இன்றைய
ஆன்மீக உலகின்
புனிதர்களே.........
உங்கள் மதங்களுக்குள் ஏன்
மதவெறிச்சண்டை வருகிறது...?
வெடிகுண்டுகள் வெடிக்கிறன..?)
இன்றைய
வள்ளல்களே...
பஞ்சத்தில் கஞ்சி தொட்டி
சுனாமி வந்தால்
சோற்றுப் பொட்டலம்
கோடையில் மோர் பந்தல்
திருவிழாவில் அன்னதானம்
அட..டா.என்ன வள்ளல்தனம்..?
இன்றைய
சமுதாய உலகில்
சத்தியவான்களே....
சாதிச் சண்டைகள் ஏன்...?
சமத்துவப் புரங்கள் ஏன்...?
சாதிச் சங்கங்கள் ஏன்...?
கயமைத்தனம் கொண்டவர்
கடவுள் பிரதிநிதியா...?
சாதீ மூட்டியவர்
சமுதாயத்தின் மருத்துவரா...?
அறக்கட்டளைகள் இங்கே
கருப்பு பணத்துக்கு
வெள்ளையடிக்கவா.. ?
அன்று அறவழியில்
போனவர்கள்
பல்லக்கில் போனார்கள்
இன்று புறவழியில்
போகின்றவர்கள்...
பல்லக்கில் போகிறார்கள்
அட..போங்க
நியாயன்மார்களே
கவிதை தந்த குறள் 37:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
***************************************************************************
இது சிரிக்க ..............................................
****************************************************************************
இது சிரிக்க ..............................................
****************************************************************************
நன்றி-கணினி விஜெய்,முகநூல்
"டாக்டர், என் பொண்டாட்டி நைட்டு தூங்கவே மாட்டேங்குறா. முழிச்சு முழிச்சு பார்த்துக்கிட்டிருக்கா டாக்டர்"
"எப்போலேந்து இப்படி இருக்கு?"
"எங்க வீட்டுக்கு அவ தங்கச்சி வந்ததிலேந்து டாக்டர்"
"எப்போலேந்து இப்படி இருக்கு?"
"எங்க வீட்டுக்கு அவ தங்கச்சி வந்ததிலேந்து டாக்டர்"
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |