google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உணவுக்காக உண்ணாவிரதம் இருந்த எம்ஜிஆர்

Thursday, May 09, 2013

உணவுக்காக உண்ணாவிரதம் இருந்த எம்ஜிஆர்

http://www.tamilsway.com/files/uploading_news_img/new_1366019104.jpg  

இன்று உண்ணாவிரதங்கள்
அதன் புனிதத் தன்மையை
புதைத்துக்கொண்டன
புதைத்தவர்கள்...
அரசியல் பிரமுகர்கள்
சினிமா நடிகர்கள்  

அரசியல்வாதிகள்
உண்ணாவிரதம்
அவர்கள் செல்வாக்கை
அளவீடு செய்யவே..

சினிமா நடிகர்கள் 
உண்ணாவிரதம்
அதுவும் ஒரு சினிமாவே

உண்மையில்இங்கே
ஊடகங்கள்
தின்று கொழுக்கவே
உண்ணாவிரதங்கள்
அரங்கேறுகின்றன

சர்வ சக்தி கொண்ட
இவர்கள்  உண்ணாவிரதம்
சரித்திரத்தில் எழுதப்படலாம்
சத்தியமாக அவை
மக்கள் மனதில் நிற்காது.

ஆனால்
அன்று ஒரு உண்ணாவிரதம்
ஆர்ப்பாட்டமின்றி நடந்தது
தில்லியில்
காந்தி சிலை முன்பு..

தமிழக மக்களுக்கு 
தரவேண்டிய
உணவுப் பொருட்களை
மத்திய அரசு தராத போது
அவரது உண்ணாவிரதம்
அங்கே அரங்கேறியது
அன்றே வெற்றிப் பெற்றது 
அதை நடத்தியவர் 
அன்றைய முதல்வர் எம்ஜிஆர்

http://www.muthamil.com/2010/images/mgr_tamilnadu3.jpg

மக்களுக்கு செய்யவேண்டிய 
மகத்தான தர்மத்தை
மறக்கவில்லை அவர் 
மக்களும் இன்றுவரை
மறக்கவில்லை அவரை.

கவிதை தந்த குறள் 32:

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
சாலமன் பாப்பையா உரை:

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    

                                             thanks-YouTube-kaarvz  
*************************************************************************************
தகவலுக்கு நன்றி-குமாரன்குடில்(saravanakumaran.com) 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1