google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தமிழ்சினிமாவின் (தலை)விதிகள்(பகுதி-3)

Thursday, April 04, 2013

தமிழ்சினிமாவின் (தலை)விதிகள்(பகுதி-3)


எந்த ஒரு திரைப்படமாயினும் அதன் சிறப்பை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த மூன்றாவது விதியே..புதுமை (நூதனம்)

3. புதுமை(INNOVATION)-
இது சினிமா தொழில்நுட்ப அளவில் ஒலி-ஒளி நுட்பம்,இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகள் அதன் உபயோக அளவீடு மட்டுமல்லாது புதுமையாகக் கதை,திரைக்கதை அமைப்பு,காட்சிகளை வெளிப்படுத்தும் நூதனவிதம்  இப்படி நிறைய வகைகளைக் குறிக்கும் 



ஆங்கில திரைப்படங்கள்தான் புதுமைகளைப் புகுத்துவதில் உலகத் திரைவானில் முன்னோடிகளாக இருக்கின்றன 1960-ல் சில இளம் தயாரிப்பாளர்கள் மற்றும் இளம்
 இயக்குனர்கள் புதிய உத்திகளை உபயோகப்படுத்திச் சுதந்திரமாகப் பெரிய ஸ்டுடியோ மரபுகளிலிருந்து மாறுபட்டத் திரைப்படங்களால் "அமெரிக்கப் புதிய அலை"("American New Wave")-யை உருவாக்கினார்கள்.. 

நிறைய வன்முறைக்காட்சிகள் நிறைந்த திரைப்படம் -Bonnie and Clyde-நகைச்சுவை தொனியில் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் நயமாக சொல்லப்பட்டு நிறைய விருதுகள் பெற்றது ...

அதிலிருந்து தொடங்கி அதன் முழுத் தொழில் நுட்பத்தையும் நாம் அவதார் திரைப்படத்தில் காணலாம் 

சரி தமிழ் சினிமாவின் தலைவிதியை பார்ப்போம்...
இங்கே பாரதிராஜா காலக்கட்டத்தில் தொடங்கிய புதுமை...ஸ்டுடியோக்களை விட்டு வெளியேறி ஒரு சுதந்திரமான போக்கில்...
அதைத் தொடங்கி நிறையத் திரைப்படங்கள் புதுமை என்று சொல்லிக்கொண்டன ஆனால் முதுவதும் புதுமையான திரைப்படம் எதுவும் தமிழில் ஏன் இந்திய திரைவானில் இல்லாதது துரதிஷ்டமே... 

சமீபத்தில் வந்த விஸ்வரூபம் ஒலிவடிவ-தொழில் நுட்பத்தில் AURO 3-D என்று ஒன்றிரண்டு திரைஅரங்கில் படம்காட்டிவிட்டுப் புதுமை என்று பீத்தல் பீற்றிக்கொண்டு வெற்றிப்படவரிசையில் சேர்ந்துகொண்டது.ஆனால் நடிப்பில் வேண்டுமெனில் கமலஹாசன் புதுமைசெய்திருந்தார் எனலாம் AURO 3-D பற்றிய எனது பதிவு.... விஸ்வரூபமும் ஆரோ 3D ஒலி வடிவமும்











































அதேநேரத்தில் விஜய் நடித்த அதிரடித் திரைப்படம் துப்பாக்கி-யில்..அவரது நடிப்பின் அதிரடி வேகத்துக்கு ஈடு இணையான அழுத்தத்தை புதுமையாக ஒளிவடிவில் சந்தோஷ் சிவன் மிக முழுமையான மற்றும் சக்திவாய்ந்த டிஜிட்டல் படத்தை உருவாக்கும் புதுவகை ARRI ALEXA - டிஜிட்டல் மோஷன் பிக்சர் கேமரா அமைப்பை (PL mount lenses, a Super 35 sized CMOS sensor shooting up to 2880 x 2160 resolution)  உபயோகப்படுத்தி படத்துக்கு உயிரோட்டம் கொடுத்தார்.  
The Specialist - filmed with ARRI ALEXA & Panther dollies & cranes!
                            thanks-YouTube-PANTHERinfochannel

சினிமாத்துறையில் தொழில்நுட்பரீதியாகப் புதுமைகள் செய்யவேண்டுமெனில் அதற்குரிய செலவினங்களைத் 




 thanks-YouTube-teammurugadossTHUPPAKKI - Official Theatrical Trailer HD

தாக்குப்பிடிக்கும் நிலையில் அந்த திரைப்படம் உலக அளவில் வெற்றிப்படமாகப் பிரபலமாகி அதிக வசூல் அறுவடை செய்தால்தான் உண்டு  இல்லையேல் தயாரிப்பாளர் கையில் திருவோடு ஏந்தும் நிலை வந்துவிடும்...எனவே  இஃது இங்கே சாத்தியமில்லாத நிலை

