google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்னது..மரகத லிங்கத்தைக் காணோமா?

Monday, April 22, 2013

என்னது..மரகத லிங்கத்தைக் காணோமா?




சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார் தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த நண்பர் ...மரகத லிங்கத்தைக் காணவில்லையப்..பா என்று 
இந்தச் செய்தியை  பேப்பரில் படித்ததால் நான் எதுவும் கேட்காததுபோல் இருந்தேன்..

மரகத லிங்கம் என்பது சுமார் 20 வருடங்களுக்கு முன்புதான் கேள்விப்பட்டேன் அதுவும் ஸ்ரீலஸ்ரீயோ ..? ஸ்திரிகள் ஸ்ரீ..யோ?  பிரேமானந்தா என்ற சாமியார் வாயிலிருந்து பக்தர்களுக்கு லிங்கம் வரவழைத்து சித்து வேலைகள் செய்தார் என்றும் பிறகு பக்தைகளுக்குத் தனியாகத்  தத்துப் பித்துக் காமலீலைகள் செய்தார் என்றும் கிடந்தார் சிறையில் பல ஆண்டுகள் ..பின்பு பரலோகம் போய்விட்டார் சிறையிலையே ...அப்போதுதான் கேள்விப்பட்டேன் இந்த மரகத லிங்கம் பற்றி..இதுவரை பார்த்ததில்லை (வயிற்றுக்குள்ளிருந்து லிங்கம் எப்படி வரும்...? என்று யாரேனும் கேட்டால் அவன் பகுத்தறிவு துஷ்டனாக போற்றப்படுவார்.எனவே அப்படி யாரும் நினைக்காதீர்கள்.)

http://www.londonforfun.com/images/Big%20Ben%20map.jpg

லண்டன் மாநகர் மத்தியில் உள்ள அரண்மனையும் கோட்டையுமான லண்டன் டவர்-ரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நமது நாட்டு பாராம்பரிய பொக்கிசமான  கோஹினூர் வரைத்தைக்கூட நேரில்  பார்த்திருக்கிறேன்...பயங்கரமான பாதுகாப்பு...ஆனால் திறந்த வெளியில்தான் இருக்கும் கண்ணாடிப் பேழை கிடையாது.நகரும் மேடையில் நின்றுகொண்டே நகர்ந்த படி சுமார் 10 அடி தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும் ..அங்கே யாரும் ஜகரண்டி என்று கழுத்தைப் பிடித்துத்  தள்ளமாட்டார்கள் ..ஆனால் இடையில் மின்சார வேலி இருக்கும் நகரும் மேடையிலிருந்து இறங்கி யாரேனும்  தொடமுயன்றால் மரண அடிதான்...ஷாக்....(யாரப்பா அது.. அங்கே மின்சாரவெட்டு உண்டா..? என்று கேட்பது...பிச்சிப்புடுவன்..பிச்சி)   

நாய்கூட நாட்டுல திருட ஆரம்பிச்சிட்டு....கலிகாலம்.
http://img1.joyreactor.com/pics/post/gif-dog-animals-thief-459841.gifஇங்கேயும்  விலைமதிப்பு மிக்க மரகத லிங்கம் தஞ்சை  சரபோஜி அரண்மனையில் இருந்ததாகவும் ..இப்போது நிலவும் மின்சார வெட்டை நன்றாகவே உபயோகப்படுத்திக் கண்காணிப்பு கேமராவின் கழுகுப்பார்வையிலிருந்து சாதூரியமாக  யாரோ நமுட்டிக்கிட்டுப் போய்விட்டதாகவும் நண்பர் புலம்புகிறார்..அது உயரம் ஒர் அங்குலம் அளவுதானே ..பிரேமானந்தர் போன்று  யாரேனும் வாயில் போட்டு லபெக்னு விழுங்கி இருக்கலாம்...  

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/special/03.12.12/naduinside2.jpg

மறுபடியும் நண்பர் வாயைத்திறப்பதற்குள்..நானே முந்திக்கொண்டேன்...நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் படத்தில் வரும்  விஜய் சேதுபதி மாதிரி  என்னது..மரகத லிங்கத்தைக் காணோமா? என்று நானும் திரும்பத் திரும்பச்  சொன்னதையே சொன்னதும் நண்பரும் எடுத்தார் ஓட்டம் 

சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான பொருட்கள் நாட்டின் பொக்கிசங்கள் அவைகளை இப்படிப் பொறுப்பில்லாமல் வைத்துக்கொண்டு காணவில்லை என்று கூப்பாடு போடுவது... என்னத்தச் சொல்வது?

https://d17tpoh2r6xvno.cloudfront.net/links/502c396013bc8_thumb.jpg

அவ்வப்போது ஹிஸ்டரி(HISTORY) தொலைக்காட்சியில் ஒர் உண்மை நிகழ்ச்சி பாண் ஸ்டார்ஸ் (PAWN STARS)என்ற பெயரில் தொடராக வந்தது... (இப்போது அதையும் காணவில்லை) அதன் தமிழாக்கம் கேட்பதற்குத் தமாசாக  இருக்கும் அதில் தாத்தா,மகன்,பேரன் என்று மூன்று கோமாளி முதலாளிகள்  வருவார்கள்..அவர்களிடம் இப்படி விலை மதிப்பற்ற பழைய பொருட்களைக் கொண்டு சிலர் அடகு வைப்பார்கள் இன்னும் சிலர் விற்பனை செய்வார்கள் ...அப்படித்தான் சில நேரங்களில் KFC முதலாளியின் மேல் அங்கி என்று ஒருவர் தூக்கிவந்தார்..   பழைய செருப்பு கூட வரும் ..அது ஜனாதிபதி வாசிங்டன் அணிந்த செருப்பு என்பார் கொண்டுவந்தவர்....உடன் அதை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் வந்து பூதக்கண்ணாடி வைத்து பார்த்துவிட்டு ..ஆமாம் என்று உறுதியளித்து அதற்குப் பத்தாயிரம் டாலர் விலை மதிப்பும் சொல்வார் 
உடனே கிழவர் மகன் ரிக் ஹாரிசன் இரண்டாயிரம்  டாலரில் பேரம் பேச ஆரம்பித்து ஐயாயிரம்  டாலரில் முடித்துவிடுவார்.....

அப்படிப்பட்ட பழம்பொருட்கள் கடைகளை நாம்  ரகசியமாகக் கண்கானித்தால் ஒருவேளை எடுத்தவர்கள் யாராவது விற்பனை செய்ய வரலாம் ஆனாலோ நம்ம மக்கள்தான் எதிலும் அதிஷ்டம்
பார்ப்பவர்களாச்சே...பாவம் மண்ணுக்குள் அலையும் மண்ணுளிப் பாம்பைக்கூட வாஸ்த்து என்று அள்ளிக்கொண்டு போகிறார்கள் குழந்தைகள் பூங்காவில் இருந்த பாம்பைக்கூடப் பிடித்துக்கொண்டு போய்விட்டதாகச்  செய்தி...அதிலும் இப்படிப்பட்ட பக்திப்பொருட்களை  விடுவார்களா...? எந்தப் பெரிய வீட்டு பூஜை அறையில் இருக்கிறதோ...?...ம்...காட்சிப்பொருளாக இருந்த லிங்கம் பூஜைப் பொருளாய்..போனால் புண்ணியம்தான் ..கடவுளுக்கு. 

http://i.imgur.com/r0qY8.gif

அது சரி...அண்ணேன்  நம்மக்கிட்டத்தான் எவ்வளவு பெரிய கில்லாடிக  இருக்காங்க...என்னலாமோ பண்ணுறாங்க ...இதக் கண்டுபுடிக்க மாட்டாங்களா....?  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1