google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்னங்க நா நல்லாத்தானே சொல்றேன்

Saturday, April 20, 2013

என்னங்க நா நல்லாத்தானே சொல்றேன்


freeonlinephotoeditor
குறள் தந்த கவிதை-8  


ஒருபுறம் ஒரு ரூபாய் இட்லியும்
இன்னொரு புறம் டாஸ்மாக் புட்டியும்..
மலிவு விலையில் மக்களுக்கு 
அமுதும் மதுவும் அரசே விற்கிறதே...?
இல்லாதவர்களுக்கு இது
இருப்பவர்கள் செய்யும் அறம்தானே...?

ஏழை எளிய மக்கள் 
பசியால் துடிக்கலாமா?
பரிதாபப்பட்டுத்தான்
இட்லி அவிக்கிறது அரசு
இலவச அரிசி வழங்குகிறது.
(மற்றபடி நீங்கள் போடும்
ஓட்டை நம்பி இல்லை..)

ஏழை குடிகார மக்கள்
கள்ளச்சாராயம் குடித்து
கஷ்டப்பட்டுச்  சாகலாமா?
நல்ல சாவுக்கு நாடு கேரண்டி 
இறக்கப்பட்டுத்தான்
இங்கே டாஸ்மாக் கடைகள்.
(அதுதான் எழுதிவைத்திருகிறோமே
குடி குடியைக் கெடுக்கும் என்று)   

freeonlinephotoeditor

அம்மா உணவகத்தை மட்டுமே
நம்பி வாழ்வோர் நாளும் வாழ்வார்
அரசு டாஸ்மாக்கை மட்டுமே
நம்பி வாழ்வோர் நல்லாவே சாவார்
ஏழுமணிக்கு இட்லி தின்றுவிட்டு
பத்துமணிக்கு பிராந்தியடி...
வெறும் வயிற்றில் மது அருந்துவது
மனிதர்கள் வயிற்றுக்கு தீங்கு செய்யும்
நல்ல எண்ணத்தில்தான் நாடு இருக்கு

இன்னும் இருக்கிறார்கள் சான்றோர்கள்
நல்லவைகளை திரையில் காட்டுவார்கள்
சிகரெட் குடிக்காதே என்பார்கள் 
சிகரெட் குடித்துக்கொண்டே....
மது அருந்தாதே என்பார்கள் 
மது அருந்திக்கொண்டே....

freeonlinephotoeditor  

அப்படித்தான் இவ்வுலகில்
நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும்...
இப்படி நல்வழி காட்டுவோரே-மக்கா
நாட்டில் சான்றோர் ஆவார்
அன்று இருந்த சான்றோர் எவரோ?
இன்று இருக்கும் சான்றோர் இவரே! 

(என்னங்க நா நல்லாத்தானே சொல்றேன்
என்னால கோர்ட்டுக்கு  அலையமுடியாது?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 
அய்யன் வள்ளுவர் சொன்ன சான்றோரை 
இன்று நான் எங்குப் போய்த் தேடுவேன்)

அறவழி காட்டும் அரசை 
அறிந்து தேர்ந்தெடுத்தால்..
நீங்கள்  நீடூழி வாழலாம்..
இல்லையேல்...
நோய் நொடியோடு மாயலாம்  



கவிதை தந்த குறள்-8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
  
************************************************************************
(சென்னையில் அடிக்கிற வெயிலுக்கு) 
ஜில்லுனு ஒரு புகைப்படம்...

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1