google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தேர்தல் கூட்டணியும் வெங்காயச் சட்டினியும்

Wednesday, April 03, 2013

தேர்தல் கூட்டணியும் வெங்காயச் சட்டினியும்


வருகிறது தேர்தல்
வாக்காளப் பெருமக்களே!
இது முக்கியத் தேர்தல்
இந்தியாவின் தலைவிதியை
இன்னும் அயிந்து ஆண்டுகள்
தீர்மானிக்கும் தேர்தல்...


















ரமணன் வாசிக்கும்
வானிலை அறிவிக்கை போல்
வரும்....ஆனால் .....வராது
என்பது போல் அல்ல....
நிச்சயம் வரும்......



















ஆனால் 
தமிழன் தலைவலி தீருமா...?
தீரும்....ஆனால்....தீராது.
இதுமட்டும் நிச்சயம்  





















அங்கே
காவிச்சட்டை கடோத்கஜன்களும்
கதர் சட்டை வில்லாதி வில்லன்களும்
ஒட்டு பொறுக்கி போல
ஓட்டு பொறுக்கிகளாய்.....























கூட்டம் கூடமாய் ஆள்பிடிக்கும்
தேர்தல் கூட்டணிகளும்....
சுயநலமே பொதுநலமாய் வாழும்
அம்மா...அய்யா..அண்ணன்...தம்பி...
அக்கா...மாமியார்...மச்சினிச்சி....
(தலைவர்..................மார்..........களே!
இன்னும் யாராவது இருக்கிங்களா?) 
இவங்களெல்லாம் கூட்டாக
கூட்டாஞ்சோறு சமைப்பாங்க...






















சமையல் செய்ததை
அவிங்கதான் திம்பாங்க....
அப்பாவி மக்களெல்லாம்....
அப்படியே வாயத்திறந்து...
ஆ...னு வேடிக்கை பாப்பாய்ங்க
அவிங்க திங்கிறதில வேற
அடி...புடி...சண்டை
அப்பப்ப போடுவாய்ங்க... 


























இங்கே இரண்டு கூட்டம்
தலையச் சொரியுது...

தஞ்சாவூர் பொம்மை போல
தனியா நின்னு  சாய்ந்தாடலாமா...?
கூட்டத்தோடு கூட்டணியா
குடுமிச் சண்டை போடலாமா...?
அட..போங்க சாமிகளா!

உங்கள் தேர்தல் கூட்டணியும்
உரிச்சா ஒன்னுமில்லாத
நாற்றமெடுக்கும் 
வெங்காயச் சட்டினியும்    




நியாயன்...............மார்களே!
எது எப்படியாக இருந்தாலும்
வருகிற தேர்தலில்
யாரிடமும் துட்டு வாங்காமல்...
நாட்டு நலனுக்காக....
நியாயமாக வாக்களித்து
நாட்டைக் காப்பாத்துங்க
நியாயன்...............மார்களே!

************************************************************************
courtesy of images from google.co.in  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1