google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கோச்சடையான் வெற்றிபெறுமா....?

Thursday, April 11, 2013

கோச்சடையான் வெற்றிபெறுமா....?





ரஜினிகாந்த் நடிக்கும்   KS ரவிக்குமார் எழுதி சௌந்தர்யா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் கோச்சடையான் 3-D மட்டுமன்றி அவ்தார்(Avatar) ஹாலிவுட் படத்தில் பயன் படுத்திய மோஷன் கேப்சர்(Motion capture) என்ற புதிய தொழில்நுட்ப(performance capturing technology)த்தில் வரும் முதல் இந்தியத் திரைப்படமாகும் இதன் முக்கியப் பணிகள் தற்போது லண்டன், ஹாங்காங் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் நடந்து விரைவில் திரைக்கு வரும் நிலையில் உள்ளது



பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களே இத்தகைய புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் படம் காட்டுகின்றன அதற்கு முழு முதல் காரணம் தயாரிப்புச் செலவினங்கள் அதிகமாவதும் அச்செலவினங்களை உலகமெங்கும் அப்படங்கள் திரையிடப்பட்டு வெற்றியடைந்து அதிக வசூல் செய்தால் மட்டுமே அவர்கள் தாக்குபிடிக்க முடியும்   

மோஷன் கேப்சர் தொழில்நுட்பம்-

                                  thanks-YouTube-DiscoveryNetworks
மோஷன் கேப்சர் என்பது பொருள்,மக்கள் அசைவை..செயல்பாட்டைப் பதிவு செய்வதாகும் இராணுவம், பொழுதுபோக்கு, விளையாட்டு, மற்றும் மருத்துவப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன
இப்போது திரைப்படங்களில் நடிகர்களின் நடவடிக்கைகளை 3D கணினி அனிமேஷன் டிஜிட்டல் தன்மையுடன் பதிவுசெய்யப் பயன்படுகிறது. அதுசரி..இந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு எதற்கு?




அதிகச் செலவில் புதிய தொழில்நுட்பத்துடன் வரும் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் மேலும் படத்தின் பிரமாண்டத்திற்குச் சரத்குமார்,ஆதி,தீபிகா படுகோன்,ஷாக்கி ஷெராப்,நாசர்..போன்ற மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளதும்..A.R.ரகுமான் இசை,ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு(இவர்தான் இப்படத்தின் உண்மையான சூப்பர்மேன் இவர் சொதப்பினால் எல்லாம் போச்சு)    இந்த செலவுகளைத் தாக்குபிடிக்குமா? 

இத்தகைய படங்கள் வணிகரீதியில் நகரங்களில் அதுவும் குழந்தைகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் அறுவடைசெய்யும் ஆனால் அது மட்டும் போதுமா? மாஸ் ஹீரோவான ரஜினி அனைத்து ரசிகர்களிடமும் அனைத்து சென்டர்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்றால் மட்டுமே உண்மையான பலன் கிடைக்கும் .



இதை உணர்ந்துதான் கோச்சடையான் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடக்கூடாது என்பதால் பணம் அறுவடைக்குத் தமிழ்நாட்டை மட்டுமே நம்பியிராமல் தெலுங்கில் விக்கரம சிம்ஹா என்ற பெயரிலும் மற்றும் மலையாளம்,ஹிந்தி,ஆங்கிலம், ஜப்பனீஸ்..மொழிகளிலும் வருகிறது மேலும் இத்தாலியன்,ஸ்பானிஷ் பதிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன


                           
  thanks-YouTube-R1uTubeTv
திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களால் இந்திய திரைவானில் புதுமையில் பூக்கும் கோச்சடையான் வெற்றி மனம் வீச வாழ்த்துவோம் 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1