google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சேட்டை-சினிமா விமர்சனம்

Wednesday, April 10, 2013

சேட்டை-சினிமா விமர்சனம்



சேட்டை-
கிச்சு கிச்சு மூட்டும்  படம் என்றார்கள் அதென்னவோ கிளுகிளுப்பு ஊட்டும் படம் போல் இருக்கிறது...
பிற மொழிகளிலிருந்து பிச்சை எடுத்த கதை ஆனாலும் பரவாயில்லை அதைக்  கலாச்சாரம் சிதையாமல் காக்கவேண்டும் என்ற எண்ணமில்லை  ஆர்.கண்ணன் இயக்குர்க்கு

இப்படி ஜில் ஜில் ஜொள்ளுக் கதைகள்  முன்பு மலயாளத்திலிருந்தான்  சேட்சிகளைக் காட்டி ஜொள்ளு விடுவார்கள்..இப்போது இந்தியிலிருந்து இறக்குமதி செய்துள்ளார்கள்...ஆந்திரா அதிரடி குத்துபாட்டுகள் இல்லாதது ஆறுதல்

ஆர்யா-வெயிட்டான கதைகளில் கடவுள் மாதிரி கம்பீரமாக இருந்தார் இப்போதெல்லாம் லைட்டான கதைகளில் சைட் அடிப்பதிலேயே கடித்துக்கொண்டிருக்கிறார் ...இது சறுக்கலின் ஆ....ரம்பம்... சுதாரித்துக்கொண்டால் (சூர்யா)சூரியனைப்போல் பிரகாசிக்கலாம்

சந்தானம்-சிலநேரங்களில் சந்தன மனம் வீசும் சந்தானம் இந்தப் படத்தில் முழுக்க டாய் லெட் உள்ளேயே அடைந்து கிடப்பதால்...டாய் லெட் மனம் வீசும் சந்தானம் அவருக்குப் பேசவும் நடிக்கவும் வாய்ப்பில்லை

பிரேம்ஜி-அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை ...அவரும் சிரிக்க முடியவில்லை சிரிக்க வைக்கவும்  முடியவில்லை கதை அப்படி..பாவம் அவர் என்ன செய்வார்..?




அஞ்சலி-முன்பெல்லாம் பஞ்சத்தில் வாடிய பால திரிபுர சுந்தரி...இப்போது  கன்னங்கள் இரண்டும் உப்பிக் கரு மை தீட்டிய விழிகள் எட்டி  எட்டி பார்க்கும் காக்கா குஞ்சுகள் போல் தெரிகிறது..படம் முழுக்க ஆர்யா உதடுகளைக் கவ்விக்கொண்டே அலைகிறார்




ஹன்ஷிகா-அம்மணி ஒ.கே. ஓ.கே.மாதிரி ஏர்-ஹோஸ்டஸ்..ஆர்யாவை பார்க்கும் போதெல்லாம் ஆவி போல்  ஆவிகட்டியே கிடக்கிறார்..
நடிப்பு ..? அப்படினா என்ன விலை...?

காமெடி வில்லனாக....நாசர் அவருக்கு கிடைத்த அடிடா..ராமா வேலையை குதித்து குதித்துச் சரியாகவே செய்துள்ளார்
ஆக..கதை...கடத்தல் வைரம் கைமாறி போவதும் அதைத் தேடி அலையும் காட்சிகள் அதைத்தவிரப் படத்தில் எல்லாம் இருக்கு

இசை தமன்  பின்னணி இசை நிறைய நேரங்களில் வாயாலேயே சப்தம் கொடுக்கிறார்கள்...பாடல்கள் கேட்பதை விடப் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது -ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா கைவண்ணம் .  
படம்-சில நேரங்களில் கண்ணைத் திறந்து கொண்டு சிரிக்கலாம்..நிறைய நேரங்களில் கண்ணை மூடிக்கொண்டு இப்போது வரும் படங்கள் எல்லாம் இப்படித்தான் கவர்சி சாக்கடை நாற்றம் வீசி கலாச்சார சீரழிவு செய்கின்றன....சேட்டையும் விதிவிலக்கல்ல...

                                      thanks-YouTube-UTVMotionPictures

படம் அடிக்கிற வெயிலுக்குக் கொஞ்சம் குளு குளு ஏ.சி. திரையங்காக பார்த்து போய்க் கொஞ்ச நேரம் ஆர்யா-அஞ்சலி-ஹன்ஷிகா கொஞ்சல்களைப் பார்த்துவரலாம்..சூடு தணியலாம் இல்லைஎன்றால் இன்னும் சூடு அதிகமாகலாம் 

**************************************************************************

கோலிவுட் சினி பப்ஸ்...
கோடைவெயிலுக்கு குளுகுளு செய்தி..............



தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன் நடிக்கும் எதிர் நீச்சல் திரைப்படத்தில் நயன்தாராவுடன் தனுஷ் குத்தாட்டம் .






இன்னொரு கொலைவெறி .....ஆரம்பம்?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1