google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வறண்டு கிடப்பது வயற்காடு மட்டுமல்ல

Monday, April 22, 2013

வறண்டு கிடப்பது வயற்காடு மட்டுமல்ல

குறள் தந்த கவிதை-12 

http://english.globalgujaratnews.com/uploads/news/07_2012/1342341759_farmer.jpg  

உன் வரவுக்காக 
வாய் பிளந்து 
பசியோடு கிடப்பது 
பயிர் நிலம் மட்டுமல்ல 
என் வயிறும்தான்...!

வறண்டு கிடப்பது 
வயற்காடு மட்டுமல்ல 
என் வயிறும்தான்

மண்ணில் 
நீ விழுந்தாலும்
நெல்மணிகளாக
மாறுகின்றாய்...

தண்ணீரில் 
நீ விழுந்தாலும்..
குடி தண்ணீராய் 
தாகம் தீர்க்கின்றாய்..


 

மழையே!
என் கண்ணீர் மழையை   
காணிக்கை யாக்குகிறேன் 
உன் வரவுக்கு 
காத்துக்கிடக்கிறேன்  
......................பரிதி.முத்துராசன்  



கவிதை தந்த குறள்-12   
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

 

***************************************************************************

இன்று புவி நாள் 2013-க்கு 
இக்கவிதை சமர்ப்பணம்


*****************************************************************************
-----புவி நாள் 2013------------



நீங்கள் படம் பிடித்த இயற்கைக் காட்சிகளை இங்கே பகிருங்கள் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1