google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: IPL தேர்தல்-காவி VS கதர்

Saturday, April 06, 2013

IPL தேர்தல்-காவி VS கதர்


(குறிப்பு-இது நடந்துகொண்டிருக்கும்  IPL( Indian Premier Leaque) கிரிக்கெட் பற்றிய பதிவு அல்ல.இது  நடக்கப்போகிற IPL(Indian Political Leaders) தேர்தல் பற்றிய பதிவு................)

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மல்லுகட்ட இரண்டு அணிகள் காவிச்சட்டை அணிந்த பா.ஜ.கா அணியினர் கேப்டன் மோடி தலைமையிலும்  கதர் சட்டை அணிந்த காங் அணியினர் கேப்டன் ராகுல் தலைமையிலும் மோதி விளையாட  தயாராகிறார்கள்..



ஆனால் தமிழ் நாட்டில் இவர்கள் நிலையோ பரிதாபம் இங்கே ஈழத் தமிழர் ஆதரவு அலை வீசுவதாலும்  இருவருமே ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்து கொள்வதும்  இப்போது தேர்தலை முன்னிட்டு ஆதரவு கரம் நீட்டுவதும் இருவருமே உண்மையானவர்கள் அல்ல என்பதை  இங்கே அனைவரும் அறிவர்
  
 இவர்கள் இருவரையும் தமிழ் நாடு நம்பத் தயார் இல்லை என்பது குன்று அல்ல இமய மலையில் இட்ட விளக்குதமிழ்நாட்டில் காங்கிரசில் இருப்பவர்கள் எல்லோருமே தலைவர்கள் என்றால் பாஜக கட்சியில் இருக்கும் தலைவர்களையும் தொண்டர்களையும் எண்ணிவிடலாம்  

ஆனால் இங்கே இருக்கும் திமுக-அதிமுக நிலையோ இருதலைக்கொள்ளி எறும்பு போலக் கூட்டணியில் சேரலாமா வேண்டாமா என்று இருக்கிறது தமிழ்நாட்டில் இவர்களை விட்டால் இங்கே வேறு பெரிய படைபலம் பணபலம் அதிகார பலம் உள்ள கட்சிகளும்  இல்லை 


தி.மு.க சமீபத்தில்தான் காங்.கட்சியைக் கை கழுவியது மீண்டும் போய் கை குலுக்கினால் அவர்கள் நிலை இன்னும் படு மோசமாகும்.. இப்போது  திமுக தலீவரு நிலையோ வாழ்வே மாயம் அதுவும் அவரின் தேர்தல் வாழ்வோ மாயமோ மாயம்..ஆனாலும் இந்த அரசியல் சாணக்கியர் தேர்தல் நேரத்தில் சாமார்த்தியமாக எதையாவது செய்வார்


இங்கே உள்ள அ.தி.மு.க. கட்சியோ அதீத தன்னம்பிக்கையில் மிதப்பவர்கள் அவர்கள் யாரிடமும் கூட்டு சேர்ந்தால் தலையை பிடிக்கப் பார்ப்பார்கள் பனை மர நிழலும் சரி அ.தி.மு.க உறவும் சரி நிலையாக இருக்காது என்பதை அங்கே இருப்பவர்கள் அறிவார்கள் இவர்களுக்கும்  நாற்பதையும் அப்படியே விழுங்கி விடவேண்டும் என்று அவசர அவசமாக ஒரு ரூபாய் இட்லி அவிக்கிறார்கள்

மத்தியிலோ தேர்தல்களம் கிழட்டு ஆடும் குட்டி ஆடும் மோதிக்கொள்ளும் ஆடுகளம் போல் உள்ளது.இவர்கள் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் நாட்டுக்கு எதுவும் ஆகப்போவதில்லை அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள திமுக-அதிமுக இரண்டு பெரிய கட்சிகளும் தனித்தனியாக நின்று அதிக இடங்களை அள்ளிக் கொண்டால்  மத்தியில் வருபவர்களுக்குத் தலைவலியை தரலாம்...அப்படியே காரியங்களை சாதிக்கலாம் 

தேர்தல் அறிவித்து விட்டால் கருத்துக்கணிப்புக்கு அனுமதிக்க மாட்டார்கள் எனவே அன்பு பதிவுநேசிகளே! நீங்களும்  வாக்களித்து விளையாடுங்கள்...
இங்கே வாக்களிப்பவர்களுக்குக் கையூட்டு தரப்படாது.இது தேர்தல் மாதிரி ஒருநாள் வாக்களிப்பு அல்ல ஒரு மாத காலம் வரை இந்த வாக்களிப்பு  இருக்கும்.........நீங்களே வாக்களித்து ..நீங்களே எண்ணிக்கொள்ளுங்கள் ..ம்..இங்கே கள்ள வோட்டும் போடமுடியாது ..ஒருவர் ஒரு  இணைப்பிலிருந்து ஒரு வாக்கு மட்டுமே பதிவிட முடியும் வேண்டுமெனில் வாக்கை மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு...

*******************************************************************************
கருத்துக்கணிப்பு-

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு....?

****************************************************************************


              -------------------இது கருத்து கருந்தேள் பக்கம்------------------- 


விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டப்பேரவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய மறுத்துவிட்ட உயர் நீதிமன்றம், அந்தத் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பெற்ற வெற்றி செல்லும் என்பதை உறுதி செய்துள்ளது. ...............நன்றி-தினமணி 
(யோவ்..கருத்து கருந்தேளே  நானும் பெரிய அரசியல்வாதி...
அரசியல்வாதி....அரசியல்வாதிதான்  என்னைப்  பற்றி எதுவும் எழுத மாட்டியா....?...நான் பெரிய அரசியல் வாதிங்கிறதுக்கு ஆதாரத்தைப் பாத்தியா....ஹைகோர்டே சொல்லியாச்சு...)

கருத்து கருந்தேள்............
அண்ணேன்...உங்களுக்கு பாடி ஸ்ட்ராங்கு....பேஸ்மென்ட்  வீக்...நமிதா அம்மணிய இஸ்க்..இஸ்க்னு உங்க கட்சி கொ.ப.செ.-வாப் போட்ட்டா பேஸ்மென்ட் ஸ்ட்ராங் ஆகும் இல்லையினா அப்படியே நம்ம பவர்ஸ்டார் கிட்ட இஸ்கான் கம்பி வாங்கி பேஸ்மெண்ட ஸ்ட்ராங்  பண்ணுங்க அண்ணேன்........ 
கருப்பு எம்ஜிஆர்... அண்ணேன்..
 என்னால உங்களுக்கு சிகப்பு எம்ஜிஆர்  பாட்டு வேணும்னா டேடிகேட்தான்  பண்ணமுடியும்
வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்...அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் அம்மாவைச் சேரும்....
அடேய் கருப்பு..கருந்தேளே....எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தையே அம்மா..தான் ...ஆங்...
அண்ணேன்...நான் உங்க அம்மா-வைச் சொன்னேன் அதிமுக அம்மா-வைச்   சொல்லல.....ஹி..ஹி..    
     
********************************************************************************
இன்றைய தத்துவம்....................

























ஓன்று சேர்ந்தால் 
நீ உலகை வெல்லலாம் 
எதிரிகளை என்றும்
விரட்டியடிக்கலாம்  
இதுதான்.........
கூட்டணி தத்துவம் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1