google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: செத்தும் கொடுத்த 'சில்க்' ஸ்மிதா

Monday, April 08, 2013

செத்தும் கொடுத்த 'சில்க்' ஸ்மிதா



இங்கே இளமையில்  வறுமையில் வாடிய...சிறுவயதிலேய மனமுடிந்து கசங்கிப்போன..கணவனைப் பிரிந்து கசந்து போன வாழ்வுடன் சென்னை வந்த ஆந்திரா விஜயலக்ஷிமி எடுபிடி நடிகையாக துவங்கி தன் கவர்ச்சியால் சினிமா உலகை கிறங்கடித்து சில்க் ஸ்மிதா ஆன கதையை நான் சொல்லவரவில்லை.........(யோவ்..அதான் ஒரே வரியில் எல்லாம் சொல்லிவிட்டு சொல்லவரவில்லையா...?)

1980-களில் துவங்கி பதினாறு ஆண்டுகள்  கோலிவுட் மட்டுமல்லாது
இந்திய  சினிமா உலமே இவரது கவர்ச்சி பார்வைக்குக் காத்துக்கிடந்தது....அதிலும் தமிழ் சினிமா உலகம்  உறுகாய் போல் சில்க் இல்லாத சினிமா...சினிமாவா? என்ற நிலையில் இருந்தது...

                                             thanks-YouTube-rajshritamil
அன்று தங்கமகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகூட சில்க்குடன்  "அடுக்கு மல்லி" என்று  ஒரு குத்து போடவேண்டிய கட்டாயம்....

"நேற்று ராத்திரி...யம்மா" என்று சகலகலாவல்லவன் கமலும் ஒரு பாடலுக்கே ஆயினும் அம்மணியைக் கட்டி புடிச்சி ஆடவேண்டிய கட்டாயம்...

                                                thanks-YouTube-krisgopid
சிறந்த கலை படைப்பாளி பாலு மகேந்திராவும் அம்மணி இல்லையேல் மூன்றாம் பிறை எங்கே தேய்ந்து போகுமோ என்று "பொன்மேனி உருகுதே" என்று முனுமுனுத்தவர்

எடுபிடி நடிகையாக இந்தச் சினிமாவுக்குள்  நுழைந்தவர் எப்படியோ  இப்படிப் புகழின் உச்சத்துக்கு சென்றவர்..சரியான வழிகாட்டுதல் இன்றிச் சொந்த படம் முயற்சியில் சறுக்கி விழுந்தார்..சினிமா உலகுக்குக் கவர்ச்சி போதை  ஊட்டியவர் தன் சொந்த வாழ்விலும்  மது போதையில் புரண்டார்..திடிரென்று ஒரு நாள் மரணத்தைத் தழுவிக்கொண்டார்...
(எமலோகத்தில் ஏதும் கவர்ச்சி தேவைப்பட்டதோ என்னவோ...?)அவரது மரணம் இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது




ஆனால் அவரது வாழ்க்கை கதையை இன்று திரைப்படங்களாக எடுத்து பணம் சம்பாதிக்கப் புறப்பட்டுவிட்டார்கள் 
தி  டர்ட்டி  பிக்ச்சர் என்று அவரது கதையில் சில உல்டாக்களுடன் வெற்றிப்படமாக வசூலை அள்ளிக் குவித்தது.அதில் நடித்த வித்யா பாலனுக்கு விருதுகளை வாரிக்குவித்தது




இதையடுத்து மலையாளத்திலும் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை ‘கிளைமாக்ஸ்' என்ற பெயரில் சனா கானை வைத்து  எடுத்து வெற்றிபெற்றது   அதே சனா கான்  தமிழிலும் நடிகையின் டைரி என்ற பெயரிலும் வெற்றி  காட்ட வருகிறார்.

எது எப்படியோ... செத்தும் கொடுத்தார் வள்ளல் சீதாகாதி என்பார்கள் அது போல்   இறந்தபிறகும்  சில்க் ஸ்மிதா-வின் வாழ்க்கை கதை இன்றும் அதே சினிமாவில்   நிறையப் பேருக்கு வாழ்வு கொடுக்கிறது ஆனால் ஓன்று மட்டும் புரியவில்லை...
எப்படியெல்லாம் வாழக்கூடாது என்று பாடம் புகட்டவே படம் எடுக்கிறார்களா...? அல்லது இப்படியெல்லாம் வாழலாம் என்று படம் காட்டவே இப்படி படம் எடுக்கிறார்களா....? இதைப் பார்த்து இன்னும் நாலு கிராமத்துச் சிட்டுக்கள் சினிமா தீச்சட்டிக்குள் வந்து விழுந்து விடாமல் இருந்தால் சரிதான்
உத்தமர் காந்தியின் வாழ்க்கையும் திரைப்படமாக வருகிறது இப்படிப் பட்ட உத்தமியின் வாழ்க்கையும் திரைப்படமாக வருகிறது. அட..தேவுடா..என்ன திரயுலகமோ...?

*****************************************************************************
இதோ இன்னொரு கோலிவுட் பட்சியின் குமுறல்.......




தனது சித்தியும்  ஒர்   இயக்குனரும்  சேர்ந்து கோடிக்கணக்கான பணம் தன்னை ஏய்த்துவிட்டுக் கொடுமை செய்வதாகக் கண்ணீர்  சிந்தும்   ‘அங்காடித் தெரு’ புகழ் நடிகை அஞ்சலி...நன்றி நக்கீரன்.இன்  
thanks-images-google.co.in
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1