குறள் தந்த கவிதை-7
உலகில் உள்ள
உயிர்களுக்கெல்லாம்
துயரை நீக்க
உன்னத உண்மைகள்
உரைத்தவனை வணங்கியே..
உலகில் உள்ள
உயிர்களுக்கெல்லாம்
துயரங்கள் செய்கின்றான்
இனத்தையே அழிக்கின்றான்
இறுமாப்புக் கொள்கின்றான்
இங்கே அந்த இனவெறியனுக்கு
அகிம்சையைப் போதித்த
அண்ணல் நாட்டில்
அறுசுவை விருந்து படைக்கிறார்
அப்பாவி நங்கைகளின்
அங்கங்களை அருத்தவனுக்கு..
கன்னியரின் கருவறையை
வன்கொடுமை செய்தவனுக்கு...
இங்கே..அய்யகோ!
கடவுளின் கருவறையில்
கயவனுக்கு என்ன வேலை...?
இங்கே அவன் வணங்கும்
கடவுள் நிகரற்றவனா..?
கடவுள் பெயரில்
களங்கம் செய்கின்ற
கயவன் நிகரற்றவனா...?
அங்கே உயிரிழந்த
அத்தனை பேரும்
பகுத்தறிவுவாதிகளா...?
அதில் ஒருவர்கூட இல்லையா
கடவுள் வழி போனவர்கள்...?
உலகம் முழுவதும்
இப்படித்தான்
உலா வருகிறார்கள்
மனிதத்தை திண்ணும்
எல்லா மதவெறியர்களும்
எந்த மதக்கடவுள் இங்கே
நிகரற்றவன் ....?
துடிக்கும் நெஞ்சே!-நீ
வெடிக்கும் முன்னே
உண்மையைச் சொல்லிவிடு....
யார் இந்த உலகில்
உண்மையில் ஒப்பற்றவன்?
(நெஞ்சுக்குள் மறைந்திருந்து
நீதி நெறிமுறை சொல்லும்
நல்ல மனசாட்சி கொண்டவனே
மகா உன்னதமானவன்
அடுத்தவர் துயரை
அகற்ற நினைப்பவனே
அகிலத்தில் நிகரற்றவன்
அவர்தம் மனசாட்சியே
நிகரற்ற கடவுள்
மனசாட்சியின்
மந்திரத்தை மறந்தவன்
உயிருள்ள பிணம்
அவனுக்கு
சுடுகாடும் இடம் தராது.
அவன் துயர் நீங்காது.)
.......................................................பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள்-7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |