google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சித்திரை முழு நிலவு-விமர்சனம்

Saturday, May 04, 2013

சித்திரை முழு நிலவு-விமர்சனம்

(எச்சரிக்கை-இது மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை பெருவிழா சினிமாவாக வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு நகைச்சுவை கற்பனைப்பதிவு..மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல) 

http://hosuronline.com/hp/pictures/pmk_1.jpg  
சித்திரை முழு நிலவு-
இது  பாட்டாளி மக்கள் கட்சி தயாரிப்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இயக்கி நடித்த த்திரிலர் திரைப்படமாகும்  கதாநாயகனாக அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இந்த அரசியல் நகைச்சுவை-திகில் திரைப்படம்  மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

freeonlinephotoeditor

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இவர்களுடன் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., பாமக தலைவர் ஜி.கே. மணி..இன்னும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர்  

மாமல்லபுரத்தில் திரையிடப்பட்ட ஒரே நாளில் பல லட்சம் பேர் பார்வையிட்டு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி திரைப்படம் மரக்காணத்தில் மிகப்பெரிய  வசூல் அறுவடை .. விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வெற்றிநடை போடுகின்றது ..புதுவையிலும் பெரிய மகத்தான வரவேற்பு பெற்றுள்ளது

http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-prn1/946847_305639742900878_358550699_n.jpg

படம் ஆரம்பமே படு அமர்க்களம்....திருச்சி சிறைச்சாலையை 360 டிகிரி கோணத்தில் காட்ட..பன்றிகூட படுக்காத ஒரு படு மோசமானஅறையில் அமர்ந்து பெரியவர்  ஒருவர் கையில் காந்திஜியின் சத்திய சோதனை புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கிறார்...கேமரா ஸ்லோ மோசனில் முகத்தைக்காட்டும்போது...அவர்....அய்..அய்யா..யோ...
தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிப்பு கலைமாமணி மருத்துவர் அய்யா

இத்திரைப்படம் பிளாஷ்பேக் உத்தியில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.அந்த பெரியவர் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும் ஒவ்வொரு நிகழ்வுகளாக காட்டப்பட்டுள்ளது.திரைக்கதை வசனமும் திகட்டாது.

மாமல்லபுரத்தில் நடந்த மிகப்பெரிய இளைஞ்சர்கள் திருவிழாவில் அவர் ஆற்றிய வீர உரை....என் வீட்டு பெண்ணுக்கு யார் மருமகனாக வரவேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும்...

http://www.rohandsa.com/files/webcomic1.jpg
அடுத்து அன்புமணி ராமதாஸ்..... நோபல் பரிசு வென்ற நாலு பேர் என் நண்பர்கள்  என்று அவர் பஞ்ச் அடித்த போதும்  நான் போனைஎடுத்தால் கிளின்டன்,ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும்   என்றபோதும் பலத்த கைதட்டல்.ஆர்பரிப்பு .மாமல்லபுரம் கடலே அவமானத்தில் அடங்கிப்போனது.நம்ம தல..தளபதி ஏன் பஞ்ச் தந்தை சூப்பர் ஸ்டார் கூட அருகில் வரமுடியாது.

இவை எல்லாவற்றையும் விட உச்சகட்டமாக காடுவெட்டி குரு பேசும் போது  தமிழ்நாட்டை ஆளும் தகுதி அன்புமணிக்கு மட்டுமே 
 என்ற போது கடல் நூறு அடி தூரம் பின்வாங்கி ஓடியது.        

freeonlinephotoeditor

 சித்திரை முழு நிலவு படமும் சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் திரைப்படத்தின் கதையும் ஓன்று( copy and paste) போல் உள்ளதாக பிரபல சினிமா வலைப்பதிவர்கள் கருத்து சொல்கிறார்கள்..அவர்களை ப்ளாக் லிஸ்ட்ல் வைத்து அடுத்து ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கு மரக்காணத்தில் பாராட்டு விழா நடத்தப்படும்

இதில் அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது போல் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடி நடிப்பும் வீர வசனமும்  சூப்பரோ சூப்பர்இந்தப் படத்தில் இவர்களே  நாயகர்கள் இவர்களே வில்லன்கள் இவர்கள் நாக்கில் எப்போதும் இருப்பான் சனீஸ்வரன்...சாதி என்று சொல்லத்தெரியாது சாதீ என்பார்கள்..

இப்படத்தில் பேருந்துகள் எரியும் காட்சிகள் மரங்கள் வெட்டி சாய்ப்பது மற்றும் தர்மபுரியில் வீடுகளை கொளுத்துவது போன்ற காட்சிகள் இதுவரை எந்த திரைப்படத்திலும் இவ்வளவு அழகாக காட்டப்படவில்லை 

அவ்வப்போது கையில் திண்டுக்கல் பூட்டும் சாவியும் வைத்துக்கொண்டு மதுக்கடைகள் பக்கம் அலையும் காட்சி கண்டு சிரித்து வயிறு வலிக்கலாம்

                                    thanks-YouTube-Dinamalardaily

இப்படி பல திருப்பங்கள் நிறைந்த இப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்து   எங்க பெரிய அம்மாவுக்கு அழற்சியாகி இவர்களுக்கு விருது வழங்க சட்டசபையில் முடிவு செய்தார்கள்


மூன்று நாளைக்கு முன்பு பெரிய அய்யா  கையில் "எப்படி அறவழியில் நடிப்பது..?" என்ற புத்தகத்தைக் கொடுத்து சிறைப்பள்ளிக்கு அனுப்பிவிட்டார்கள் ...பாவம் குட்டியும் பிரிந்து இருந்தால் வருத்தப்படும் என்று நேற்று புழலுக்கு  அனுப்பிவிட்டார்கள் இவர் கையில் என்ன புத்தகம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை...இன்னும் தொடரும்...அடுத்த பவர் ஸ்டார்ஸ் ஆகும் தகுதி இவர்கள் இருவருக்கு மட்டுமே உள்ளது என்று திரையுலக நட்சத்திரனடிகர்கள் கதிகலங்கி உள்ளனர் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikH7I164ek-XOVjlNcwFY6oo7EmIeyrrjLS1RLuhx0KVmcNrzeheqWsqlVyjflRG-ZjAKt7FWxebsHC2t32XItPXnDINh5FtAeMhcvIA-tTsKn7SJle0x2SDEVZ94ZxPB9YGGKiCTXg2p-/s1600/tamilmakkalkural_blogspot_election.jpg
   
இந்த திரைப்படத்துக்கு அம்மா வழங்கிய விருதுகளைப் பார்த்து திமுக தலைவரும் தளபதியும் நாம் நிறைய படங்கள் எடுத்து விட்டோமே இந்த அம்மா நமக்கு விருதுகள் எதுவுமே தரவில்லையே என்று ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன..இனி படம் எடுக்கலாமா வேண்டாமா என்று சிந்தனையிலும்  உள்ளனர். 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1