google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மரங்கள் பீர் அடித்தால் என்னவாகும்...?

Friday, April 26, 2013

மரங்கள் பீர் அடித்தால் என்னவாகும்...?

http://www.goodlightscraps.com/content/rainy-season-scraps/rain-28.gif  
குறள் தந்த  கவிதை-16

காந்தி ஜெயந்தி
மகாவீர் ஜெயந்தி
வள்ளலார் தினம்
சுதந்திர தினம்
குடியரசு தினம்.
.................................
...................................
இப்படி
எந்தத் தினம் வந்தாலும்
டாஸ்மாக் கடையின்
கதவுகள் மூடியிருக்கும்

ஆனாலும் 
பீர் புட்டியும்
விஸ்கி பிராந்தியும்
வெளியே கிடைக்கும்

டாஸ்மாக்கில் கிடைக்கும் 
இந்தத் தண்ணிக்கு
என்றும் பஞ்சமில்லை

மழைத் தண்ணீருக்கு மட்டுமே
இங்குப் பஞ்சம் வந்தால்....
மரங்கள் முதல்
செடி கொடிகள் வரை
புல் வெளிகூடக் காய்ந்து போகும் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd2plFL10LaxXfLAj6jhGzNOH8_RR0kUxGMSEoI_2Ysr3Z9FU4TgKXolWywC6VdvKw-odLd9AIWAdR1VwslYVDMPtHN9aEkjZ-aHXRmRV4RYTDLd1lQpHasJTm7p1dJjLYKm_CuAcu1hyphenhyphen8/s1600/nature-rain-cycle-umbrella-e.jpeg

நினைத்தேன் சிரிப்பு வந்தது.
மரங்கள் பீர் அடித்தால்
என்னவாகும்...?

யாரேனும் பழக்கி விடுங்களே
மழை வராவிட்டாலும் 
பாவம் ....மரங்கள்
பிழைத்துப்போகட்டும்!

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்   

                                                                               ................பரிதி.முத்துராசன்   

கவிதை தந்த குறள் 16:


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
கலைஞர் உரை:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
***************************************************************************
இன்றையப் புகைப்படம்
***************************************************************************

Untitled by Evgeny Kaplin (e_kaplin)) on 500px.com
thanks-500px.comUntitled by Evgeny Kaplin

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1