அறவழி நூல்கள்
அதிகம் தமிழில் மட்டுமே
அதிலும் அரியது குறளே
அப்படியென்றால்
அன்றைய தமிழர்கள்
காட்டுமிராண்டிகளா...?
பண்பில்லாதவர்களா..?
அன்றைய தமிழர்களின்
அறியாமை அகற்றத்தான்
அறத்துப்பால் எழுதினாரா...?
அன்றைய தமிழர்களுக்கு
பொறுப்பின்மை இல்லாததால்
பொருட்பால் எழுதினாரா...?
அன்றைய தமிழர்களின்
காமக்களியாட்டத்தை
கன்ட்ரோல் பண்ணத்தான்
காமத்துப்பால் எழுதினாரா..?
இல்லை இல்லவே இல்லை...
அன்றைய தமிழர்களின்
நெஞ்சில் கயமை இருந்திருந்தால்..
அய்யன் வள்ளுவர் நாக்கு
பொய் நாடகம் போட்டிருக்கும்
அவர் எழுதிய வார்த்தைகள்
அவருக்குத் தெரியாமலே
அரிதாரம் கட்டியிருக்கும்
அன்றைய தமிழர்கள்
அனைவரும் நல்லவர்களே
அவர்களில் ஒருவர்தான்
அய்யன் வள்ளுவர் அவர்களே!
கவிஞ்சர்கள்
காலத்தின் பிரதிநிதிகள்
கவிதைகள்
காலத்தின் பிரதிபலிப்புகள்
கயமை கொண்டவர்
கவிஞ்சராக முடியாது
பொய்மை நிறைந்தவர்
புலவராக முடியாது
சாக்கடைப் பூக்களில்
சந்தனம் மணக்காது.
இன்றைக்கு
காதல் காமமானது
அரசியல் அசிங்கமானது
வாய்மை வறுமையானது.
மனிதாபிமானம் மரித்தது.
இல்லாமையிலும்
இயலாமையிலும்
இன்றைய தமிழர்கள்
அதனால்தான்
இன்றைய கவிஞ்சர்கள்
இப்படி இருக்கிறார்கள்
அன்றைய தமிழர்கள் நல்லவர்களே
இன்றைய தமிழர்களே காட்டுமிராண்டிகள்
அய்யன் வள்ளுவர்
அன்றைய தமிழர் அடையாளம்
என்றும் உண்மையின் உருவம்...
அதனால்தான்
அவர் சொன்னவைகளை
காலக்கரையான்களால்
செல்லரிக்க முடியவில்லை
கவிதை தந்த குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்கலைஞர் உரை:
ஆகுல நீர பிற.
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |