வள்ளலாய்
வாழ்ந்தவர்களுக்கு
மரணம் கிடையாது
மறைந்தாலும்
அவர்கள் புகழ்
மறைவதில்லை...
அடுத்தவர்களை
சிரிக்க வைப்பதும்
அறவழியில் ஒன்றுதான்
கலைவாணர்-
நடித்தும் சிரிக்க வைப்பார்
கொடுத்தும் சிரிக்க வைப்பார்
அன்று அவரிடம்
உதவிட கேட்டவருக்கு
அவரதுப் பணப்பையிலிருந்து
பணம் எடுத்துக்கொடுக்க
உதவியாளரிடம் சொன்னார்
உதவியாளரோ
மொத்தப்பனத்திலிருந்து
ஒரு நோட்டை எடுத்துவந்தார்
"அட..தரித்திரத்துக்கு
துணை போனவனே..
அத்தனையும் அவருக்கு
அள்ளிக்கொடு "என்று
அனைவரையும் சிரிக்க
அவரும் தானம் செய்தார்
கலைவாணர்-
தானம் செய்யாத
நாட்களே இல்லை
தானம் செய்வதில்
நிதானம் இல்லாதவர்
அவரது
வரவு-செலவு
கணக்குப் பார்த்த
வருவாய் அதிகாரியோ..
வாயைப் பிளந்தார்
"என்னையா....இது
எல்லாச் செலவும்
தர்மம் என்று இருக்கு...?"
அய்யம் கொண்ட அவரோ
அந்த வள்ளலிடம் போனார்..
தான் யார் என்று
அறிமுகம் செய்யாமலே...
அவரிடம் தானம் கேட்டார்
அவர் மகளுக்குத் திருமண உதவி
அந்த வள்ளலோ அள்ளிக்கொடுத்தார்
அந்தக் காலத்திலேயே ஆயிரம் ரூபாய்.....
அரண்டு போன அதிகாரியோ
அவரிடம் கேட்டார்...
"அய்யா....கலைவாணரே
உந்தன் பேரு என்ன
கிருஷ்ணனா...? கர்ணனா...?"
அளவில்லாது
அவர் செய்த தானமே
அவருக்கு வந்த
அவதூறு களங்கத்தை
அறுத்தெறிந்தது...
இன்றும் அவர் புகழ்
நிலைத்து நிற்கிறது....
கவிதை தந்த குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்கலைஞர் உரை:
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
thanks for source...the book-sirippu doctor by muthuraman
*******************************************************************************
thanks-YouTube-by easwar gopalan
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |