google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நாளும்தான் மழை பெய்யுமே!

Wednesday, April 24, 2013

நாளும்தான் மழை பெய்யுமே!

http://data.whicdn.com/images/33403233/rain-Favim.com-467350_large.gif
குறள் தந்த கவிதை-14 

அண்டா குண்டாவில் 
அமர்ந்திருந்து 
ஆயிரம் மந்திரங்கள் 
அழகாய் சொன்னாலும்...

http://sarabynoe.files.wordpress.com/2012/10/tumblr_mb8o7yqwwp1ql5an1o1_500.gif

அங்கே வராத மழை
அய்யன் வள்ளுவரின்
வான்சிறப்புக்  குறளில்...
மூன்றுதான் படித்தேன்...
சென்னையில் இன்று...
முற்பகல் மழை

http://www.pictureshack.ru/images/56070_3899476.gif

அடித்த வெயிலுக்கு
நகரத்து மரங்கள் போல் 
நானும் நனைந்தேன்  
இதயம் வரை குளிர்ந்தது

http://cms.mumbaimirror.com/portalfiles/1/3/200908/Image/100809/n124.jpg

அய்யா வள்ளுவரே!
நீவீர் தெய்வப்புலவர் 
அறிந்துகொண்டேன்..





நீரின்றி வாடும் உழவர்களே!
நீவீர் கலங்க வேண்டாம் 
ஆளுக்கொரு திருக்குறளை 
கைகளில் எடுங்கள் 
ஆகாயத்தைப் பார்த்து 
அதிகாரம் வான்சிறப்பை 
நம்பிக்கையோடு பாடுங்கள்
நாளும்தான் மழை பெய்யுமே!

(அண்டா குண்டாவுக்குள் அமர்ந்து கொண்டு மந்திரம் சொல்லி மழை வரும் போது...குறள் சொல்லி மழை வரும் என்று நம்பக்கூடாதா...? யோவ் இப்படியா ஏமாற்றுவது...? ஆங்...அப்படியாவது குறள் படிக்கட்டும் என்றுதான் )

...........................பரிதி.முத்துராசன் 

கவிதை தந்த குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
கலைஞர் உரை:

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
    **********************************************************************
குறள் அதிகாரம் வான்சிறப்பு படித்து வேண்டினால் மழை வருமா? ஆம் என்பேன் மழை வருதோ?கண்ணீர் வருதோ?ஆங்.அப்படியாவது குறள் படிக்கட்டும் என்றுதான்....இதுவும் பகுத்தறிவுதான்
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1