தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகச் சில அரசியல் கட்சிகள் சாதீய உணர்வுகளைத் தூண்டி தமிழகத்தில் வன்முறை தீ மூட்டி குளிர்காய்கின்றன
முன்பு தென் மாவட்டங்களில் மட்டுமே இத்தகைய சாதிக்கலவரங்கள் நடக்கும் இப்போது வட மாவட்டங்களிலும் இது காட்டுத்தீ போன்று பரவி வருகிறது
பாமக கட்சியினர் தங்களது கட்சி பலத்தைக்காட்ட பல லட்சம் பேர் மகாபலிபுரத்தில் கூடி கூத்தடித்த சித்திரை முழு நிலவு கொண்டாட்டம் அவர்களை நித்திரையின்றிச் சிறை செல்லும் திண்டாட்டத்தில் கொண்டுவிட்டுவிட்டது
முன்பு சாதிகளும் சாதிகளும் சண்டை போடும் அன்று சாதிவெறி கொண்டவர்கள் அடித்துக்கொண்டு சாவார்கள் இப்போது சாதியும் அரசியலும் கைகோர்த்துக் கொண்டு தலைகால் தெரியாமல் ஆடுகின்றன (இதில் என்ன விசேஷம் என்றால் இந்தச் சாதிச்சண்டைகள் உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையில் நடக்கும் எழுச்சிப்போர் அல்ல...புரட்சிப்போர் அல்ல...போக்கத்தவர்களுக்குள் நடக்கும் ஓட்டுப் பொறுக்கி சாதிச்சண்டை)
தமிழகத்தின் அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகளைத் தடை செய்ய அரசு தயங்காது என்று அம்மா அறிவித்துள்ளார்கள்
அம்மா போட்டுக் கொடுக்கும் சேதாரக்கனக்கு (853 வாகனங்கள்) அதற்குரிய மதீப்பீடு ..பாமக ஒருகாலும் அரசுக்கு செலுத்த முடியாது....
ஆக எலி பொறியில் தானாகவே மாட்டிக்கொண்ட கதையா...?
இன்று நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது இன்னும் பழமை பேசி புழுத்த அரிசியில் பொங்கல் வைப்பது நியாயமா...? சாதி முலாம் பூசப்பட்ட போலி கட்சிகள் நாட்டுக்கு தேவையா...?
ஆனால் மதசார்பற்ற நாட்டில் மதக்கட்சிகள் இருக்கும் போது சாதிக்கட்சிகள் இருந்தால் என்ன என்று நினைக்கலாம்...எதுவுமே அதன் எல்லையைத் தாண்டும்போதுதான் பிரச்சனை வருகிறது ...சீனாக்காரன் லடாக்கில் மூக்கை நுழைத்த மாதிரி...அதுவே சரியாகிவிட்டது ..இது சரிப்படுத்த முடியுயாதா...? என்றால் முடியவே
முடியாது...இந்தியன் அதிலும் தமிழன் அறிவில் முன்னோடி.சட்டத்தின் ஓட்டைகள் அத்தனையும் அவனுக்கு அத்துப்படி...அதுதான் இப்படி.
எனக்கு மாபெரும் குழப்பம்...இந்த அரசியலே எதுவும் புரியமாட்டேங்கிறது மக்கா..உங்களுக்கு ஏதாவது புரிகிறதா..?
பாமக தடை செய்யப்படுமா?
பாமக தடை செய்யப்பட்டால்...?
அப்படித் தடை செய்யப்பட்டால் அது அந்த கட்சிக்கு
இன்னும் பலமாகுமா...? பலவீனமாகுமா...?
முடிவு தேதி-20/05/2013
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |