google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சூது கவ்வும்-படமும் பதிவர்கள் பார்வையும்

Wednesday, May 15, 2013

சூது கவ்வும்-படமும் பதிவர்கள் பார்வையும்

http://i1.wp.com/www.kollytalk.com/wp-content/uploads/2013/03/Soodhu-Kavvum-First-look_resize_wm.jpg?resize=500%2C185

ஒரு திரைப்படத்தின் தலைவிதியை தீர்மானிப்பதில் வலைப்பதிவர்களுக்கும் பங்கு உண்டு. இன்று ஒரு படம் வெளிவந்ததும் பதிவர்களின் விமர்சனம் படித்து விட்டுப் படம் பார்க்கலாமா? வேண்டாமா? என்று  தீர்மானிக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.


நாளிதழ்கள் வார இதழ்கள் விமர்சனங்கள் எழுதி படம் பார்க்க போகும் போது சில படங்கள் தியேட்டரை விட்டு ஓடிவிடுகின்ற நிலை ஆனால் பதிவர்கள் விமர்சனம் அப்படியல்ல விமர்சனம் எழுதுவதால் பதிவர்களுக்கு எந்த வருமானமும் கிடையாது ஆனாலும் அவர்கள் எழுதும் வேகம் அளவிடமுடியாது.ஒரு படத்தின் முதல் காட்சி  தியட்டரில் முடிந்த  அடுத்தக் கணமே வலைப்பதிவுகளில் வெளிவருகிறது...




முன்பெல்லாம்  படங்கள் வெளிவரும்போது சினிமா நிருபர்கள் என்று ஒரு கூட்டத்தைப் படம் தயாரித்தவர்கள் முக்கிய நடிகர்கள் ஏதேனும் பரிசளித்துக் குஷிப்படுத்துவார்கள் ..அப்படி மொக்கை படங்கள்கூட ஆஹா..ஓகோ என்று எழுதவைப்பார்கள் ..இப்போதெல்லாம் அந்த நிலை இல்லை இன்றைய வலைப்பதிவர்களின் விமர்சனங்கள் அதிகம் விரும்பப்படக்காரணம் அவர்கள் நேர்மை...அவர்களின்  அரிச்சந்திரத்தனம் ...
ஒரு அறுவை படத்தை அருமை என்று எழுதி...அதையும் பதிவு வாசிகள் படித்துவிட்டுப் படம் பார்த்தால் அவருடைய வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிவிடும்..அந்த பதிவரின் அடுத்தப் பதிவுகள் அவரே எழுதி அவரே படிக்க வேண்டிய நிலையாகிவிடும்... 


என் இனிய வலைத்தமிழ் மக்களே..! என்று ஆரம்பிக்கும் உண்மைத்தமிழன் ஆறு நாள் கழித்துதான் விமர்சனம்  எழுதினாலும் "இனி தமிழ்ச் சினிமா இயக்குநர்களின் பாடு பெரிதும் திண்டாட்டம்தான்.. எந்த மாதிரி படமெடுத்தால் ஓடும் என்பதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது. அது முற்றிலும் புதுமையாக இருந்தாக வேண்டும்....." என்று சூது கவ்வும் படத்தின் வெற்றிக்கு புதுமையே காரணம் ( பழைய பெருசுகளுக்குப் போதாத காலம்) என்று சொல்லாமல் சொல்கிறார்.
சினிமா விமர்சன பதிவர்களின் விடாக்கண்டன் கேபிள் சங்கர் ஒரே வரியில் நச்சுனு அடிக்கிறார்...."மொத்த தமிழ் சினிமா உலகும் கூர்ந்துக் கவனித்துக் கொண்டிருக்கும் படம்" என்று சூளுரைக்கிறார்.

அடுத்து விமர்சன பதிவர்களில் ஜித்தன் ...மாயாவி என்று அழைக்கப்படும் அட்ரா....சக்க சி.பி.செந்தில்குமார்..இவருடை பதிவு எழுதும் வேகமும் விவேகமும் தீர்க்கமான பார்வையும் ஆச்சரியமானது....வசனங்களை அக்குவேறு ஆணிவேராக அலசி வரிவரியாகப் புட்டுவைப்பார்...  

இவரது விமர்சனம் படித்து முடித்துவிட்டால்..சில நேரங்களில் படத்துக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது ...அந்த படத்தையே பார்த்த நிறைவு தரும் நிறைய விமர்சன வரிகள்  அரசியல் நையாண்டித்தனங்களோடு இருக்கும் "நாட்டைக்காப்பாத்த வேண்டிய பெரிய பெரிய தலைவர்களுக்கே இப்பவெல்லாம் கொள்கை இருப்பதில்லை..." என்றுதான் சூது கவ்வும் பட விமர்சனத்தை ஆரம்பிக்கிறார்.  
கருந்தேள் எழுதயுள்ள விமர்சனத்தில் அவரது பங்களிப்பு இந்தப் படத்தில் உள்ளதைச் சிறப்பாக சொல்லியுள்ளார்


ஆதி தாமிரா தனது புலம்பல்கள் பக்கத்தில் இயக்குனர்  நலன் குமாரசாமியை கைகுலுக்கிவரவேற்கிறார்.வீடு திரும்பல் மோகன்குமார் "சூது கவ்வும் - புதியவர்களின் வரவேற்கத்தக்க முயற்சி ! அதிக எதிர்பார்ப்பின்றி ஒரு முறை பாருங்கள் !" என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

அருமை அண்ணன் ஆரூர் மூனா செந்தில் "லாஜிக் பார்க்காமல் படத்தை பார்த்தால் சிறந்த எண்டர்டெயினர் படம் இது." என்று பொட்டில் அடித்தது போல் சொல்லி முடிக்கிறார்.கில்லி+மங்கத்தா= சூது கவ்வும்...என்று முடிக்கிறார் சக்கரக்கட்டி

இன்னும் நிறையச் சினிமா விமர்சனப்பதிவர்கள் இருக்கிறார்கள் அனைவரையும் எழுத நினைத்தால் பல நாட்களாகும்...நீங்கள் படிப்பதற்கு...எனவே முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன் ..விடுபட்டவர்கள் மன்னிக்கவும்

அதுசரி...அண்ணேன் இது என்ன போங்கா இருக்கு இப்படி அடுத்தவங்க விமர்சனங்களை சுட்டு போட்டு விட்டு...இது நல்லாயில்ல பார்த்துக்குங்க ..அப்புறம் அவுங்க யாராச்சும் புகார் படிக்கப் போறாங்க 
அடேய்..தம்பி அறிவுச்செல்வா..  இந்தப் படத்துக்கு நான் விமர்சனம் எழுதுவது பூக்கடைக்கு விளம்பரம் செய்வது போன்றதுடா..தம்பி அதிலும் நான் பதிவு உலகுக்கு புதுசுடா தம்பி..இப்படி பூவோடு சேர்ந்து நாறும் மனம் வீசட்டுமேனுதான் பெரிய பதிவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்த்தேன்..இது அவர்களுக்கு பெருமைதான் என்று நினைக்கிறேன் (ஏதேனும் தவறு என்றால் பதிவு நண்பர்கள் மன்னிக்கவும்) மேலும்  நான் நேற்றுதான் படம் பார்த்தேன் (ஆமை வேகம்...?) ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் இப்படி...இது என் விமர்சனம் மாதிரி. ...?(விமர்சனம் அல்ல)

இப்படத்தின் திரைக்கதையே மிகப்பெரிய சக்தியாக...
கதாநாயகன் அந்தஸ்த்தில் உள்ளது...கண்களை மூடிக்கொண்டே படம் பார்க்கலாம் அதேநேரத்தில் காட்சியமைப்புகள் இன்னொரு கதாநாயகனாக ..காதுகளை அடைத்துக்கொண்டும் படம் பார்க்கலாம் 

http://www.bharatmoms.com/uploads/Image/Vijay-Sethupathi-Soodhu-Kavvum-movie-Photos-film-pictures-gallery-wallpapers-reviews-releasing-theaters-chennai-shows-songs-mp3-thambaram-kerala-malaysia-theatres-9.jpg

படம் முடிந்து  வீட்டுக்கு போக மனமில்லை..நிறைய வசனங்கள் நினைத்து நினைத்துச் சிரிப்பு வருகிறது ...நிறைய காட்சிகளும் அப்படியே...எதைச் சொல்வது...? படா கில்லாடி போலிஸ் அதிகாரி பிரம்மா டூப்ளிகேட் ரிவால்வாரை தன் பின்புறம் சொருகும்போது வெடித்து மருத்துவமனையில் கிடப்பதையா...? படம் ஆரம்பத்தில் தாஸ்(விஜய் சேதுபதி) தனியாளாக ஒரு பெண்ணைக் காரில் கடத்த ..கார் மக்கர் செய்து..அந்த பெண் இறங்கிவந்து அவரது தலைமுடியைப் பிடித்து அடிக்கும் காட்சியையா...? கடத்தல் பணம் ஹெலிகாப்டரில் பறப்பதையா...? மொள்ள மாரி மகன் அருமைப்பிரகாசம் படா அமைச்சராகவும் நேர்மையான அப்பா அமைச்சர் ஞானோதயம் குப்புற விழுவதையுமா...?அல்லது முடிச்சவிக்கி முதலமைச்சராக நடித்துள்ள ராதாரவியின்  யதார்த்தமான உரையாடல்களா..?



இயக்குனர் நலன் குமாரசாமி தமிழ் சினிமாவின் அத்தனை (தலை)விதிகளையும் தகர்த்து  எறிந்துவிட்டு..அடுத்து என்ன நடக்கும் என்று படம் பார்ப்பவர்களை தீர்மானிக்க முடியாமல் திக்கு முக்காட செய்யும் திரைக்கதையும் அதே நேரத்தில் கவர்ச்சியையும் சஞ்சிதா ஷெட்டி மூலம் விரசமின்றிக் காட்டி..சினிமாவை அறுசுவை உணவாகப் படைத்துள்ளார்...மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும்....
    

http://chennaionline.com/images/articles/February2013/93a91b5b-7c4b-438b-bc5c-2907ee7b408aOtherImage.jpg



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1