ஒரே வான்வெளியில்
இரு வேறு துருவங்கள்
எதிர்கொண்டால்...
மோதிக்கொள்கின்றன
ஆனால்
அன்றைய
அரசியல்வானில்
அதிசயங்கள் நடந்தன..
அறிஞ்சர் அண்ணாவும்
கர்மவீரர் காமராஜரும்
எதிர் அரசியல் செய்தாலும்
எதிரிகள் இல்லை..
அவர்களுக்குள்
உள்ளார்ந்த நட்பு
ஒளிந்திருந்தது...
மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மனமுண்டு
அண்ணா சொன்னதுக்கும்
அர்த்தம் இருந்தது....
அங்கே
பொறாமை இல்லை
பேராசை இல்லை
பொங்கும் கோபம் இல்லை
புண்படுத்தும் சொல் இல்லை
கவிதை தந்த குறள் 35:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
இழுக்கா இயன்றது அறம்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |