அப்பன் மாடு மேய்த்தால்
அவன் மகனும்
மாட்டுக் கன்று மேய்க்க...
அப்படியே
அப்பன் பூசை செய்ய
அவன் மகனும்
மந்திரம் சொல்ல..
கற்றறிந்த அறிஞர்
கண்டறிந்த கல்விமுறை
குலத்தொழில் கல்விமுறை
அவர் குலம் ஒங்க
அவர் செய்த பரிந்துரை
அதுவே எழுதியது
அவர் ஆட்சிக்கு முடிவுரை
ஆனால்
எல்லோருக்கும் கல்வி என்று
எழுச்சி கொண்டு எழுந்து வந்து
புரட்சி செய்த பெருந்தகை
படிக்காத மேதை காமராஜர்
பசிவந்தால் பத்தும் பறக்கும்
படிப்பும் அத்தோடு நிற்கும்
பசியைத் தனித்தவர்
படிப்பறிவை திணித்தவர்
செயற்கரிய செயல் செய்தவர்
இப்போதெல்லாம்
இலவசங்கள் கொடுத்து
மக்களுக்கு நல்லது செய்ய
மதுக்கடைகள் திறக்கிறார்கள்
கஜானாவை நிரப்புகிறார்கள்
பசித்திருப்போர் புசித்திடவே
மலிவு விலையில்
இட்லி அவிக்கிறார்கள்
நாட்டுக்கு நல்லது செய்ய
ஓட்டுக்காக
ஒட்டறை அடிக்கிறார்கள்
இவர்களும் பெரியோர்களே
இல்லை என்பார் இருப்பார்களே
இரும்பு கம்பிகளுக்கிடையிலே...?
கவிதை தந்த குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்மு.வ உரை:
செயற்கரிய செய்கலா தார்.
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
thanks-YouTube-Ravikumar Rajendiran
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |