செய்கூலி இல்லை சேதாரம் இல்லை
அட்சய திரிதியை தள்ளுபடி...என்று
அவ்வப்போது தொலைக்காட்சியில்
அந்த நகைக்கடை விளம்பரபக்கியின்
நச்சரிக்கும் தொல்லையோ தொல்லை
அட்சய திரிதியை அன்று
அடங்காத கூட்டமிருக்கும்
இன்றே போகவேண்டும்
பழைய வளையல்கள் இரண்டை
புதுசாக மாற்றவேண்டும் என்று
அடம்பிடித்தால் அன்பு மனைவி
அடிக்கும் அக்னி வெயிலில்
தலையைச் சொரிந்து கொண்டு
அந்த நகைக்கடைக்குப் போனால்....
வாசலில் இலவச மோர் பந்தல்
அண்டாவில் மோர் கலக்கி
பாரி வள்ளல் போல் மோர் வள்ளலாய்
உரிமையாளரே ஊற்றிக்கொண்டு..
ஒரு குடுவை எனக்கும் தந்தார்
ஜில்லென்று இருந்தது வயிறு
ஆறு மணி நேரமாக அலசி
எடுத்த புது வளையல்கள்
இரண்டும் இருபத்திரண்டு காரட்டாம்
கொடுத்த பழைய வளையல்களை
தேயுடா தேயென்று தேய்த்து.....
அட..தேவுடா..கண்டுபிடித்தார்கள்
இரண்டும் பதினெட்டு காரட்டாம்
பாத்திரம் தேய்த்ததில்
அன்பு மனைவி தேய்த்தது
பாதியை காணவில்லையாம்
என்ன கணக்கோ? எமகாத கணக்கு
பாதிவிலையும் பெற்றுக்கொண்டு..
ஏதோ சும்மா கொடுப்பதுபோல்
பழசுக்குப் பதில் புதுசு கொடுத்தார்கள்
குடித்த மோரும் எரிச்சல் தந்தது
மோர் தந்த வள்ளலை நினைத்தேன்
குடித்த மோரும் வாந்தி வந்தது...
அன்றைக்கு வள்ளல்கள்
வாரிவழங்கினார்கள்
இன்றைக்கு வள்ளல்கள்
மோர் வழங்குகிறார்கள்
ஆடிமாதம் கோயில் வாசலில்
கூழ் ஊற்றுபவன் வள்ளலாகலாம்
அய்யோ..அக்னி வெயிலே
நீயே பரவாயில்லை...
இன்றைய வள்ளல்கள் எல்லோரும்
இப்படித்தான் இருக்கிறார்கள்
செய்யும் பாவம் தொலைப்பதற்கும்
வள்ளல் பட்டம் வாங்குவதற்கும்
கவிதை தந்த குறள் 31:
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குகலைஞர் உரை:
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?.**********************************************************************
இது சும்மா சிரிக்க
**********************************************************************
ஏம்பா...என்னைப்பற்றிதான இப்படி எழுதியிருக்க....?
thanks-500px-A Furtive Gaze by Ashley Vincent |
அண்ணேன்...முறைக்காதீங்க...நா உங்களைப் பத்தி எதுவும் எழுதலா...
நீங்கலாம் ரொம்ப நல்லவங்க....அண்ணேன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |