google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மரக்காணமும் மண்டை வலியும்

Saturday, April 27, 2013

மரக்காணமும் மண்டை வலியும்


சாதிகள் இல்லையடி பாப்பா 
என்று சொன்ன கவிஞ்சனையும் 
எந்த சாதி நீ?
என்று கேட்ட உலகம் இது.

மதவெறியும் சாதிவெறியும் 
மனதில் இல்லைஎன்றால்... 
யார் உரிமையை இங்கு 
யார் பறித்துக்கொள்ள முடியும்?

உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று
உலகில் தீர்மானிப்பது 
செய்யும் தொழிலே என்று
சொன்ன சண்டாளன் எவனோ...?

செய்யும் தொழிலை வைத்து 
சாதி வர்ணக்கோடுகள்   
வரைந்தவன் எவனோ...?

அந்த அழுக்குப் பாறை 
வழுக்கும் பாறை என்று 
தெரிந்த பிறகும் ஏன் 
வழுக்கி விழுகிறீர்கள்..?
ஒ..சாதிமார்களே!
நீங்கள் 
விழுந்து கிடப்பது 
சாக்கடை தொட்டியில்..

http://media.dinamani.com/2013/04/26/clash2.jpg/article1562018.ece/alternates/w460/clash2.jpg

எரியும் சாதிவெறியில் 
அழிந்து போவது அப்பாவி மக்கள் 
குளிர் காய்வது அரசியல்வாதிகள் 

மரக்காணத்தில் 
நடந்தது எதுவாக இருப்பினும் 
சாதிக்கூட்டம் போட்ட ஆட்டம் 
அசிங்கமான போராட்டம்
இந்த மரக்காணம் இருப்பது 
இங்கே மட்டுமல்ல...
தமிழ் நாடு முழுவதும் 
தலை விரித்து ஆடுகிறது. 

உங்கள் முகமூடி 
முகங்களைப்  பார்த்து 
பவுர்ணமி முகமும்
அம்மாவாசை  போல் 
இருண்டு போனது....

நவநாகரீக காலத்தில் 
ஒழுக்கமற்றவர்களின் ஓலங்கள் 
இந்த நாட்டின் சமுதாய அவலங்கள் 
இவர்கள் வரலாறு....
இவர்கள் வாழும் காலத்திலையே 
இல்லாமல் போய்விடும்....


குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    
கவிதை தந்த குறள் 21:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
மு.வ உரை:

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
 

Kilian Martin: India Within


thanks-YouTube-Bragic
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1