பிரபலமான நட்சத்திர நடிகர் ரஜினிகாந்த்  மற்றும் நட்சத்திர இயக்குனர்-ஷங்கர் போன்றவர்களால் மட்டுமே எந்திரன் திரைப்படத்தில் இது சிட்டி போன்ற புதுமையான ரோபார்ட் கதாப்பாத்திரம் படைக்கப்பட்டு அதுவே பாதி புதுமையும்  மீதி வெறுமையும் என்ற நிலையில் வெறுமை  ரஜினி-ஐஸ்வர்யா ராய்..பாடல் காட்சிகளால்...ஏ.ஆர்.ரகுமான் இசையாலும் சரிகட்டப்பட்டது. 























ஆனால் கதை அமைப்பு,காட்சிகளைப் புதுமையாகச் செய்து தமிழ் திரைப்படங்கள் சில சாதனைகள் செய்துள்ளன..
அஜித்தின் மங்காத்தா திரைப்படம் புதுமையான கதையமைப்பாலும் நிறைய அதிரடி திருப்பங்களாலும் அஜித்தின் யதார்த்தமான தோற்றம் மற்றும் நடிப்பு அப்படத்தை வெற்றிப்படமாக்கியது 

இன்னும் தமிழ் சினிமாவில் சிலர் சாதனை செய்கின்றனர்.. பாடல்களில் புதுமை செய்து உலகப் புகழ் அடைந்த...3 திரைப்படத்தில் வரும் WHY THIS KOLAIVERI DI....என்ற தமிங்கலம் பாடலும் பாடிய நடிகர்-பாடகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர்..அப்பாடலை வெளிப்படுத்திய விதம்    எல்லாம் புதுமையாக இருந்தது...


சமீபத்தில் வந்த ஹரிதாஸ் திரைப்படத்தின்  கதை  ஆட்டிசம் விழிப்புணர்வு பற்றிச் சொல்லி அதே நேரத்தில் புதுமையாக வெளிப்படுத்திய விதத்தாலும் கதையுடன் பார்வையாளர்களை ஒன்றிணையச் செய்து வெற்றிப் பெற்றது அதே நேரத்தில் அப்படம் சரியான முறையில் வெளிப்படுத்தப்படவில்லை என்றால்  கதைக்கரு சிதைந்திருக்கும்

பாலாவின் பரதேசி கூட ஒருவகையில் புதுமையானதே காட்சிகள் சிறப்பாக வெளிப்படுத்திய விதம் யதார்த்தம் நழுவாமல் இயக்குனர்  பார்த்துக்கொண்ட விதம்........

படம் துவக்கமே ...நியாயன்மா....ரே  என்று   பறையடிக்கும் ஒலி காதுக்கும் ...சாலூர் கிராமம் அதன் வரியா நிலை ஓலைக்குடிசைகள் இடையே நகர்ந்து செல்லும்  ஒளிக்காட்சிகள்....நம் கண்களுக்கும் புதுமையாய் விருந்தாக்கி....பறையடிக்கும் அதர்வாவை காட்டுவது.....இப்படி நிறையச் சொல்லலாம்  


இப்படிச் சினிமாவில்  INNOVATION முக்கிய இடம் பிடிக்கிறது...புதுமையை யார் முதலில் அறிமுகப்படுத்துகிரார்களோ அவர்கள் பணம் புகழ் எல்லாம் பெறுவார்கள் முதலில் தமிழில் வந்த மை டியர் குட்டிச்சாத்தான்

திரைப்படம் 3-D தொழில் நூதனத்தைக் காட்டி சக்கப்போடு போட்டதை யாவரும் அறிவோம் அதே நேரத்தில் INNOVATION VS ORIGINALITY...அவைகளுக்குள்ளும் சண்டை நடக்கும் அதில் எது வெற்றி பெற்றாலும் அஃது இணிக்கும் கரும்பு தக்கைத் திரைப்படம் ஆகும்..அவை இரண்டும் இல்லாதது மொக்கை திரைப்படம் ஆகும் 

விரைவில்...  
4. கருத்து ஒருமைப்பாடு (NTEGRITY TO THE CONCEPT:)-பார்வையாளர்களை ஈர்க்கும் சக்தி,...பற்றித் தமிழ்சினிமாவின் (தலை)விதிகள்(பகுதி-4)-ல் பார்ப்போம்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1