பரிதி.முத்துராசன்               



மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1