google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 'தலைவா'-நீ எப்ப வருவ? எப்படி வருவ?

Tuesday, April 09, 2013

'தலைவா'-நீ எப்ப வருவ? எப்படி வருவ?


இளைய தளபதி விஜய் நடிக்கும் A.L.விஜய் இயக்கத்தில் பிரமாண்டமாக உள்நாடு-வெளிநாடுகளில் உருவாகி வரும் 'தலைவா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது

மேலும் அவர், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடந்து முடிந்த தென்னிந்திய திரைப்பட நடிகர்கள்  (மௌன) உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள முடியாமல் ஆஸ்திரேலியாவில் தலைவா படபிடிப்பில்  சுறுசுறுப்பாக மிகவும் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதை  கடித தூது அனுப்பி ரசிகர்களின் ஆவல் துடிப்பை அதீதமாக  எகிறவைத்தது.






 விறுவிறுப்புச் செய்திகள்.....தலைவா திரைப்படம் ரொமாண்டிக் ஆக்சன் த்திரிலர் என்று சொல்லப்பட்டாலும் படத்தின் டைட்டில் அதில்  அரசியல் வாசம் வீசுவதையும் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்ததையும் நாம் அறிவோம்





இப்படத்தில் விஜயவுடன் இணைந்து நடிக்கும் அமலா பால் (சம்பளம் கோடியை தாண்டியதாலா?) ரொம்பப் பூரிப்புடன் இருப்பதைப் பார்த்தால் (அதுதான் ஆஸ்திரேலியாவில்   சூதாட்ட கிளப்பில் ஜெயித்த செய்தி) அம்மணிக்கு இப்படம் மிகப் பெரிய திருப்பம் தரும் 





இன்னும் மிகப்பெரிய நடிகர்கள் சத்தியராஜ்,சுரேஷ்,(சிலநேரங்களில் காமடி சந்தனம் மணக்கும்...? ) சந்தானம்...இவர்களுடன் பாலிவுட்  சூடான சுந்தரி ராகினி நந்த்வானி (Ragini Nandwani)  விஜய்க்கு எதிர்மறையான(வில்லி...?) வேடத்தில் நடிப்பதாகச்  செய்தி பீதியைக் கிளப்பியதும்...ஆக படம் வெற்றியின் கதவைத் தட்டுகிறது. 

                                          thanks-YouTube-viraps studiox

இவை எல்லாவற்றையும் விட இயக்குனர் A.L.விஜய் "ஒவ்வொரு காட்சியும்  RDX வெடிகுண்டு வெடித்தது போல் இருக்கும் என்று அளித்த பேட்டியும் பரபரப்பை ஊட்டுகிறது





அரசால் புரசலாகக் கதை.........விஜய் வெளிநாட்டிலிருந்து வந்து தனது தந்தை சத்தியராஜ் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்குவதும் தன் தந்தையின் கூட்டத்துக்குத் தலைவராவதும் என்று கசிந்து வருகின்றது (அரசியல் கூட்டமாக இல்லாமல் இஃது என்ன கூட்டமாக இருக்கும்..? நமக்கெதற்கு வம்பு....எதுவாக இருந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்துவிடும்) இப்ப நம்ம கேள்வி இதுதான்......

'தலைவா'-நீ எப்ப வருவ? எப்படி வருவ?




இப்ப நேரம் நல்ல நேரம்....
ஈழத்தமிழரின் 
இன்னல் தீர்ப்போரே 
இத்தரணியில் 
மாபெரும் தலைவர்....
மறந்துவிடாதே 
தலைவா!
உன் நடிப்பை 
சினிமா திரையில் காட்டு...
உன் துடிப்பை 
மக்கள் இதயத்தில் காட்டு...
கோட்டை வெகு தூரமில்லை 
    
**************************************************************************
 
அண்ணேன்!..எனக்கொரு டவுட்டு 
நீங்க பாராட்டுறீங்களா...? 
பள்ளம் தோண்டுறீங்களா...?
இப்பதான் ஒருத்தரு விஸ்வரூபமா வந்தவரு 
ஆளைவிட்டா போதும்..னு புலம்புனாரு 
இன்னொருத்தரோ சும்மா நாக்க கடிச்சதுக்கு
அவதூறு வழக்குன்னு ஊரு ஊராஅலையிறாரு.


அடே..தம்பி அறிவுச் செல்வா.....
மூச்ச புடிச்சி மூழ்கினாத்தாண்டா 
முத்தெடுக்க முடியும்...
இப்படித்தாண்டா..ஒருத்தரு....
நா வருவேன் எப்ப வருவேன் எப்படி வருவேன் யாருக்கும் தெரியாதுன்னு சொல்லிச் சொல்லியே...இன்னும் வந்த பாடில்லடா...நம்ம கருத்துக்கணிப்பில் கூட விஜயைத்தான் சிறந்த சமுக ஆர்வலர் ஆக தேர்ந்தேடுத்திருக்கிறாங்க...  


இவர்களில் எந்த நட்சத்திர நடிகர் உண்மையான சமுக ஆர்வலர்?



அதனாலத்தான் சொன்னேன்...எனக்கு காக்கா பிடிச்சி ஆகப்போகிறது ஒண்ணுமில்ல...இல்லைனா கலகம் மூட்ட நான் நாரதரும் அல்ல

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1