பெற்ற அன்னையோ
தன் குழந்தைகளை மட்டுமே
பேணிக் காப்பாள்
ஆனால்
இந்த அன்னைக்கு
மனித உயிர்கள்
அத்தனையும் ஒன்றுதான்
மனித உயிர்களில்
மதவேறுபாடு இல்லை
வாழும் உயிர்களில்
உயர்வு தாழ்வு இல்லை
பச்சிளம் குழந்தையாயினும்
உதிரும் முதியோராயினும்
அன்னையின்
அன்புத்தாலாட்டில்
அவர் துயர் நீங்கினர்..
கல்கத்தா வீதிகளில்
குப்பைத்தொட்டி
பெற்ற பிள்ளைகள்
அன்னையின் மடியில்
முகவரி பெற்றனர்
சாக்கடைக்கட்டையாய்
நோய்க் கிடையில்
மிதந்து கிடந்தவர்கள்
அன்னையின் சேவையில்
சந்தனக் கட்டையானார்கள்
அழுக்குத்துணியாய்
கிழிந்து கிடந்தவர்கள்
அன்னையின் அன்பில்
பட்டுத் துணியாய்
பரிணமித்தார்கள்
எதுவும் தன்னிடம்
இல்லை என்றாலும்...
உதவும் எண்ணத்தை
உதறியது இல்லை
அன்றாடம் யாசகம் பெற்று
அடுத்தவர் பஞ்சம் விரட்டிய
அன்னைக்கு வரும்
சோதனைகளுக்கும்
பஞ்சமில்லை
அதிலொரு நிகழ்வு...
தெரு வணிகர் ஒருவரிடம்
"இல்லாதாருக்கு உதவிட..
இருப்பதை கொடுங்கள்" என்று
கையேந்திய அன்னையின்
அன்புக்கரங்களில்
எச்சில் உமிழ்ந்தார் அவர்
ஆனாலும் அன்னையோ
அதை துடைத்து விட்டு...
மீண்டும்....
இதழ்களில் புன்னகை தவிழ
இரு கைகளையும் ஏந்தினார்...
"அய்யா..இது எனக்கு
இன்னும் ஏதாவது கொடுங்கள்
இல்லாத ஏழைகளுக்கு" என்று.
அந்த வணிகரோ
அவர் செய்த தவறை உணர்ந்து
தன் கல்லாப்பெட்டியையே
அன்னையின் கைகளில் கொட்டினார்
தன்னை வருத்தி
இன்னொரு உயிருக்கு
அன்பை ஊட்டியவர்
அன்னை தெரேசா-
பெற்றவர் மட்டும்தான் அன்னையா...?
இவரின்றி உலகில்
உயர்ந்தோர் உண்டோ..?
கவிதை தந்த குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்கலைஞர் உரை:
செந்தண்மை பூண்டொழுக லான்.
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
thanks-YouTube-by lovingyouisez
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |